எரியும் முட்செடி
எரியும் முட்செடி, என்பது யாத்திராகமம் நூலில் காணப்படும் ஒரு புதுமையாகும், யாவே கடவுள் மோசேயை, இஸ்ரவேலரின் எகிப்து அடிமை வாழ்விலிருந்து அவர்களை மீட்பதற்கான தலைவராக அழைக்கப் பயன்படுத்தினார்.
யாத்திராகமம் நூலில் உள்ளவை
தொகுமோசே எகிப்தை விட்டு தப்பிவந்து எத்திரோவிடம் வாழ்ந்தபோது, ஆடுகளை மேய்த்து கொண்டிருக்கும் போது மலைமீது எரியும் முட்செடி ஒன்றை கண்டு மரம் மரம் வெந்துபோகமல் இருக்க கண்டு அதனருகே போனார்.[1] அப்போது கடவுளின் ஆவி முட்செடியின் நடுவிலிருந்து மோசேயை அழைத்து, அவர் நிற்பது புனித பூமி என்றும்,மோசேயின் பாதணிகளை அகற்றுமாறும் கட்டளையிட்டு, தன்னை "நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன்" என அறிமுகப்படுத்தினார்.[2] பின்பு கடவுள் மோசேயை எகிப்துக்கு போய் அரசனிடம் பேசி இஸ்ரவேலரை விடுவித்து அவர்களை வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு வழிநடத்துமாறு கட்டளையிட்டார்.
வணக்கத் தளம்
தொகுஇந்த சம்பவம் நடந்ததாக கருதப்படும் இடத்தில் இப்போது ஒரு ஆலயம் அமைந்துள்ளது. இங்கு இப்போது காணப்படும் முட்செடி மோசேக்கு கடவுள் தோன்றிய முட்செடியின் வழிவருவது என்பது நம்பிக்கையாகும். மோசேக்கு கடவுள் தோன்றிய மரம் இறந்துவிட்டது.
உசாத்துணை
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Icon of the Mother of God "the Unburnt Bush" திருவோவியம் and Synaxarion of the feast
- The Burning Bush History of the use of the burning bush symbol among Reformed churches