எலான் மசுக்

அமெரிக்க தொழில் அதிபர்
(எலோன் மசுக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எலான் மசுக் (Elon Reeve Musk, பிறப்பு: சூன் 28, 1971) தென் ஆப்பிரிக்காவில் பிறந்த கனேடிய, அமெரிக்க தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும்[1][2] முதலீட்டாளர் ஆவார்.[3][4][5] இவர் தற்போது எசுபேசுஎக்சு நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும், டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டுமான தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரியாகவும் உள்ளார்.[6]

எலான் மசுக்
2018ல் எலான் மசுக்
பிறப்புஎலொன் ஆர். மஸ்க்
சூன் 28, 1971 (1971-06-28) (அகவை 53)
பிரிட்டோரியா, டிரான்ஸ்வால், தென் ஆப்பிரிக்கா
குடியுரிமை
  • தென் ஆப்பிரிக்கா (1971–தற்போதும்)
  • கனடா (1971–தற்போதும்)
  • அமெரிக்கா (2002–தற்போதும்)
கல்விபென்சில்வேனியா பல்கலைக்கழகம் (BS, BA)
படித்த கல்வி நிறுவனங்கள்குயின்ஸ் பல்கலைகழகம்
பென்சில்வேனியா பல்கலைக்கழகம் (B.S. பொருளாதாரம், B.S. இயற்பியல்)
இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்
அறியப்படுவதுஎசுபேசுஎக்சு, பேபால், டெஸ்லா மோட்டார்ஸ், ஹைப்பர்லூப், ஜிப்2, சோலார் சிட்டி ஆகிய நிறுவனங்களின் இணை நிறுவனர்.
துணைவர்கிரிம்ஸ் (2018–2021)
வாழ்க்கைத்
துணை
  • ஜச்டீன் மசுக்
    (தி. 2000; ம.மு. 2008)
  • தலுலாக் ரிலெய்
    (தி. 2010; ம.மு. 2012)
  • (தி. 2013; ம.மு. 2016)
பிள்ளைகள்10
உறவினர்கள்
  • டோஸ்கா மஸ்க் (சகோதரி)
  • கிம்பல் மஸ்க் (சகோதரன்)
  • லிண்டன் ரைவ் (உறவினர்)
கையொப்பம்எலான் மஸ்க்

ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX), பேபால் (PayPal)[7] டெஸ்லா மோட்டார்ஸ், மற்றும் ஜிப்2[8][9] ஆகிய நிறுவனங்களின் ஆரம்ப கால முதலீட்டாளர் ஆவார். மஸ்க் அவற்றின் இணை நிறுவனர்களில் ஒருவரும் ஆவார்.[10][11][12][13][14][15] திசம்பர் 2022 நிலவரப்படி, US$169.1 பில்லியனுக்கும் அதிகமான நிகர மதிப்புடன்[16] உலகின் இரண்டாவது பணக்காரராக உள்ளார்.[17][18]

பின்புலமும் கல்வியும்

தொகு

எலான் மஸ்க் தென்னாப்பிரிக்காவில் பிறந்தார். இவருடைய தந்தை பொறியாளர்; தாயார் மே மஸ்க் சத்துணவு நிபுணர். பன்னிரண்டு அகவையில் இருக்கும்போதே கணினியில் ஈர்ப்புக் கொண்டு தம்முடைய வீடியோ விளையாட்டுக்கு, அவரே குறியீடுகள் எழுதி அதனை விற்று ஊதியம் அடைந்தார்.

கனடாவில் ஒண்டாரியோ கிங்ஸ்டனில் உள்ள குவீன்ஸ் பல்கலைக் கழகத்திலும், பின்னர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திலும் படித்தார். பொருளியல் மற்றும் தெரியியல் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டங்கள் பெற்றார். ஆய்வுகள் செய்து பட்டம் பெற கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார், ஆனால் படிப்பை அங்குத் தொடரவில்லை.[19]

தொழிற் பணிகள்

தொகு
 
  • 1999 இல் பேபால் என்ற ஒரு நிதி நிறுவனத்தைத் தொடங்கினார்.
  • ஜிப்2 குழுமத்தைத் தொடங்கி நடத்திச் சில காலம் கழித்து விற்றார்.
  • எக்ஸ் டாட் காம் என்ற குழுமத்தை 1999இல் தொடங்கினார்.
  • 2002 இல் ஸ்பேஸ் எக்ஸ் என்ற குழுமத்தையும், 2003 இல் டெஸ்லா மோட்டார்ஸ் என்ற குழுமத்தையும் தொடங்கினார்.
  • 2012 மே மாதத்தில் பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு ராக்கெட்டை அனுப்பினார்.
  • 2016 இல் சோலார் சிட்டி என்ற குழுமத்தை வாங்கினார்.

