எலிசபெத் காட்ஜ்

ஆங்கில புனைகதை எழுத்தாளர்

எலிசபெத் டி பியூச்சம்ப் கவுட்ஜ் ( Elizabeth de Beauchamp Goudge ) (24 ஏப்ரல் 1900 - 1 ஏப்ரல் 1984) ஆங்கிலத்தில் புனைகதைகள் மற்றும் சிறுவர் இலக்கியம் எழுதும் ஆங்கில எழுத்தாளர் ஆவார். இவர் 1946 இல் பிரித்தானியக் குழந்தைகளுக்காக எழுதிய தி லிட்டில் ஒயிட் ஹார்ஸ் என்ற புத்தகத்திற்காக கார்னகி பதக்கத்தை வென்றார். கவுட்ஜ் நீண்ட காலமாக ஐக்கிய இராச்சியம் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பிரபலமான எழுத்தாளராக இருந்தார். பல தசாப்தங்களுக்குப் பிறகு கவனத்தை மீண்டும் பெற்றார். 1993 இல் தி ரோஸ்மேரி ட்ரீ என்ற இவரது புத்தகம் இந்திராணி ஐகாத்-கியால்ட்சன் என்பவரால் திருடி எழுதப்பட்டது. இந்தியாவின் சூழலுக்கு ஏற்ப அமைக்கப்பட்ட "புதிய" புதினம் த நியூயார்க் டைம்ஸ் மற்றும் தி வாசிங்டன் போஸ்ட் ஆகியவற்றின் மூலம் மதிப்பாய்வு செய்யப்பட்டு அதன் மூலத்தைக் கண்டுபிடிக்கப்பட்டது.[1] 2001 அல்லது 2002 இல் ஜே. கே. ரௌலிங் த லிட்டில் ஒயிட் ஹார்ஸ் என்பதை தனக்குப் பிடித்த புத்தகங்களில் ஒன்றாகவும் ஆரி பாட்டர் தொடரில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்திய சில புத்தகங்களில் ஒன்றாகவும் அடையாளம் கண்டார்.[2][2]

எலிசபெத் காட்ஜ்
பிறப்புஎலிசபெத் டி பியூச்சம்ப் கவுட்ஜ்
(1900-04-24)24 ஏப்ரல் 1900
வெல்ஸ், சோமர்செட், இங்கிலாந்து
இறப்பு1 ஏப்ரல் 1984(1984-04-01) (அகவை 83)
ரோத்தர்பீல்ட் பெப்பர்ட், ஆக்சுபோர்டுசையர்
புனைபெயர்எலிசபெத் காட்ஜ்
தொழில்எழுத்தாளர்
தேசியம்பிரித்தானியர்
காலம்1934–1978
வகைசிறுவர் இலக்கியம், காதல்
குறிப்பிடத்தக்க படைப்புகள்
  • தி லிட்டில் ஒயிட் ஹார்ஸ்
  • கிரீன் டால்பின் கண்ட்ரி
குறிப்பிடத்தக்க விருதுகள்கார்னகி பதக்கம் (1945)

சொந்த வாழ்க்கை தொகு

எலிசபெத் கோட்ஜ் 1900 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி சோமர்செட், வெல்ஸ் கதீட்ரல் நகரத்தின் லிபர்ட்டியில் உள்ள டவர் ஹவுஸில் பிறந்தார். அங்கு அவரது தந்தை ஹென்றி லெய்டன் காட்ஜ் இறையியல் கல்லூரியின் துணை முதல்வராக இருந்தார். இவரது தாயார் (பிறப்பு ஐடா டி பியூச்சம்ப் கொலெனெட், 1874-1951) குர்ன்சியிலிருந்து வந்தவர். இவரது தந்தை அங்குள்ள இறையியல் கல்லூரியின் முதல்வராக ஆனபோது குடும்பம் எலிக்கு குடிபெயர்ந்தது. பின்னர் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்திலுள்ள கிறிஸ்து தேவாலயக் கலூரியில் அவர் தெய்வீக பேராசிரியராக நியமிக்கப்பட்டபோது. எலிசபெத் சவுத்போர்னில் உள்ள கிராசெண்டேல் பள்ளியிலும் (1914-1918) பல்கலைக்கழகக் கல்லூரியின் கலைப் பள்ளியிலும் கல்வி பயின்றார். எலிசபெத் எலி மற்றும் ஆக்சுபோர்டில் வடிவமைப்பு மற்றும் கைவினைப் பொருட்கள் பாடத்தைக் கற்பித்தார்.[3]

