எருக்கூர் தூய சிந்தாத்திரை மாதா திருத்தலம்

தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஒரு கிறித்தவ திருத்தலம்

புனித சிந்தாத்திரை மாதா திருக்கோவில் இந்தியாவில், தமிழ்நாட்டில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் சீர்காழியிலிருந்து சிதம்பரம் செல்லும் (வேளாங்கண்ணி, மயிலாடுதுறை முதல் பாண்டிச்சேரி (அ) புதுச்சேரி, சென்னை) தேசிய நெடுஞ்சாலையின் 6-வது கீ.மீ இல் உள்ள ஊரான எருக்கூரில் உள்ள ஒரு கத்தோலிக்கக் கோவில்.[1]

எருக்கூர் தூய சிந்தாத்திரை மாதா திருத்தலம்
11°17′09″N 79°43′07″E / 11.285785°N 79.718749°E / 11.285785; 79.718749
அமைவிடம்எருக்கூர், மயிலாடுதுறை, தமிழ்நாடு
நாடு இந்தியா
சமயப் பிரிவுகத்தோலிக்கம்
Architecture
செயல்நிலைபயன்பாட்டில் உள்ளது
எருக்கூர் புனித சிந்தாத்திரை மாதா

திருத்தல வரலாறு

தொகு

கி.பி 1534 -யில் வங்கக்கடலின் கிழக்கு கடற்கரையில் உள்ள புலிகாட், சதராஸ், குன்னிமேடு, கல்பட், புதுச்சேரி, தேவனாம்பட்டினம், நாகூர், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் போர்த்துக்கீசிய வணிபர்கள் பண்டகசாலைகளையும், அதில் உள்ள சிறிய தேவாலயங்களையும் கட்டினர். தங்களுடைய ஆன்மிகத் தேவைகளுக்காகவும், மறைபரப்பு பணிகளுக்காகவும், போர்த்துக்கீசிய குருக்களையும் அழைத்து வந்தனர்.

கி.பி 1550 களில் காவிரியின் கிளையான கொள்ளிடம் ஆறும், வங்கக்கடலும் கலக்கின்ற இடத்தில் உள்ள தீவான கொலரூன் (கோலேரூன், போர்த்துகீசியர் வைத்த பெயர்), தற்பொழுது கோட்டைமேடு என்று அழைக்கப்படுகின்ற தீவில் பண்டகசாலையும், தேவாலயமும் கட்டினர். இதைச்சுற்றி போர்த்துகீசிய வணிபர்கள், யுரேசியன் மக்கள்,போர்த்துகீசிய குருக்கள், கோவா கிறிஸ்துவர்கள் குடியேறினர்.

இங்குள்ள தேவாலயத்தில் நாசரேத்தூரின் பயண மாதா சுரூபத்தைக் (Our Lady of Travelers of Nazareth) கொண்டு வந்து வழிபட்டனர். இவன்னையின் மூல வடிவம் நாசரேத்தூரில் உள்ள திருக்குடும்ப பேராலயத்தில் (இயேசுவின் தந்தை யோசேப்பு தசுப்பட்டறை வைத்திருந்த இடத்தில்) வலதுபக்கத்தில் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. yitsadmin (2022-06-29). "Our Lady Of Chindhaaththirai Shrine, Erukkur, Tamilnadu, India". Catholic Shrine Basilica (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-25.

வெளி இணைப்புகள்

தொகு