வணிக நோக்கில் விண்வெளியில் சுற்றுலாப் பயணம் செய்ய விண்கலத்தை உருவாக்கி மனிதர்களை அனுப்புவதே ஸ்பேஸ் எக்சின் முகாமையான அலுவல் ஆகும். மேலும் செவ்வாய்க்கோளுக்கு மனிதர்களைக் குடியேற்ற வேண்டும்; அது 2024 ஆம் ஆண்டில் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் எலான் மசுக்.[20]

பிற கூட்டாளிகளுடன் இணைந்து எலான் மஸ்க் நிறுவிய டெஸ்லா மோட்டார்ஸ் தயாரித்த மின்சார மகிழுந்துகள் பிரபலமாய் விற்பனை ஆயின. அமெரிக்க மகிழுந்துகள் தயாரிப்பில் ஜெனரல் மோட்டார்ஸ் குழுமத்தையும் விஞ்சிவிட்டது என 2017 ஏப்ரலில் அறிவிக்கப்பட்டது.[21]

புதிய திட்டங்கள்

தொகு

எலான் மஸ்க் 2013 இல் ஹைபர்லூப் என்னும் புதிய கருத்தை முன்வைத்து அறிவித்தார். அந்தத் திட்டத்தின்படி பெரு நகரங்களிடையே மிக விரைவில் பயணம் செய்யக்கூடிய நோக்கத்தில் குறைந்த அழுத்தக் குழாய்கள் வழியாக ஒரு மணி நேரத்தில் 700 மைல்கள் விரைந்து செல்ல முடியும். வானுர்தி, தொடர்வண்டி ஆகிய ஊர்திகளை விட வேகமாகச் செல்ல முடியும். இந்த் திட்டம் நிறைவேற 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓபன் AI என்ற ஆராய்ச்சி நிறுவனத்தில் இவர் பொறுப்பேற்றுச் செயல்பட்டார். இது செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக் குறித்து ஆய்வு செய்கிறது. மேலும் நியுராலிங்க் என்ற அமைப்பில், மனிதர்களின் மூளையில் கருவியைப் பொருத்தி மென்பொருளுடன் இணைக்கும் முயற்சியை மேற்கொள்வதில் எலான் மஸ்க் முனைப்பாக இருக்கிறார்.

பெற்ற பட்டங்கள்

தொகு

யேல் பல்கலைக்கழகம், சுர்ரே பல்கலைக்கழகம், டிசைன் கலைக் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்கள் எலானுக்கு மதிப்புறு பட்டங்கள் வழங்கி கௌரவித்தன.

மேற்கோள்கள்

தொகு
  1. Junod, Tom (November 15, 2012). "Triumph of His Will". Esquire (magazine). பார்க்கப்பட்ட நாள் November 1, 2013.
  2. Profile[தொடர்பிழந்த இணைப்பு], inventors.about.com; accessed April 27, 2014.
  3. Profile, forbes.com; accessed April 27, 2014.
  4. [1], wsj.com; accessed April 27, 2014.
  5. Profile, businessinsider.com; accessed April 27, 2014.
  6. "The World's Billionaires", Forbes, பார்க்கப்பட்ட நாள் April 27, 2014.
  7. "History". PayPal. பார்க்கப்பட்ட நாள் April 18, 2014.
  8. Friedman, Josh (April 22, 2003), Entrepreneur Tries His Midas Touch in Space, The Los Angeles Times
  9. Kidder, David; Hoffman, Reid (2013). The Startup Playbook: Secrets of the Fastest Growing Start-Ups from the founding Entrepreneurs. San Francisco, CA: Chronicle Books. pp. 2224–228.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  10. "Tesla Motors and PayPal co-founder Elon Musk buys $17 million Bel Air mansion". San Francisco Chronicle. January 4, 2013. http://www.sfgate.com/news/slideshow/Tesla-Motors-and-PayPal-co-founder-Elon-Musk-buys-54694.php. பார்த்த நாள்: April 21, 2014. 
  11. "#162 - Elon Musk". Forbes. April 1, 2014. http://www.forbes.com/profile/elon-musk. பார்த்த நாள்: April 21, 2014. "Stock in Tesla Motors, the electric carmaker he founded, is up 625% in the past year...Musk left for the U.S. at 17 and made his first fortune as a co-founder of PayPal" 
  12. "Billionaire space entrepreneur wants vegetarian-only colony on Mars". RT.com. January 8, 2013. http://rt.com/usa/space-mars-musk-people-595. பார்த்த நாள்: April 21, 2014. "A US billionaire and co-founder of PayPal, Elon Musk" 
  13. "Start-Ups Aim to Conquer Space Market". The New York Times. March 16, 2014. http://www.nytimes.com/2014/03/17/technology/start-ups-aim-to-conquer-space-market.html?_r=1. பார்த்த நாள்: April 21, 2014. "Space Exploration Technologies, or SpaceX, started by the Tesla founder Elon Musk" 
  14. "Trust Your Own Focus Group of One". Entrepreneur.com. April 11, 2014. பார்க்கப்பட்ட நாள் April 21, 2014. Elon Musk, founder of PayPal, Tesla and SpaceX
  15. "Something New Under the Sun". Slate. November 4, 2013. பார்க்கப்பட்ட நாள் April 21, 2014. Musk, his eldest cousin, billionaire co-founder of PayPal, SpaceX, and Tesla.
  16. "Elon Musk". Forbes (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-24.{{cite web}}: CS1 maint: url-status (link)
  17. "Bloomberg Billionaires Index". www.bloomberg.com. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.
  18. "Real Time Billionaires". Forbes (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.
  19. https://www.thoughtco.com/african-history-4133338
  20. https://www.forbes.com/profile/elon-musk/
  21. https://www.biography.com/people/elon-musk-20837159
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலான்_மசுக்&oldid=4124443" இலிருந்து மீள்விக்கப்பட்டது