எழுத்துப் பணிகள் தொகு

1939 இல் தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு, இவரும் இவருடைய தாயும் டெவோனின் மார்ல்டன் பகுதிக்கு. குடிபெயர்ந்தனர். அங்கு இவர்கள் 12 ஆண்டுகள் வாழ்ந்தனர். ஸ்மோக்கி ஹவுஸ் (1940), தி கேஸில் ஆன் தி ஹில் (1941), க்ரீன் டால்பின் கன்ட்ரி (1944), தி லிட்டில் ஒயிட் ஹார்ஸ் (1946) மற்றும் ஜென்டியன் ஹில் (1949) போன்ற தனது பல புத்தகங்களை இங்கிருந்தே எழுதினார்.[4] மே 4, 1951 இல் இவரது தாயார் இறந்த பிறகு, இவர் தனது ஆக்சுபோர்டுசையருக்கு குடிபெயர்ந்தார். தனது வாழ்க்கையின் கடைசி 30 ஆண்டுகளை இங்கு கழித்தார். தேம்சு ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஹென்லி-ஆன்-தேம்சு என்ற நகருக்கு வெளியே உள்ள பெப்பர்ட் காமன் என்ற கிராமத்தின் ஒரு குடிசையில், 2008 இல் ஒரு நீலப் பலகை வெளியிடப்பட்டது.[5]

இவரது முதல் புத்தகமான, தி ஃபேரிஸ் பேபி அண்ட் அதர் ஸ்டோரிஸ் (1919) விற்பனையில் தோல்வியடைந்தது. அதன் பின்னர் பல ஆண்டுகள் அழித்து எழுதிய ஐலேண்ட் மேஜிக் (1934) உடனடி வெற்றியைப் பெற்றது. இது கால்வாய் தீவுகள் கதைகளை அடிப்படையாகக் கொண்டது.[6]

1946 இல் இலண்டன் யுனிவர்சிட்டி பிரஸ் பதிப்பகம் வெளியிட்ட லிட்டில் ஒயிட் ஹார்ஸ், பிரித்தானிய பாடத்தின் ஆண்டின் சிறந்த குழந்தைகள் புத்தகமாக, நூலக சங்கத்தின் வருடாந்திர கார்னகி பதக்கத்தை இவருக்குப் பெற்றுத் தந்தது.[7] மேலும் இந்த புத்தகம் இவருக்கு மிகவும் பிடித்த புத்தகமாக இருந்தது.[8]

பிற பணிகள் தொகு

காட்ஜ் 1960 இல் காதல் புதின ஆசிரியர்கள் சங்கத்தின் நிறுவன உறுப்பினராகவும் பின்னர் அதன் துணைத் தலைவராகவும் இருந்தார்.[9]

இவரது எழுத்து ஒரு கண்ணோட்டம் தொகு

கவுட்ஜின் புத்தகங்கள் குறிப்பாக கிறிஸ்தவ பார்வையில் தியாகம், மாற்றம், ஒழுக்கம், குணப்படுத்துதல் மற்றும் துன்பத்தின் மூலம் வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது. அது இவர் பெரியவர்களுக்காகவோ அல்லது குழந்தைகளுக்காகவோ எழுதிய இவரது புத்தகங்கள், யதார்த்தமாக இருந்தாலும், கற்பனையாக இருந்தாலும் சரி, சரித்திரமாக இருந்தாலும் சரி, புராணங்களிலும் புராணங்களிலும் பின்னிப்பிணைந்துள்ளதோடு, இங்கிலாந்தின் ஆன்மீகத்தையும் அன்பையும் பிரதிபலித்தது.

இறப்பு தொகு

எலிசபெத் கவுட்ஜ் 1 ஏப்ரல் 1984 அன்று இறந்தார்.[10]

மேற்கோள்கள் தொகு

  1. Molly Moore, "Plagiarism and mystery" பரணிடப்பட்டது 12 ஆகத்து 2012 at the வந்தவழி இயந்திரம், Washington Post Foreign Service, 27 April 1994. Retrieved 11 November 2012.
  2. 2.0 2.1 Conversations with J.K. Rowling, Linda Fraser, Scholastic, 2001, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0439314558. p. 24.
  3. D. L. Kirkpatrick, ed., Twentieth-Century Children's Writers, 2nd ed., London, 1983, pp. 324–325. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-912289-45-7
  4. "Elizabeth Goudge, her time in Marldon". Marldon Local History Group: Life in a Devon Parish இம் மூலத்தில் இருந்து 5 December 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141205070924/http://www.marldonhistory.co.uk/html/elizabeth_goudge.html. 
  5. "Elizabeth GOUDGE (1900–1984)". Oxfordshire Blue Plaques Scheme.
  6. Goudge, Elizabeth (1974). The Joy of the Snow. Coward, McCann & Geoghegan. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-698-10605-5. https://archive.org/details/joyofsnow00goud. 
  7. (Carnegie Winner 1946). Living Archive: Celebrating the Carnegie and Greenaway Winners. CILIP. Retrieved 15 August 2012.
  8. John Attenborough, "Goudge, Elizabeth de Beauchamp (1900–1984)", rev. Victoria Millar, Oxford Dictionary of National Biography, Oxford University Press, 2004. Online edition. Retrieved 17 September 2009.
  9. "Our story" பரணிடப்பட்டது 22 அக்டோபர் 2012 at the வந்தவழி இயந்திரம். Romantic Novelists' Association. Retrieved 11 November 2012.
  10. Obituaries: The Times, 3 April 1984; The New York Times 27 April 1984.

External links தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிசபெத்_காட்ஜ்&oldid=3924732" இலிருந்து மீள்விக்கப்பட்டது