எரிக் இராமநாதன்

அமெரிக்கத் தூதர்

எரிக் டக்ளஸ் ராமநாதன் (Erik Ramanathan)[1] அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞரும், தொண்டுள்ளம் படைத்தவரும், அரசியல் நிதி சேகரிப்பாளரும் ஆவார். இவர் அமெரிக்காவின் 46வது ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவரான ஜோ பைடனின் கீழ் சுவீடனுக்கான அமெரிக்கத் தூதராகப் பணியாற்றுகிறார்.

எரிக் இராமநாதன்
[[அமெரிக்க ஐக்கிய நாடுகள் Ambassador to Sweden|அமெரிக்க ஐக்கிய நாடுகள் Ambassador to Sweden]]
பதவியில் உள்ளார்
பதவியில்
சனவரி 20, 2022
குடியரசுத் தலைவர்ஜோ பைடன்
முன்னையவர்கென் கௌரி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிமக்களாட்சிக் கட்சி
கல்விஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் (இளங்கலை)
ஆர்வர்டு பல்கலைக்கழகம் (சட்டவியல்)

கல்வி

தொகு

இவர் 1991 இல் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் நடத்தை அறிவியல் மற்றும் உயிரியலில் இளங்கலைப் பட்டத்தையும், 1996 இல் ஆர்வர்டு சட்டப் பள்ளியில் சட்டவியலில் முனைவர் பட்டமும் பெற்றார். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் நிறுவனத்தில் நங்கை, நம்பி, ஈரர், திருனர் ஆர்வலர்கள் மத்தியில் இவர் ஒரு தலைவராக இருந்தார்.[2]

தொழில்

தொகு

1996 முதல் 2000 வரை, நியூயார்க் நகரில் உள்ள பிரோசுகவர் ரோசு என்ற சட்ட நிறுவனத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 2000 முதல் 2006 வரை, இவர் இம்க்ளோன் சிஸ்டம்ஸ் என்ற உயிர் மருந்தியல் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர், பொது ஆலோசகராக இருந்தார், பின்னர் இது எலி லில்லி நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது. 2001 முதல் 2010 வரை, குடிவரவு சமத்துவத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவராக இருந்தார். இவர் பராக் ஒபாமா வின் 2012 குடியரசுத்தலைவர் தேர்தல் பிரச்சாரத்தின் அறங்காவலராகவும் இருந்தார். 2009 முதல் 2012 வரை, ஆர்வர்டு சட்டப் பள்ளி மையத்தின் சட்டத் தொழிலுக்கான நிர்வாக இயக்குநராகவும், 2013 [3] 2015 வரை மூத்த சக ஊழியராகவும் இருந்தார். அமெரிக்க அரசியல்வாதியான சேத் மோல்டனின் 2016 மற்றும் 2018 மறுதேர்தல் பிரச்சாரங்களுக்கான நிதி அமைச்சரவையின் இணைத் தலைவராக இருந்தார். இவர் ஜோ பைடனின் 2020 குடியரசுத்தலைவர் தேர்தல் பிரசாரத்தின்போது தேசிய நிதிக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்[4][5][6]

சுவீடனுக்கான தூதர்

தொகு

செப்டம்பர் 22, 2021 அன்று, சுவீடனுக்கான அடுத்த அமெரிக்கத் தூதராக ஜோ பிடன் அறிவித்தார்.[4] On October 4, 2021, his nomination was sent to the Senate.[7][8][9] [10] இவரது தூதரகம் உருசிய-உக்ரேனியப் போர் மற்றும் வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பில் உறுப்பினராக சுவீடனின் பங்கு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.[2]

சொந்த வாழ்க்கை

தொகு

இவர் கிர்க்லாண்ட் & எல்லிஸின் பாஸ்டன் அலுவலகத்தில் பங்குதாரரான இரணேஷ் இராமநாதன் என்பவரை மணந்தார். [11] இவர்கள் இருவரும் பல்கலைக்கழகத்தில் கரிம வேதியியல் படிக்கும் போது சந்தித்தனர். [2] இவர் தனது கூட்டாளியின் கடைசி பெயரை ஏற்றுக்கொண்டார். பாஸ்டனை தளமாகக் கொண்ட இந்த ஓரினச்சேர்க்கை தம்பதிகளுக்கு கிறிஸ்டோபர் என்ற மகன் 2005 இல் வாடகைத் தாய் மூலம் பிறந்தார்.[11] அவர் 2022 இல் ஸ்டாக்ஹோமில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார்.[2]

சான்றுகள்

தொகு
  1. Ministry of Foreign Affairs, Protocol Department (2022). Stockholm Diplomatic List (PDF). Archived from the original (PDF) on 2022-07-31.
  2. 2.0 2.1 2.2 2.3 Torén Björling, Sanna (4 July 2022). "USA:s ambassadör i Sverige: Oroad över utvecklingen i USA". Dagens Nyheter. https://www.dn.se/varlden/usas-ambassador-i-sverige-oroad-over-utvecklingen-i-usa/. 
  3. "Erik Ramanathan". Revolving Door Project (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் September 22, 2021.
  4. 4.0 4.1 "President Biden Announces Key Nominations". The White House (in அமெரிக்க ஆங்கிலம்). September 22, 2021. பார்க்கப்பட்ட நாள் September 22, 2021.
  5. "Joe Biden's presidential campaign is missing only one thing: Joe Biden". the Guardian (in ஆங்கிலம்). October 9, 2015. பார்க்கப்பட்ட நாள் September 22, 2021.
  6. "Biden taps two fundraisers, ex state rep as ambassadors" (in en-US). Washington Post. https://www.washingtonpost.com/politics/biden-taps-two-fundraisers-ex-state-rep-as-ambassadors/2021/09/22/647aadc4-1beb-11ec-bea8-308ea134594f_story.html. 
  7. The White House(October 4, 2021). "Nominations Sent to the Senate". செய்திக் குறிப்பு.   இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
  8. "Business Meeting". Washington, D.C.: United States Senate Committee on Foreign Relations. December 15, 2021. பார்க்கப்பட்ட நாள் January 12, 2022.
  9. "PN1226 - Nomination of Erik D. Ramanathan for Department of State, 117th Congress (2021-2022)". www.congress.gov. December 18, 2021. பார்க்கப்பட்ட நாள் January 5, 2022.
  10. USAmbSweden (January 20, 2022). "It was a great honor to present my credentials. I'm ready to get to work with the great team @USEmbSweden representing the #US here in #Sweden as Ambassador!" (Tweet). பார்க்கப்பட்ட நாள் January 20, 2022.
  11. 11.0 11.1 "No, Biden's Nominee for Ambassador to Sweden Erik Ramanathan is Not an Indian American But is Married to One". American Kahani (in அமெரிக்க ஆங்கிலம்). September 24, 2021. பார்க்கப்பட்ட நாள் February 22, 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிக்_இராமநாதன்&oldid=3601536" இலிருந்து மீள்விக்கப்பட்டது