அஸ்தோது அல்லது அஸ்டோட் (Ashdod; எபிரேயம்: אַשְׁדּוֹד (audio); அரபு மொழி: اشدود‎, إسدود Isdud) என்பது இசுரேலில் ஆறாவது பெரிய நகரமும், அந்நாட்டின் தென் மாவட்டத்திலும், இசுரேலின் நடுநிலக் கடலில் கடற்கரைப்பகுதியில் டெல் அவீவ்வின் வடக்கிற்கும் (32 கிலோமீட்டர்கள் (20 மைல்கள்) தூரத்தில்) அஸ்கெலோனின் தெற்கிற்கும் (20 km (12 mi) தூரத்தில்) இடையே அமைந்துள்ள ஓரு நகராகும். கிழக்கில் எருசலேம் கிழக்கில் 53 km (33 mi) தொலைவில் உள்ளது.

அஸ்தோது
எபிரேயம் transcription(s)
 • ISO 259ʔašdod
அஸ்தோதுக் காட்சி
அஸ்தோதுக் காட்சி
அஸ்தோது-இன் கொடி
கொடி
Official logo of அஸ்தோது
சின்னம்
Countryஇசுரேல்
உருவாக்கம்1956
அரசு
 • வகைநகர் (1968 முதல்)
 • மேயர்யெகில் லசிறி
பரப்பளவு
 • மொத்தம்47,242 dunams (47.242 km2 or 18.240 sq mi)
மக்கள்தொகை (2014)[1]
 • மொத்தம்217,959

அஸ்தோது இசுரேலின் மிகப் பெரிய துறைமுகமாகும். அந்நாட்டின் 60% இறக்குமதி இதனூடாகவே இடம்பெறுகின்றன. இந் நகரம் ஒரு முக்கிய பிராந்திய தொழில்துறை மையமாகவும் உள்ளது.

தற்போதைய அஸ்தோத்தில் பண்டைய இரு இரட்டை நகரங்களை, ஒன்றை நிலத்தின் உட்பகுதியிலும் மற்றயதை கடற்கரையிலுமாக உள்வாங்கிக் கொண்டுள்ளது. ஒன்றுக்கொன்று நெருக்கமான உறவுகளால் இணைக்கப்பட்டிருந்ததுடன் அவற்றின் வரலாற்றில் இரண்டு தனித்தனி கூறுகளைக் கொண்டு இருந்தன.

அஸ்தோதின் முதலாவது ஆவணப்படுத்தப்பட்ட நகர்ப்புற குடியிருப்பு கி.மு. 17 ஆம் நூற்றாண்டின் கானான் கலாச்சாரத்திற்குச் செல்வதால்,[2] இதனை உலகின் மிகவும் பழைய நகரங்களில் ஒன்றாக்கிறது.

அஸ்தோது விவிலியத்தில் 13 தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனுடைய 1956 இற்கு முந்திய வரலாற்றுக் காலத்தில், இந்நகரில் பெலிஸ்தர், இசுரயேலர் குடியேறியதோடு, அலெக்சாண்டரின் வெற்றியை அடுத்து காலனியத்தினர், உரோமர், பைசாந்தியர், அராபியர், சிலுவைப் போர் வீரர்கள், உதுமானிய துருக்கியர் ஆகியோரும் அங்கு இருந்தனர்.[3]

புதிய அஸ்தோது பண்டைய நகரின் அருகேயுள்ள மணற்குன்றுகள் மீது 1956 இல் நிறுவப்பட்டு, 1968 இல் ஒரு நகரமாக இணைத்துக்கொள்ளப்பட்ட இது கிட்டத்தட்ட 60 சதுர கிலோமீட்டர்கள் (23 sq mi) நிலப் பகுதியைக் கொண்டது. இது ஒரு திட்டமிட்ட நகரமாக இருப்பதால், ஒரு பிரதான அபிவிருத்தித் திட்ட விரிவாக்கத்தைத் தொடர்ந்து, மக்கள் தொகை வளர்ச்சியின் மத்தியிலும் குடியிருப்புப் பகுதிகளில் போக்குவரத்து, வளி மாசடைதல் தடுப்பு ஆகிய வசதிகளைச் செய்கிறது.

