தேசிப்பழம்

தேசிப்பழம் (lime; அரபு, பிரெஞ்சு மொழிகளில் "லிம்" [lim])[1] என்பது உருண்டையான, தேசிப்பச்சை நிறமுடைய, 3–6 சென்டிமீட்டர்கள் (1.2–2.4 அங்) விட்டமுடைய, அமிலத் தன்மையான, சாறு சவ்வுப்பை கொண்ட கிச்சிலிப் பழமாகும்.[2] சில வகை கிச்சிலி இனப்பழங்களும் தேசிப்பழம் அல்லது தேசிக்காய் என்றே அழைக்கப்படுகின்றன. இவற்றில் தேசி, பாரசீகத் தேசி, காப்பிலித் தேசி, பாலைவனத் தேசி என்பனவும் அடங்கும்.[2] தேசிப்பழங்கள் சிறப்பாக உயிர்ச்சத்து சியைக் கொண்டுள்ளன. அத்தோடு அவை உணவு, பானம் என்பவற்றுக்கு சுவையூட்டியாகவும் பயன்படுத்தப்படுகின்றது. வெப்ப வலய வளரும் இவற்றின் பழங்கள் எலுமிச்சையைவிட சிறிதாகவும் புளிப்பு குறைந்தும் காணப்படுவதோடு, சீனி மற்றும் அமிலத்தின் அளவு மாறுபட்டும் காணப்படும்.[3] தேசிப்பழங்களை உற்பத்தி செய்யும் தாவரங்கள் பல்வேறு மரபுவழி மூலத்தைக் கொண்டுள்ளதோடு, ஒற்றைத்தொகுதிமரபு உயிரினத் தோற்ற குழு அமைப்பையும் கொண்டிருக்கவில்லை.

தேசிக்காய்கள்

உசாத்துணை

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lime
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. Adrian Room (1986). A dictionary of true etymologies. Taylor & Francis. p. 101.
  2. 2.0 2.1 "Line (fruit)". New World Encyclopedia. August 2014. பார்க்கப்பட்ட நாள் 14 January 2015.
  3. Rotter, Ben. "Fruit Data: Yield, Sugar, Acidity, Tannin". Improved Winemaking. பார்க்கப்பட்ட நாள் 2014-09-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிப்பழம்&oldid=2039474" இலிருந்து மீள்விக்கப்பட்டது