எல். வெங்கடகிருட்டிண ஐயர்
எல்.வெங்கடகிருட்டிண ஐயர் (L. Venkatakrishna Iyer) என்பவர் ஓர் இந்திய கட்டடவியல் பொறியாளர் ஆவார். தமிழகத்தின் பொதுப்பணித்துறையில் முதன்மைப் பொறியாளராக இவர் பணிபுரிந்தார் [1]. 1941 ஆம் ஆண்டு போலாவரத்திற்கு அருகில் கோதாவரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு முதன் முதலில் திட்டம் வகுத்துத் தந்த பெருமை அய்யருக்கு உண்டு. பின்னாளில் இத்திட்டம் போலாவரம் திட்டம் என அங்கீகரிக்கப்பட்டது [2]. கிருட்டிண அய்யர் கும்பகோணம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவராவார் [3]. மெட்ராசு தொழில்நுட்ப நிறுவனம் தொடங்குவதில் சின்னசாமி ராசம்மிற்கு துணை நின்றவர்களில் இவரும் ஒருவராவார். நிறுவனத்தின் மையக் குழுவில் ஒரு உறுப்பினராக அமர்ந்து அய்யர் கல்வி நிறுவனத்தின் நிருவாகத்தையும் மேற்பார்வை செய்தார் [4]. சமூகத்திற்கு இவர் செய்த தொண்டுகளை கருத்திற்கொண்டு 1961 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் மூன்றாவது உயரிய குடிமக்கள் விருதான பத்ம பூசண் விருதை வழங்கி இவரைச் சிறப்பித்தது.[5].
எல். வெங்கடகிருட்டிண ஐயர் L.Venkatakrishna Iyer | |
---|---|
பிறப்பு | இந்தியா |
இறப்பு | இந்தியா |
பணி | கட்டிடப் பொறியாளர் |
அறியப்படுவது | போலாவரம் திட்டம் |
விருதுகள் | பத்ம பூசண் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Our own MIT". Madras Musings. March 2014. பார்க்கப்பட்ட நாள் July 7, 2016.
- ↑ Biksham Gujja (2006). Perspectives on Polavaram, a Major Irrigation Project on Godavari. Academic Foundation. pp. 27–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7188-578-7.
- ↑ "150 years in the service of education". The Hindu. 29 January 2014. பார்க்கப்பட்ட நாள் July 7, 2016.
- ↑ "History". Madras Institute of Technology. 2016. பார்க்கப்பட்ட நாள் July 7, 2016.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on November 15, 2014. பார்க்கப்பட்ட நாள் January 3, 2016.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)