எல்லோ (Ello) ஓர் சமூக வலைத் தளம் ஆகும். அமெரிக்காவைச் சேர்ந்த பால் பட்னிட்சு, வரைகலை வடிவமைப்பகத்தின் பெர்கெர்,ஃபோர் மற்றும் தொழினுட்பவியலாளர் மோடு செட் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர். இந்த வலைத்தளம் மார்ச் 2014ஆம் ஆரம்பிக்கப்பட்டது.[1][2]

எல்லோ
Ello
உருவாக்கியவர்பால் பட்னிட்ஸ்
மகுட வாசகம்எளிமை, அழகு, விளம்பரமின்மை
வெளியீடுமார்ச்சு 2014 (2014-03)
உரலிwww.ello.co

துவக்கத்தில் இதற்கு குறைந்த வரவேற்பே இருந்தபோதும் செப்டம்பர் 2014இல் மிகவும் பரவலாக அறியப்படலாயிற்று. குறிப்பாக ஃபேஸ்புக் வலைத்தளத்தில் உண்மையானப் பெயர்களை தரவேண்டும் என்ற கொள்கையினால் பாதிக்கப்பட்ட சான் பிரான்சிஸ்கோ நகர 2014 நங்கை, நம்பி, ஈரர், திருனர் சமூகத்தினர் திரளாக இதில் இணைந்தனர்.[3][4][5] உங்கள் தனிப்பட்ட விவரங்களைக் கேட்காத சமூக வலைத்தளம் என்று பரப்புரை ஆற்றப்பட்டது.

சிறப்புக் கூறுகள்

தொகு

எல்லோ சேவை பல குறிக்கத்தக்க சிறப்புக்கூறுகளை தனது நோக்கங்களாக அறிவித்துள்ளது:[1][3][5]

  • பயனர் தரவுகளை விளம்பரதாரர் அல்லது மூன்றாமவருக்கு எப்போதும் விற்பதில்லை.
  • எப்போதும் விளம்பரங்களைக் காட்டுவதில்லை.
  • உண்மையானப் பெயரை அறியப்படுத்தும் கொள்கையை வற்புறுத்துவதில்லை.
  • வெறுப்புப் பேச்சு, கடுப்பேற்றுவது, தொடர்வது, ... போன்ற பழிக்கின்ற நடத்தைகளுக்கு எதிராக சுழிய விழுக்காடு சகிப்பை மேற்கொள்ளுதல் [6].

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Smith, Jack, IV (2014-03-18). "Mysterious New Social Network Ello Promises ‘You Are Not the Product'". Betabeat.com. http://betabeat.com/2014/03/mysterious-new-social-network-ello-promises-you-are-not-the-product/. பார்த்த நாள்: 24 September 2014. 
  2. "Who Created ello?". Ello இம் மூலத்தில் இருந்து 2014-10-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141006234304/https://ello.co/wtf/post/founders. 
  3. 3.0 3.1 Butcher, Mike (September 26, 2014). "Ello, Ello? New 'No Ads' Social Network Ello Is Blowing Up Right Now". டெக்கிரஞ்சு. பார்க்கப்பட்ட நாள் September 27, 2014. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  4. Sullivan, Gail (September 25, 2014). "Social network Ello gets boost after Facebook boots drag queens". தி வாசிங்டன் போஸ்ட். பார்க்கப்பட்ட நாள் September 27, 2014. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  5. 5.0 5.1 McKinney, Kelsey (September 26, 2014). "31,000 people an hour are joining the social network Ello. The anti-Facebook, explained". Vox.com. பார்க்கப்பட்ட நாள் September 27, 2014.
  6. "Report Abuse on Ello". Archived from the original on 2014-10-06. பார்க்கப்பட்ட நாள் 2014-10-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்லோ&oldid=3596207" இலிருந்து மீள்விக்கப்பட்டது