எரால்ட் எலிங்கம்

பிரித்தானிய வேதியியலாளர்

எரால்ட் யோகன் தாமசு எலிங்கம், (Harold Johann Thomas Ellingham) (1897-1975) ஒரு பிரித்தானிய இயற்பியல் வேதியியலாளர் ஆவார். இவர் அவரது எலிங்கம் வரைபடங்களுக்காக நன்கு அறியப்பட்டவர் ஆவார். எலிங்கம் வரைபடமானது உலோகங்களைப் பிரித்தெடுக்கும் உலோகவியலில் பெரிய அளவிலான தகவல்களை சுருக்கமாகக் கூறும் வரைபடமாகத் திகழ்கிறது.[1]

எலிங்கம் 1914 முதல் 1916 வரை அறிவியலுக்கான இராயல் கல்லூரியில் பயின்றார். [note 1] அதே கல்லூரியில் 1919 ஆம் ஆண்டிலிருந்து செயல்முறை விளக்கம் தருபவராகவும், 1934 ஆம் ஆண்டில் இயற்பியல் வேதியியல் துறையில் வாசகராகவும் பணிபுரிந்தார். 1940 முதல் 1944 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் அறிவியலுக்கான இராயல் கல்லூரியின் செயலாளராகவும், 1944 முதல் 1963 ஆம் ஆண்டு வரை வேதியியலுக்கான இராயல் நிறுவனத்தின் செயலாளராகவும் இருந்தார். இவர் 1949 ஆம் ஆண்டில் இம்பீரியல் கல்லூரியில் கெளரவ பேராசிரியராகவும், 1962 ஆம் ஆண்டில் பிரித்தானிய பேரரசால் வழங்கப்படும் பெருமைக்குரிய கெளரவப் பட்டமான ஓபிஇ இவருக்கு வழங்கப்பட்டது.[2]

எலிங்கம் தனது பெயரிலான வேதிவினைகளில் நடக்கும் கிப்சின் ஆற்றல் மாற்றத்தை வெப்பநிலைக்கெதிராக குறித்து வரையப்பட்ட வரைபடங்களுக்காகநன்கு அறியப்பட்டவர் ஆவார்.

2xy M + O2 is in equilibrium with 2y MxOy

ஒரு மோல் ஆக்சிசன் வினைப்படுத்துவதற்கான வெப்ப இயக்கவியல் சார்புகளை பொதுமைப்படுத்துவதன் மூலம் அதே வரைபடத்தைப் பயன்படுத்தி எலிங்கம் பல்வேறுபட்ட ஆக்சைடுகளின் வெப்பநிலைக்கேற்ற நிலைத்தன்மையை ஒப்பிடுவதற்கும் முடிந்தது. குறிப்பாக, வெப்பநிலை அதிகரிக்க, அதிகரிக்க கார்பன் மிகவும் வலிமையான ஒடுக்கியாகச் செயல்படுவதை வரைபடம் மூலமாக காட்ட முடிந்தது.[note 2] கார்பன் அல்லது கார்பனோராக்சைடு ஆகயவற்றைக் கொண்டு உலோகங்களை ஒடுக்கம் செய்வது தொழிற்துறையில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். (உதாரணம்: ஊது உலையைப் பயன்படுத்தி இரும்பினைத் தயாரித்தல்) மேலும், எலிங்கம் வரைபடங்கள் ஒவ்வொரு உலோகத்திற்கும் எந்த மிகக் குறைந்த வெப்பநிலையில் ஒடுக்க வினைகள் நிகழ்கின்றன என்பதைக் காட்டுகின்றன.[3]

குறிப்புகள் மற்றும் மேற்கோள்கள் தொகு

குறிப்புகள் தொகு

  1. Although the Royal College of Science had been formally merged with the Royal School of Mines and the City and Guilds Central Technical College in 1907 to form the Imperial College of Science and Technology, it retained an independent identity as a constituent college until 2002.
  2. This phenomenon was known before Ellingham's time, but Ellingham demonstrated it more clearly. The reason for the increase in reducing power with temperature is the positive entropy change for the reaction 2 C + O2   2 CO, as opposed to the negative entropy changes for the formation of solid metal oxides.[3]

மேற்கோள்கள் தொகு

  1. Ellingham, H. J. T. (1944), "Reducibility of oxides and sulphides in metallurgical processes.", J. Soc. Chem. Ind. (London), p. 125 {{citation}}: Missing or empty |url= (help)
  2. ELLINGHAM, Harold Johann Thomas (1897-1975), AIM25, archived from the original on 2012-03-15, பார்க்கப்பட்ட நாள் 2010-12-31.
  3. 3.0 3.1 Norman Neill Greenwood and Alan Earnshaw. "Chemistry of the elements". Pergamon Press. பார்க்கப்பட்ட நாள் 15 செப்டம்பர் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரால்ட்_எலிங்கம்&oldid=3928203" இலிருந்து மீள்விக்கப்பட்டது