இசுரேலிய மத்திய புள்ளிவிபரப் பணியகத்தின்படி, அஸ்தோது 2014 இல் 217,959 மக்கள் தொகை 47,242 டூனம்கள் (47.242 கிமி2; 18.240 ச. மைல்) பரப்பளவில் கொண்டிருந்தது.[4]

வரலாறு தொகு

வரலாற்று மக்கள் தொகை
ஆண்டும.தொ.±%
19614,600—    
197240,300+776.1%
198365,700+63.0%
19951,29,800+97.6%
20082,04,300+57.4%
20102,10,600+3.1%
20112,12,300+0.8%

கற் காலம் தொகு

பழைய கற்காலத்தில் அஸ்தோதில் மனித குடியேற்றம் ஆரம்பமாகியது.[2]

வெண்கல, இரும்பு காலங்கள் தொகு

வெண்கல, இரும்பு காலங்களின் அஸ்தோது தற்போதைய நகரின் தெற்கில் டெல் எனுமிடத்தில் அமைந்திருந்தது. 1962, 1972 ஆம் ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலத்தில் ஒன்பது பருவங்களில் தொல்பொருள் ஆய்வாளர்களால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. இம் முயற்சி டேவிட் நோயல் பிரீட்மன்னினாலும் பின்னர் மோசே தோதானாலும் முன்னெடுக்கப்பட்டது.[6][7][8]

எபிரேய விவியத்தில் தொகு

 
அஸ்தோதில் சிம்சோன் சிலை

விவியத்தில் அஸ்தோது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும், அது குறிப்பிடும் சம்பவங்களுடன் தொல்பொருள் கண்டுபிடிப்புக்கள் கிடைக்கவில்லை.

  • 1 சாமுவேல் 6:17 இல் அஸ்தோது பிலித்தீனிய முக்கிய நகராகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உடன்படிக்கைப் பெட்டியை இசுரேலியர்களிடமிருந்து பிலித்தியர்கள் கைப்பற்றியதும், அதனை அஸ்தோது கொண்டு சென்று தாகோனின் கொயிலில் வைத்தனர். அடுத்த நாட் காலை தாகோல் உடன்படிக்கைப் பெட்டிக்கு முன் முகங்குப்புற விழுந்து கிடந்தது. அதனை நிமிர்த்தி வைத்ததும் அது மீண்டும் வீழ்ந்து கிடந்தது. இறுதியில் அது உடைந்துவிட்டது. அஸ்தோது மக்கள் கொப்புளங்களைப் பெறத் தொடங்கியதும்; கொள்ளை நோய் அப்பகுதியைத் தாக்கியது (1 சாமுவேல் 6:5).[9]
  • அரசன் யூதாவின் ஊசியா கி.மு 815 இன் பின இந்நகரைக் கைப்பற்றினார். 2 குறிப்பேடு (26:6), செக்கரியா (நூல்) (9:6) ஆகியன இது பற்றியும், யூதர்களின் வீழ்ச்சி பற்றியும் குறிப்பிடுகிறது.
  • நெகேமியா (நூல்) (நெகேமியா 13:23–24), 5 ஆம் நூற்றாண்டு எருசலேம் வாசிகள் சிலர் அஸ்தோது பெண்களை திருமணம் புரிந்தனர் என்கிறது. இவர்களுக்குப் பிறந்த அரைவாசிக் குழந்தைகள் எபிரேயத்தை அறியாது இருந்தனர் என்றும் பதிலாக "அஸ்தோது மொழி" பேசினர் எனவும் குறிப்பிடுகிறது.

உசாத்துணை தொகு

  1. 2014 populations Israel Central Bureau of Statistics
  2. 2.0 2.1 Moshe Dothan (1990) (in Hebrew). Ashdod – Seven levels of excavations. Israel: Society for the Protection of Nature in Israel, Ashdod branch. பக். 91. ULI Sysno. 005093624. 
  3. O. Kolani; B. Raanan; M. Brosh; S. Pipano (1990) (in Hebrew). Events calendar in Israel and Ashdod. Israel: Society for the Protection of Nature in Israel, Ashdod branch. பக். 79. ULI Sysno. 005093624. 
  4. "Local Authorities in Israel 2005, Publication #1295 – Municipality Profiles – Ashdod" (PDF) (in ஹீப்ரூ). Israel Central Bureau of Statistics. Archived from the original (PDF) on 29 May 2008. பார்க்கப்பட்ட நாள் April 14, 2008.
  5. "Statistical Abstract of Israel 2012 – No. 63 Subject 2 – Table No. 15". .cbs.gov.il. Archived from the original on 2013-10-20. பார்க்கப்பட்ட நாள் 2013-08-08.
  6. M. Dothan and David Noel Freedman, Ashdod I, The First Season of Excavations 1962, Atiqot, vol. 7, Israel Antiquities Authority, 1967
  7. David Noel Freedman, The Second Season at Ancient Ashdod, The Biblical Archaeologist, vol. 26, no. 4, pp. 134–139, 1963
  8. Moshe Dothan, Ashdod VI: The Excavations of Areas H and K (1968–1969) (Iaa Reports) (v. 6), Israel Antiquities Authority, 2005, ISBN 965-406-178-3
  9. Harris JC (2006). "The plague of Ashdod". Arch. Gen. Psychiatry 63 (3): 244–5. doi:10.1001/archpsyc.63.3.244. பப்மெட்:16520427. http://archpsyc.ama-assn.org/cgi/content/extract/63/3/244. பார்த்த நாள்: July 22, 2009. 

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அஸ்தோது
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்தோது&oldid=3912277" இலிருந்து மீள்விக்கப்பட்டது