எல். ஏ. இரவி சுப்ரமணி

இந்திய அரசியல்வாதி

இலக்யா அனந்தராமையா இரவி சுப்ரமணி (Lakya Anantharamaiah Ravi Subramanya) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1958 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[1] பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராக கர்நாடக அரசியலில் ஈடுபட்டார். பெங்களூர் மாவட்டத்தில் உள்ள பசவனகுடி தொகுதியில் இருந்து கர்நாடகா சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [2] [3] [4] மஞ்சுளா என்ற பெண்ணை இரவி சுப்ரமணி மணந்து கொண்டார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில், பெங்களூர் தெற்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிடப் பரிந்துரைக்கப்பட்ட பலரில் இவரது பெயரும் ஒன்றாகும். ஆனால் இறுதியில் இவரது மருமகன் தேச்சசுவி சூர்யா இப்போட்டிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [5]

எல். ஏ. இரவி சுப்ரமணி
கர்நாடக சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2008
முன்னையவர்கே. சந்திரசேகர்
தொகுதிபசவனகுடி சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
இலாகிய அனந்தராமய்ய ரவி சுப்பிரமணி

20 மே 1958 (1958-05-20) (அகவை 66)
சிக்மகளூர், கர்நாடகா, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய சனதா கட்சி
உறவினர்தேச்சசுவி சூர்யா (மருமகன்)
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
  1. "Affidavit-2008-RaviSubrahmanya-Basavanagudi-170" (PDF). பார்க்கப்பட்ட நாள் 14 June 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Ward information page: 154 – Basavanagudi -".
  3. "Bail out BBMP – Bengaluru MLA thinks loud".
  4. "Gandhi bazaar as walker zone? Plan gathers dust". https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/gandhi-bazaar-as-walker-zone-plan-gathers-dust/articleshow/51219965.cms. 
  5. "From Assistant Head Boy in School to MP Ticket, The Meteoric Rise of BJP's Bangalore South Candidate Tejasvi Surya". பார்க்கப்பட்ட நாள் 28 May 2019.

புற இணைப்புகள்

தொகு
  • L. A. Ravi Subramanya on Facebook
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்._ஏ._இரவி_சுப்ரமணி&oldid=4108892" இலிருந்து மீள்விக்கப்பட்டது