எருசலேம் மாவட்டம்

இசுரேலின் ஆறு மாவட்டங்களில் ஒன்று

எருசலேம் மாவட்டம் (எபிரேயம்: מחוז ירושלים‎; அரபு மொழி: منطقة اورشليم (القدس)‎) இசுரேல் நாட்டின் ஆறு நிர்வாக மாவட்டங்களில் ஒன்று. மாவட்டத்தின் தலைநகர் எருசலேம் ஆகும். எருசலேம் மாவட்டத்தின் பரப்பளவு 652 கிமீ² ஆகும். மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 10,83,300 இதில் 65.6% யூதர்கள் மற்றும் 32.8% அராபியர்கள் ஆவர்.[1] இசுரேல் நாட்டில் உள்ள அராபியர்களில் 21% மக்கள் எருசலேம் மாவட்டத்தில் வசிக்கின்றனர். இந்த மாவட்டம் மேற்கு எருசலேம் மற்றும் கிழக்கு எருசலேம் பகுதிகளைக் கொண்டுள்ளது.[2] கிழக்கு எருசலேம் பகுதியை சர்வதேச சமூகம் இசுரேல் நாட்டின் பகுதியாக ஏற்றுக்கொள்ளவில்லை.[3]

எருசலேம் மாவட்டம்
இசுரேல் இசுரேல் நாட்டின் மாவட்டம்
- transcription(s)
 • எபிரேயம்מחוז ירושלים
 • அரபுمنطقة اورشليم القدس
நகரங்கள்2
உள்ளூர் சபைகள்3
பிராந்திய சபைகள்1
தலைநகர்எருசலேம்
பரப்பளவு
 • மொத்தம்652 km2 (252 sq mi)
மக்கள்தொகை
 (2016)
 • மொத்தம்10,83,300
ஐஎசுஓ 3166 குறியீடுIL-JM
எருசலேம் நகரில் இருந்து அஸ்தோது நகருக்கு செல்லும் வழித்தடம்.

எருசலேம் மாவட்டத்தின் பெரும்பான்மை அராபியர்கள் பாலஸ்தீனியர்கள். இசுரேல் நாட்டு சட்டத்தின் படி இவர்கள் குடியுரிமை பெற தகுதியுடையவர்கள். ஆனால் இவர்கள் இரட்டை தேர்வு குடியுரிமை பெற முடியாது. சிறுபான்மையினரான இசுரேலிய அராபியர்கள் 1970 களின் பிற்பகுதியிலிருந்து இசுரேலில் குடியேறியுள்ளனர். முக்கியமாக உள்ளூர் மக்களுக்கு சட்ட ஆலோசனை மற்றும் பிற சேவைகளை வழங்குவதற்காக இருந்தனர்.[4] இங்கு யூதரல்லாத மக்களில் 28.3% இஸ்லாம் மதத்தவர்கள், 1.8% கிறிஸ்தவ மதத்தவர்கள் மற்றும் 1.4% மக்கள் மத சார்பற்றவர்கள்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Localities And Population, By Population Group, District, Sub-District And Natural Region" (PDF). Israel census bureau of statistics. 2016.
  2. The Future of the Global Muslim Population, PEW Forum
  3. "Jerusalem: Israeli police hit in Palestinian car attack". பிபிசி. 6 March 2015.
  4. "Localities and Population, by Population Group, District, Sub-District and Natural Region" (PDF). Statistical Abstract of Israel. Israel Central Bureau of Statistics. 2009. Archived from the original (PDF) on 2011-06-10. பார்க்கப்பட்ட நாள் 2011-01-07.
  5. "Localities and Population, by District, Sub-District, Religion and Population Group" (PDF). Statistical Abstract of Israel. Israel Central Bureau of Statistics. 2006. Archived from the original (PDF) on 2007-06-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எருசலேம்_மாவட்டம்&oldid=3586351" இலிருந்து மீள்விக்கப்பட்டது