எல் .ஏ. கிருட்டிண அய்யர்
லட்சுமிநாராயணபுரம் அனந்தகிருட்டிண கிருட்டிண அய்யர் (Lakshminarayanapuram Ananthakrishna Krishna Iyer) ஓர் இந்திய மானுடவியலாளர் ஆவார். மானுடவியல் குறித்த தலைப்புகளில் பல நூல்களை இவர் எழுதியுள்ளார்[1]. இவர் சென்னை பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறையின் தலைவராக இருந்தார், கேரளாவின் பழங்குடி மற்றும் அட்டவணை சாதி மக்கள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டார். குறிப்பிடத்தக்க மானுடவியலாளரும் இவரது தந்தையுமான எல்.கே. அனந்தகிருட்டிண அய்யர் முன்னெடுத்த ஆய்வுகளின் தொடர்ச்சியே இவரது ஆய்வுகளாகும்[2]. இந்திய மானுடவியல்[3], இரண்டு தொகுதிகளாக எழுதப்பட்ட கேரளாவின் சமூக வரலாறு என்ற வரலாற்று ஆய்வு நூல்கள்[4], மூன்று தொகுதிகளாக எழுதப்பட்ட தென் கேரள பழங்குடிகள் தொடர்பான திருவாங்கூர் பழங்குடிகள் மற்றும் சாதிகள் என்ற நூல் போன்றவை[5] இவர் ஆங்கிலமொழியில் எழுதிய குறிப்பிடத்தக்க சில நூல்களாகும். அறிவியல் பங்களிப்பிற்காக இந்தியாவில் வழங்கப்படும் மூன்றாவது மிகவுயர்ந்த விருதான பத்ம பூசண் விருதை இந்திய அரசாங்கம் 1972 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கியது[6]. இவரது மகன் எல்.கே.பாலரத்னமும் ஓர் அறியப்பட்ட மானுடவியலாளர் ஆவார்[2]. இவரது மகள் எல்.கே.கங்கா பாகிரதி தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமைப்பொறியாளர் கே.ஏ.சீத்தாராமனின் மனைவியாவார். சென்னை உள்ளுர் வலையமைப்பின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்துறை பிரிவு வழங்கும், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் சிறந்த பங்களிப்புகளுக்கான 2016-2017 ஆம் ஆண்டுக்கான இளம் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர் சீத்தாராமன் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
எல்.ஏ.கிருட்டிண அய்யர் | |
---|---|
பிறப்பு | கேரளா, இந்தியா |
பணி | மானுடவியலாளர் வரலாற்றாளர் |
அறியப்படுவது | மாணுடவியல் கட்டுரைகள் |
பெற்றோர் | எல்.கே. அனந்தகிருட்டிண அய்யர் |
பிள்ளைகள் | எல்.கே.பாலரத்னம், கங்கா பாகீரதி |
விருதுகள் | பத்ம பூசண் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Listing on WorldCat". WorldCat. 2016. பார்க்கப்பட்ட நாள் 9 April 2016.
- ↑ 2.0 2.1 Lalita Prasad Vidyarthi; Binay Kumar Rai (1977). The Tribal Culture of India. Concept Publishing Company. pp. 58–. GGKEY:WY79CWZYNC2.
- ↑ L. A. Krishna Iyer and L. K. Bala Ratnam (1961). Anthropology in India. B. V. Bhavan. p. 257. இணையக் கணினி நூலக மைய எண் 639869627.
- ↑ L. A. Krishna Iyer (1968). Social History of Kerala. Book Centre Publications.
- ↑ K. Jose Boban (1 January 1998). Tribal Ethnomedicine: Continuity and Change. APH Publishing. pp. 318–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7648-027-7.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)
புற இணைப்புகள்
தொகு- "The Travancore Tribes and Castes on ResearchGate". ResearchGate. 2016. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1017/S0035869X00078461. பார்க்கப்பட்ட நாள் 9 April 2016.