எம். வி. முருகப்பன்
எம். வி. முருகப்பன் (M V Murugappan) (7 சனவரி 1936- 19 செப்டம்பர் 2017[1]) சென்னை முருகப்பா குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் கார்போரண்டம் யுனிவர்சல் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றவர். இவர் முருகப்பா குழுமத்தை நிறுவிய திவான் பகதூர் ஏம். எம். முருகப்ப செட்டியாரின் வாரிசான ஏ. எம். எம். வெள்ளையன் செட்டியாரின் மகன் ஆவார்.
துவக்கக்கால வாழ்கை
தொகுஇவர் இன்றைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூரில் 1936 ஆம் ஆண்டு சனவரி 7 ஆம் தேதி பிறந்தார். இங்கிலாந்தின், பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில், பிஎஸ்இ கட்டடப் பொறியியலில் பட்டம் பெற்றார்.[2] கல்லூரி காலங்களில் விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வார். பல்கலைக் கழக அளவில் பல பரிசுகளை பெற்றவர்.
வாழ்கை
தொகுஇங்கிலாந்தில் படிப்பை முடித்து திரும்பிய சில ஆண்டுகளில் கட்டுமான துறையில் கவனம் செலுத்தினார். பின்னர் கொரமண்டல் இன்ஜினீயரிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பொறுப்பு ஏற்றார். கொரமண்டல் ப்ரோடரி நிறுவனத்தை உருவாக்கியதுடன், அமில தடுப்பு சிமெண்ட், பிளாஸ்டிக் கெமிக்கல் உதிரிபாகங்களை உற்பத்தி செய்வதில் முக்கிய பங்காற்றினார். இந்த துறையில் இந்தியாவின் முக்கியமான நிறுவனமாக இதை உருவாக்கினார்.
1979 ஆம் ஆண்டில் கார்போரண்டம் யுனிவர்சல் (குமி) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றார். இவரது தலைமையில் இந்த நிறுவனம் இந்தியாவின் முக முக்கிய பேரிங் நிறுவனமாக உருவெடுத்தது. தொழில்துறைக்குத் தேவையான செராமிக் பொருட்களைத் தயாரிக்க தொடங்கியது. நீர்மின் உற்பத்தி மற்றும் அனல் மின் உற்பத்திக்கான முதலீடுகளையும் மேற்கொண்டவர். 1995 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டுவரை நிறுவனத்தின் தலைவராக இருந்து வழி நடத்தினார். மிதிவண்டி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள டி ஐ நிறுவன வளர்ச்சியிலும் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.[3]
வகித்த பொறுப்புகள்
தொகு- இந்திய தொழில் வர்த்தக சபையின் நிர்வாகக் குழு உறுப்பினர்.
- சென்னை தொழில் மற்றும் வர்த்தக சபையின் தலைவர் (1987-88).
- சென்னை கிரிக்கெட் கிளப்பின் தலைவர் (1978-79).
- சென்னை மிட் டவுன் ரோட்டரி கிளப் தலைவர் ( 1976-77).
- இந்தியா -ஆஸ்திரேலியா இணைந்த தொழில் குழுவின் தலைவர் (1992)
- ஏஎம்எம் பவுண்டேஷன் நிறுவனத்தின் காப்பாளர்,
- முருகப்பா குழும பள்ளிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் நான்கு மருத்துவமனைகளின் நிர்வாகி.
- லாப நோக்கமற்ற ஆராய்ச்சி நிறுவனமான ஏஎம்எம் முருகப்ப செட்டியார் ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக குழுவின் தலைவர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "பிரபல தொழிலதிபர் எம்.வி. முருகப்பன் மறைவு". செய்தி. தினமணி. 21 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 21 செப்டம்பர் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "Former chairman of Carborundum Universal M V Murugappan passes away". News. http://www.thehindubusinessline.com. பார்க்கப்பட்ட நாள் 21 செப்டம்பர் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); External link in
(help)|publisher=
- ↑ "தொழில் துறையின் தீர்க்கதரிசி எம்.வி.முருகப்பன் மறைவு". செய்தி. தி இந்து. 21 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 21 செப்டம்பர் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)