எலுமிச்சை ஊறுகாய்
எலுமிச்சை ஊறுகாய் (Pickled lime) என்பது துணை உணவு ஆகும். இந்த வகை ஊறுகாய் எலுமிச்சை பழம் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதில் எலுமிச்சையானது ஊறுகாய் இடுவதன் மூலம் கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்படுவதுடன் சுவையேற்றப்படுகிறது.[1][2]
வரலாறு
தொகு19ஆம் மற்றும் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், வடகிழக்கு அமெரிக்காவிற்கு மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து எலுமிச்சை ஊறுகாய் ஏற்றுமதி செய்யப்பட்டது.[1] 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், எலுமிச்சை ஊறுகாய்க்கு நியூயார்க்கில் அதிக தேவை இருந்தது. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இவை பெரும்பாலும் பாஸ்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.[1] இந்த காலகட்டத்தில், கடைகளில் இவற்றைக் கண்ணாடிக் குடுவைகளில் மேசையின் மீது வைத்து விளம்பரப்படுத்தி விற்பனை செய்தனர்.[1] சில வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் முழு பீப்பாய்களையும் வாங்கினர்.[1]
19ஆம் நூற்றாண்டின் மத்தியில், புளோரிடாவிலிருந்து பாஸ்டனுக்கு ஊறுகாய்க்கான எலுமிச்சை ஏற்றுமதி செய்யப்பட்டன.[2]
இங்கிலாந்தில்
தொகு19ஆம் நூற்றாண்டின் நியூ இங்கிலாந்தில் அறியப்பட்ட எலுமிச்சை ஊறுகாய், லூயிசா மே அல்காட் எழுதிய லிட்டில் வுமன் நாவலின் கற்பனை கதாபாத்திரமான ஆமி உட்கொண்டது போல, தேசி எலுமிச்சையின் பெரிய துண்டுகளாக வெட்டப்பட்டு, உப்புநீரில் மூன்று முதல் நான்கு வாரங்களுக்கு ஊறவைத்து தயார் செய்யப்பட்டவையாகும். இறக்குமதியாளர்கள் இவற்றை மிகக் குறைந்த இறக்குமதி வரி விகிதத்தில் இறக்குமதி செய்து சில்லறை விற்பனையாளர்களிடம் பிரித்து விற்றனர். இதனால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் எளிதில் எடுத்துச் செல்ல வழிவகுத்தது.[1]
பயன்பாடு
தொகுஎலுமிச்சை ஊறுகாய் சில நேரங்களில் தனியாக, சிற்றுண்டியாக உண்ணப்படுகிறது.[1] சில இனிப்பு சுவைகளைத் தயாரிப்பதில் இவை மூலப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.[1]
செய்முறை
தொகுஎலுமிச்சை இந்திய உணவுமுறை உணவு வகைகளுக்கு இன்றியமையாத மூலப் பொருளாகும். மேலும் பல வகையான ஊறுகாய்கள் தயாரிக்க எலுமிச்சைப் பயன்படுகின்றது. எ.கா. இனிப்பு எலுமிச்சை ஊறுகாய், உப்பு ஊறுகாய் மற்றும் எலுமிச்சை சட்னி . இதன் தயாரிப்பில் சேர்க்கைப் பொருட்கள் பிராந்தியத்தைப் பொறுத்து மாறுபடுகிறது. ஆனால் செய்முறை பெரும்பாலும் ஒரே மாதிரியாக உள்ளது. எலுமிச்சை துண்டுகளாக்கப்பட்டு, கடுகு, மிளகாய் மற்றும் மஞ்சள் போன்ற பல்வேறு மசாலாப் பொருட்களுடன் கலக்கப்பட்டு, பின்னர் உப்பு சேர்த்து மூடிய நிலையில் சூரிய ஒளியில் வைத்து காற்று புகாமல் பல வாரங்கள் வைத்துப் பயன்படுத்தப் படுகிறது.
ஐக்கிய இராச்சியத்தில் இந்திய உணவகங்கள் பெரும்பாலும் அப்பளம் எலுமிச்சை ஊறுகாயைத் தொடக்க உணவாக வழங்குகின்றன.