எல். ஆர். ஸ்வாமி

லக்ஷ்மணியார் ராம ஸ்வாமி (Lakshmanayyar Rama Swamy, பிறப்பு: அக்டோபர் 16, 1944) ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். மலையாளத்தில் கேபி ராமானுன்னி எழுதிய "சுஃபி பரஞ்சா கதா" என்ற மலையாள நாவலின் தெலுங்கு மொழிபெயர்ப்பான இவரது "சுஃபி செப்பினா கதா" நூல் 2015 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது.

எல். ஆர். ஸ்வாமி
தாய்மொழியில் பெயர்ఎల్.ఆర్.స్వామి
பிறப்புஅக்டோபர் 16, 1944 (1944-10-16) (அகவை 80)
திருச்சூர், கேரளம், iஇந்தியா
பணியகம்ஆந்திர பெட்ரோ கெமிக்கல்சு
அறியப்படுவதுமொழிபெயர்ப்பாளர், சிறுகதை எழுத்தாளர்
சமயம்இந்து
வாழ்க்கைத்
துணை
Bhattiprolu Naga Sundari

வாழ்க்கை வரலாறு

தொகு

எல். ஆர். ஸ்வாமி 1944 ல் டி.கே. லக்ஷ்மண அய்யர் மற்றும் ராஜம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். அவரது தாய் மொழி தமிழ். கேரளாவின் திருச்சூரில் அவரது பள்ளி கல்வி முடிக்கப்பட்டது. ஆந்திரா பெட்ரோலியம் கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்தபின் அவர் விசாகப்பட்டினத்திற்கு மாறினார். தற்போது அவர் மொசைக் இலக்கிய அமைப்பு மற்றும் சாகிர்யத சாகிதியின் தலைவராகப் பணியாற்றி வருகிறார். நன்கு அறியப்பட்ட தெலுங்கு எழுத்தாளர்களின் கவிதைகளை மலையாளத்தில் மொழிபெயர்த்தார். இந்த பட்டியலில் என். கோபி, சிக்மணி, பி. விஜயலட்சுமி பண்டிட் ஆகியோர் அடங்குவர். குராஜதா அப்பாராவ், கேது விஸ்வநாத ரெட்டி மற்றும் ஜெயந்தி பாப்பராவின் கதைகளை மலையாளத்தில் மொழிபெயர்த்தார். மகாவி ஸ்ரீஸ்ரீயின் மோனோகிராஃப் மற்றும் திவகார்ல வெங்கட அவதானியின் ஆந்திர வக்மய சரித்தரா ஆகியவர்றின் மொழிபெயர்ப்புகளும் ஸ்வாமியின் படைப்புகளாகும்.

தெலுங்கு புத்தகங்கள்

தொகு
  1. கோதாவரி நிலையம் (கதைத் தொகுப்பு)
  2. ஆதிவாஜ ராஜ்யம் (தமிழ் எழுத்தாளர் ஆர்.நடராஜன் எழுதிய கதைகள்)
  3. சரீரம் ஒக்க நகரம் (கே. சச்சிதானந்தன் எழுதிய மலையாள கவிதைகளின் மொழிபெயர்ப்பு)
  4. சமெத்தலா கதாலு (குட்டிக் கதைகள்)
  5. கதாகாசம் (கதைத் தொகுப்பு)
  6. சூஃபி செப்பின கதா (K.P. ராமானுன்னி எழுதிய மலையாள நாவலின் மொழிபெயர்ப்பு)
  7. பாண்டவபுரம் (சேதுவால் எழுதப்பட்ட மலையாள நாவலின் மொழிபெயர்ப்பு)
  8. கதாஸ்வாமியம் (கதைத் தொகுப்பு)
  9. லோகுட்டு பெருமாள்ளுகேருகா (கதைத் தொகுப்பு)
  10. கேரள நாட்டுப்புற பாடல்கள் (கே. அய்யப்பா பணிக்கர் எழுதிய பாடல்கள்)
  11. கோண்ட தொரசாணி (நாராயணால் எழுதப்பட்ட மலையாள நாவலின் மொழிபெயர்ப்பு)
  12. கதா கேரளம் (மலையாளக் கதைகள் மொழிபெயர்ப்பு)
  13. முத்ரலு (மலையாள நாவலின் மொழிபெயர்ப்பு)
  14. பிரம்மரிஷி ஸ்ரீ நாராயண குரு (டி.பாஸ்கரன் எழுதிய புத்தகத்தின் மொழிபெயர்ப்பு)
  15. கதா வாரடி (மலையாள கதைகள் மொழிபெயர்ப்பு)

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்._ஆர்._ஸ்வாமி&oldid=3263094" இலிருந்து மீள்விக்கப்பட்டது