எலிசபெத் பிரவுன்
எலிசபெத் பிரவுன் (Elizabeth Brown) (6 ஆகத்து 1830 – 5 மார்ச்சு 1899)[1] ஒரு பிரித்தானிய வானியலாளர் ஆவார். இவர் சூரிய நோக்கீடுகளில், குறிப்பாக அதன் கரும்புள்ளிகள், ஒளிமறைப்புகளின் நோக்கீடுகளில் புலமை வாய்ந்தவர் ஆவார்.[2][3][4]
இவர் கிளவுசெசுட்டர்சயரில் உள்ள சிரென்சுசுட்டரில் பிறந்தார். இவருக்கு இவரது தந்தையாராகிய தாமசு பிரவுன் தொலைநோக்கியை அறிமுகப்படுத்தினார்.[5] இவர் சூரியப் புள்ளிகளை நோக்கிடு செய்ய தொடங்கினார். இவரது தந்தையார் அவரது 91 ஆம் அகவையில் இறந்ததும், குடும்பப் பணிகள்இன் சுமையில் இருந்து விடுதலை கிடைத்ததால் இவர் உலகம் முழுவது சுற்றி நோக்கீடுகளில் ஈடுபடலானார். இவர் தனது உலகப் பயணம் குறித்து பெயர் குறிப்பிடாமல் இரண்டு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.[2]
இவர் தன் தந்தையார் 1883 இல் இறந்ததும், இலிவர்பூல் வானியல் கழகத்தில் சேர்ந்தார். அப்போது இந்த வானியல் கழகம் பிரித்தானியா முழுவதும் உள்ள பயில்நிலை வானியலாளரின் கழகமாக விளங்கியது. இவர் சிரென்செசுட்டரில் இருந்து இலிவர்பூலுக்கு 140 கல் தொலைவுக்கு பயணம் செய்து அக்கழகத்தின் கூட்டங்களுக்குச் செல்வார். பிறகு, விரைவிலேயே இவர் அதன் சூரியப் பிரிவின் இயக்குநர் ஆனார்.[1]
இவர் பயில்நிலை வானியலாளரைத் திரட்டி 1890 இல் பிரித்தானிய வானியல் கழகத்தை உருவாக்குவதில் முதன்மைப் பாத்திரம் வகித்தார். இவர் அதன் சூரியப் பிரிவின் இயக்குநராக 1890 இல் ஆகி, தான் 1899 இல் இறக்கும்வரை அப்பதவியை வகித்துவந்தார்.[2][3][4] She also contributed to the activities of other observing sections, including the lunar, variable star and coloured star sections.[1]
அரசு வானியால் கழ்கத்தைப் போலல்லாமல், பிரித்தானிய வானியல் கழகம் தொடக்கம் முதலே பெண் வானியலாளர்களைத் தன் உறுப்பினராக ஏற்றுக்கொண்டது. இவர் 1892 இல் முப்பெண்களில் ஒருவராக, அரசு வானியல் கழக ஆய்வுறுப்பினராகப் பரிந்துரைக்கப்பட்டார். ஆனால், மூவருமே உரிய வாக்கு எண்ணிக்கைப் பெறாததால் ஆய்வுறுப்பினராக முடியவில்லை. இம்மூவரில் மற்ற இருவர் அலைசு எவரெட், அன்னீ இரசல் மவுந்தர் ஆவர்; இதேபோல, 1886 இல் இசிசு போகுசனுக்கான பரிந்துரையும் ஏற்கப்படவில்லை; எனினும், 1915 முதல் பெண் வானியலாளர்கள் அரசு வானியல் கழகத்தில் ஆய்வுறுப்பினராயினர்.[1]
இவர் நினைவலைகளை இரண்டு நூல்களாக வெளியிட்டுள்ளார். அவை நிழலைத் தேடி, வெப்பமண்டலத்தில் சிக்கி என்பன ஆகும். முதல் நூலில் த சூரிய ஒளிமறைப்பினைப் படம்பிடிக்க உலகம் சுற்றிய பட்டறிவை பகிர்ந்துகொள்கிறார். இதில் உலூக் ஓவார்டின் தாக்கம் புலனாகிறது.
இவர் பிரித்தானிய வானியல் கழகத்தை உருவாக்கியவர்களில் ஒருவர்.[6]
மேலும் படிக்க
தொகு- Creese, Mary R. S. (1998). "Elizabeth Brown (1830–1899), Solar Astronomer". Journal of the British Astronomical Association (London: British Astronomical Association) 108 (4): 193–197. Bibcode: 1998JBAA..108..193C. http://articles.adsabs.harvard.edu/full/1998JBAA..108..193C.
- Creese, Mary R. S. (2004), "Brown, Elizabeth (1830–1899)", Oxford Dictionary of National Biography, Oxford: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்
- Brück, Mary T. (2009). Women in Early British and Irish Astronomy: Stars and Satellites. Dordrecht: Springer. pp. 151–156. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-90-481-2473-2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-481-2472-5.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Creese, Mary R. S. (1998). "Elizabeth Brown (1830–1899), Solar Astronomer". Journal of the British Astronomical Association (London: British Astronomical Association) 108 (4): 193–197. Bibcode: 1998JBAA..108..193C. http://articles.adsabs.harvard.edu/full/1998JBAA..108..193C.
- ↑ 2.0 2.1 2.2 The Biographical Dictionary of Women in Science: Pioneering Lives From Ancient Times to mid-20th Century. Ogilvie, M. & Harvey, Joy., Editors. P.189. Consulted on 19-10-2012.
- ↑ 3.0 3.1 "In Memoriam, Elizabeth Brown, F.R.Met.Soc.". Journal of the British Astronomical Association (London: British Astronomical Association) 9 (5): 214–215. 1899. Bibcode: 1899JBAA....9..214.. http://articles.adsabs.harvard.edu/cgi-bin/nph-iarticle_query?1899JBAA....9..214..
- ↑ 4.0 4.1 "Obituary.– Miss E. Brown". The Observatory (London: The Editors of The Observatory) 22: 171–172. April 1899. Bibcode: 1899Obs....22..169.. http://articles.adsabs.harvard.edu/cgi-bin/nph-journal_query?volume=22&plate_select=NO&page=171&plate=&cover=&journal=Obs...
- ↑ Elizabeth Brown (1830–1899). பரணிடப்பட்டது 2014-03-02 at the வந்தவழி இயந்திரம் Quakers in Britain. Consulted on 19-10-2012.
- ↑ Elizabeth Brown, English Astronomer. Science Photo Library. Consulted on 19-10-2012.