எருசலேம் நாள்
எருசலேம் நாள் (Jerusalem Day; எபிரேயம்: יום ירושלים, Yom Yerushalayim) என்பது இசுரேலின் தேசிய நாளாகும். 1967 யூன் மாதத்தில் இடம் பெற்ற ஆறு நாள் போர் முடிவில் பழைய நகர் இசுரேலியர்களின் கட்டுப்பாட்டில் வந்ததையும் எருசலேமின் மீள் ஒன்றிப்பையும் கொண்டாடும் விழாவாக இது உள்ளது. இந்நாள் அதிகாரபூர்வமாக அரச விழாவாகவும் நினைவு சேவையாகவும் அடையாளமிடப்பட்டது.
எருசலேம் நாள் | |
---|---|
எருசலேம் நாள் 2007, யாபா வீதி | |
அதிகாரப்பூர்வ பெயர் | எபிரேயம்: יום ירושלים (Yom Yerushalayim) |
கடைபிடிப்போர் | இஸ்ரேல் |
வகை | தேசிய |
முக்கியத்துவம் | ஆறு நாள் போர் முடிவில் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் எருசலேம் ஒன்றிணைக்கப்பட்டது. இரண்டாம் கோவில் உரோமரால் கிபி 70 இல் அழிக்கப்பட்ட பின் முதல் தடவையாக எருசலேம் யூதர் கட்டுப்பாட்டுக்கு வந்தது. |
தொடக்கம் | இயர் 28 (எபிரேய நாட்காட்டி) |
நாள் | 28 Iyar |
நிகழ்வு | ஆண்டு |
இசுரேலின் தலைமைக்குரு எருசலேம் நாளை மேற்குச் சுவர் பகுதியில் அணுகுதலை மீளவும் பெற்றுக் கொண்டதை அடையாளப்படுத்தும் ஒரு சிறிய சமய விழாவாக அடையாளப்படுத்தினார்.[1][2]
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Adele Berlin (2011). "Yom Yerushalayim". The Oxford Dictionary of the Jewish Religion. Oxford University Press. p. 803. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-973004-9.
- ↑ "Yom Yerushalayim – Jerusalem Day | Jewish Virtual Library". jewishvirtuallibrary.org. பார்க்கப்பட்ட நாள் 29 September 2016.
வெளி இணைப்புகள்
தொகு- "Overview: Jerusalem Day". பார்க்கப்பட்ட நாள் 27 May 2006.
- Education week 9–13.5 – 43rd Jerusalem Day பரணிடப்பட்டது 2011-07-07 at the வந்தவழி இயந்திரம்
- Jerusalem Day on the official Knesset website
- Hebrew broadcast of the conquering of the Old City, from Voice of Israel Radio, June 7, 1967
- Overview: Yom Yerushalayim (Jerusalem Day) in My Jewish Learning website
- "Jerusalem in International Diplomacy" from the Jerusalem Center for Public Affairs