எருமையூர்

சங்ககால ஊர்

எருமையூர் ‘எருமை இருந்தோட்டி’ எனச் சங்கப்பாடல்களில் போற்றப்படுகிறது. இது பிற்காலத்தில் மைசூர் என்று வடமொழிப் பெயராக மாறியது

எருமை இருந்தோட்டி (போல்) எள்ளீயும் காளை என் வளைக்கையைத் தன் மணிக்கையால் தொட்டு இழுத்துத் தன் தலைமேல் வைத்துச் சத்தியம் செய்தான் [1]

இருந்தோட்டி என்பது பெருமலையாகிய தொட்டபெட்டா. அதன் அரசன் அரசன் எருமையூரன் பாடலில் எருமை எனக் குறிப்பிடப்பட்டுள்ளான்.

இன்றும் எருமை மாடுகள் மிகுந்திருக்கும் ஊர் இது. சங்ககாலத்திலும் இவ்வூரில் எருமை மாடுகள் மிகுதியாக இருந்தமையால் இவ்வூரை எருமையூர் என்றனர்.

ஒரு கோட்பாடு அது எருமை என்னும் சொல் ‘மை’ என்னும் சொல்லாலும் குறிக்கப்படும். எனவே எருமையூர் மையூர் என்னும் சொல்லாலும் வழங்கப்பட்டுவந்தது.

மையூர் கிழான் இளஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர அரசன் இவனைத் தன் புரோகித அமைச்சனாக அமர்த்திக்கொண்டான். [2]

எருமையூரன் தலையாலங்கானப் போரில் நெடுஞ்செழியனிடம் தோற்றோடிய எழுவர் கூட்டணியில் ஒருவன் [3]

எருமைநாடு தொகு

சித்தன்னவாசல் கல்வெட்டு எருமை நாடு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இது மைசூரின் பழைய பெயர் என்று ஐராவதம் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார். [4]

அடிக்குறிப்பு தொகு

  1. நல்லந்துவனார் பரிபாடல் 5-86
  2. பதிற்றுப்பத்து ஒன்பதாம்பத்து பதிகம்
  3. நக்கீரர் அகம் 36
  4. Early Tamil Epigraphy - Iravatham Mahadevan (Pg-187)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எருமையூர்&oldid=3851694" இலிருந்து மீள்விக்கப்பட்டது