எல்வு (த லார்ட் ஆப் த ரிங்ஸ்)

(எல்வ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எல்வு (ஆங்கில மொழி: Elf) என்பவர் ஆங்கில எழுத்தாளர் ஜே. ஆர். ஆர். டோல்கீன் என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு கனவுருப்புனைவு கதாபாத்திர இனம் ஆகும். இவர்கள் மத்திய-பூமியில் வசிப்பவர்களாகவும், அழகானவர்களாக இருப்பதுடன் கலை மீது மிகுந்த ஆர்வம் உடையவர்களாக உள்ளனர். இதைவிட இவர்கள் மனிதர்களைவிட பலசாலிகளாகவும் புத்திக்கூர்மை உள்ளவர்களாகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் கொலை செய்யப்பட்டால் தவிர இவர்களை நோய்களோ இறப்போ அண்டுவதில்லை.

எல்வு
த காபிட்டு, த லோட் ஒவ் த ரிங்ஸ் கதை மாந்தர்

இவர்களின் கதை த காபிட்டு மற்றும் த லோட் ஒவ் த ரிங்ஸ்.[1][2] போன்ற புதினங்களில் தோற்றிவிக்கப்பட்டது, ஆனால் இவர்களின் வரலாறு த சில்மரில்லியனில் முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளது. இந்த எல்பு பற்றிய தகவல்களை எழுத்தாளர் ஜே. ஆர். ஆர். டோல்கீன் என்பவர் பண்டைய கவிதைகள் மற்றும் வடக்கு ஐரோப்பாவின் மொழிகளில், குறிப்பாக பழைய ஆங்கில ஆகியவற்றில் இருந்து பெற்றார்.

இவர்கள் உயரத்தில் மென்களை விட உயரமானவர்கள், ஆபத்தானவர்கள், அழகானவர்கள், காட்டு இயற்கைக்கு நடுவில் வசிப்பவர்கள், வில்வித்தை பயிற்சியில் சிறப்பு தேர்ச்சி பெற்றவர்கள் போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.

சான்றுகள்

தொகு
  1. Shippey, T. A. (2000). J. R. R. Tolkien: Author of the Century. HarperCollins. p. 211.
  2. Brin, David (2008). Through Stranger Eyes: Reviews, Introductions, Tributes & Iconoclastic Essays. Nimble Books. p. 37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-934840-39-9.