எவன்சு அபொவு

எவன்ஸ்-அபவ் ( Heavens-Above) கிறிஸ் பீட் என்பவரால் தொடங்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற வலைதளம் ஆகும். பூமியைச் சுற்றி வரும் செயற்கைகோள்களை எந்தவிதக் கருவிகளும் இல்லாமல் ஆர்வலர்கள் காண உதவும் வகையில் இத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. வான்வெளியின் வரைபடத்தில் செயற்கைக் கோளின் கடப்புப் பாதையை குறிப்பிட்டு விண்மீன்களுடன் பின்னணியில் காணும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வலைதளம் அனைத்துலக விண்வெளி நிலையம் (ISS), இரிடியம் பட்டொளி ஆகிய நிகழ்வுகளை முதன்மையாகக் கொண்டுள்ளது. மேலும் தற்போது காணப்படும் வால் நட்சத்திரம், கோள்கள், குறுங்கோள்கள் முதலியனவற்றைப் பற்றிய தகவல்களையும் தருகிறது.

எவன்சு அபொவு
எவன்சு அபொவு முகப்புப் பக்கம்
கிடைக்கும் மொழி(கள்)பன்மொழி
உரிமையாளர்கிறிஸ் பீட்
உருவாக்கியவர்கிறிஸ் பீட்
அலெக்சா நிலை63,829 (as of மார்ச்சு 2012)[1]
தற்போதைய நிலைஉயிர்ப்புடன்
உரலிheavens-above.com


சான்றுகள்

தொகு
  1. "heavens-above.com Site Info". அலெக்சா இணையம், Inc. Archived from the original on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 17 March 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எவன்சு_அபொவு&oldid=3458657" இலிருந்து மீள்விக்கப்பட்டது