எல்லா வெடிகுண்டுகளினதும் தாய்
ஜிபியு-43/பி மாபெரும் பீரங்கி வான் வெடிப்பு (GBU-43/B Massive Ordnance Air Blast (MOAB)) எனவும் பொதுவாக எல்லா வெடிகுண்டுகளின் தாய் (Mother of All Bombs) என அழைக்கப்படும் இது அமெரிக்க இராணுவத்தினால் தயாரிக்கப்பட்ட ஒரு பாரிய விளைவு வழக்கமான வெடிகுண்டு.[1] இதன் தயாரிப்புக் காலத்தில், இதுவே அணு ஆயுதங்களற்ற, அதிக சக்தி வாய்ந்த ஆயுதமாகக் காணப்பட்டது.[2] இவ்வெடிகுண்டு சி-130, எம்சி-130 வகை வானூர்திகள் மூலம் விடுவிக்கப்பட வடிவமைக்கப்பட்டது.[2]
எல்லா வெடிகுண்டுகளின் தாய் GBU-43/B Massive Ordnance Air Burst | |
---|---|
வகை | வழமையான வெடி குண்டு |
அமைக்கப்பட்ட நாடு | ஐக்கிய அமெரிக்கா |
பயன்பாடு வரலாறு | |
பயன்பாட்டுக்கு வந்தது | 2003 |
பயன் படுத்தியவர் | அமெரிக்க வான்படை, அரச வான்படை |
உற்பத்தி வரலாறு | |
வடிவமைப்பாளர் | வான்படை ஆய்வு கூடம் |
வடிவமைப்பு | 2002 |
தயாரிப்பாளர் | McAlester Army Ammunition Plant |
உருவாக்கியது | 2003 |
அளவீடுகள் | |
எடை | 22,600 pounds (10.3 tonnes) |
நீளம் | 30 அடி, 1.75 அங்குலம் (9.17 மி) |
விட்டம் | 40.5 அங் (103 cm) |
எச்H-6 அல்லது or ரிடோனல் வெடிபொருள் எரிமம் தேறல் கலவை. | |
திணிப்பு எடை | 18,700 pounds (8.5 tonnes) |
வெடிப்பின் விளைவு | 11 டன் |
இந்த வெடிகுண்டு 2017 ஏப்ரல் 13 அன்று ஆப்கானித்தானில் கொரோசான் மாகாணத்தில் இசுலாமிய அரசு தீவிரவாதிகளின் தளங்கள் மீது வீசியது.[3] 9,800 கிலோ எடையுள்ள 30 அடி நீள இக்குண்டை வீசி அமெரிக்கா நடத்திய தாக்குதலில், 90 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஆப்கானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.[4]
2007 ஆம் ஆண்டில், உருசியத் தயாரிப்பான எல்லா வெடிகுண்டுகளின் பிதா இதைவிட நான்கு மடங்கு சக்தி வாய்ந்தது என உரிமை கோரியது.[5]
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Times Wire Services (2005-12-27). "Albert L. Weimorts Jr. 67; Engineer Created 'Bunker Buster' Bombs". Los Angeles Times. http://articles.latimes.com/2005/dec/27/local/me-passings27.3. பார்த்த நாள்: 2010-07-08.
- ↑ 2.0 2.1 GBU-43/B / "Mother Of All Bombs" / Massive Ordnance Air Blast Bomb
- ↑ Helene Cooper & Mujib Mashal, U.S. Drops 'Mother of All Bombs' on ISIS Caves in Afghanistan, த நியூயார்க் டைம்ஸ் (13-04-2017).
- ↑ "MOAB strike: 90 IS fighters killed in Afghanistan". பிபிசி. 15-04-2017. பார்க்கப்பட்ட நாள் 15-04-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ Luke Harding (2007-09-12). "Russia unveils the 'father of all bombs'". Guardian Unlimited. http://www.guardian.co.uk/russia/article/0,,2167175,00.html. பார்த்த நாள்: 2007-09-12.