எஸ்ரா பவுண்ட்

எஸ்ரா வெஸ்டன் லூமிஸ் பவுண்ட் (அக்டோபர் 30, 1885 - 1 நவம்பர் 1972) ஒரு வெளிநாட்டு அமெரிக்க கவிஞர் மற்றும் விமர்சகர் ஆவார். நவீன கவிதை இயக்கத்தில் முக்கிய நபராகவும் இருந்தார். அவரது பங்களிப்பு படிமம் பற்றிய வளர்ச்சியுடன் தொடங்கியது, கிளாசிக்கல் சீன மற்றும் ஜப்பானிய கவிதைகளிலிருந்து பெறப்பட்ட ஒரு இயக்கம், தெளிவின்மை, துல்லியம் மற்றும் மொழிப் பொருளாதாரம் ஆகியவற்றை வலியுறுத்தியது. அவரது படைப்புகளில் ரிபோஸ்டஸ் (1912), ஹக் சேல்வின் மேபெர்லி (1920) மற்றும் முடிவற்ற 120-பிரிவு காவியங்கள், தி கான்டோஸ் (1917-1969) ஆகியவை அடங்கும்.

20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பல அமெரிக்க இலக்கிய பத்திரிகைகளின் வெளிநாட்டு ஆசிரியராக லண்டனில் பணியாற்றினார். TS எலியட், ஜேம்ஸ் ஜாய்ஸ், ராபர்ட் ஃப்ரோஸ்ட் மற்றும் எர்னெஸ்ட் ஹெமிங்வே போன்ற சமகாலத்தவர்களின் பணிகளை வடிவமைக்க உதவினார். முதல் உலகப் போர்ச் சமயத்தில், பவுண்ட் கிரேட் பிரிட்டனில் நம்பிக்கை இழந்து, வட்டி மற்றும் சர்வதேச முதலாளித்துவத்தின் மீது போர்க்குற்றம் சாட்டினார். அவர் 1924இல் இத்தாலிக்குக் குடிபெயர்ந்தார். 1930 மற்றும் 1940களில் அவர் பெனிட்டோ முசோலினியின் பாசிசத்தை தழுவியதோடு அடோல்ப் ஹிட்லருக்கும் ஆதரவு தெரிவித்தார். பிரிட்டிஷ் பாசிசவாதி சர் ஓஸ்வால்ட் மோஸ்லியின் வெளியீட்டிற்கு உதவியுள்ளார். இரண்டாம்   உலகப்       போரின்போது,  இத்தாலி நாட்டில் அமெரிக்கப் படைகளால் 1945ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இதன் விளைவாக, அமெரிக்காவின் ஃப்ராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் மற்றும் யூதர்களை விமர்சித்த நூற்றுக்கணக்கான வானொலி ஒலிபரப்புகளை அவர் வழங்கினார். அவர் பைசாவில் உள்ள ஒரு அமெரிக்க இராணுவ முகாமில் பல மாதங்களைச் சிறையில் கழித்தார். விசாரணையின்றியே 12 ஆண்டுகளுக்கும் மேலாக வாஷிங்டன், டி.சி.யில் செயின்ட் எலிசபெத்ஸ் மனநல மருத்துவமனையில் சிறை வைக்கப்பட்டார்.

இத்தாலியில் காவலில் இருந்தபோது, ​​பவுண்ட் காண்டோசின் பிரிவுகளில் வேலை செய்யத் தொடங்கினார். இவை பிசான் கான்டோஸ் (1948) என்ற பெயரில் பிரசுரிக்கப்பட்டன. இதற்காக 1949இல் போலிங்கென் பரிசைப் பெற்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது சக எழுத்தாளர்களின் பிரச்சாரத்தின் காரணமாக, அவர் 1958ஆம் ஆண்டில் செயிண்ட் எலிசபெத்ஸிலிருந்து விடுவிக்கப்பட்டு இத்தாலி திரும்பினார். அவருடைய அரசியல் கருத்துகள் அவருடைய வாழ்நாளில் சர்ச்சைக்குரியதாகவே இருந்தன. “பவுண்டின் எழுத்துகளில் சிறந்தது என்றால் அது, காண்டோஸ். அது இலக்கியமுள்ள வரையிலும் இருக்கும்” என்று ஹெமிங்வே குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்ப வாழ்க்கை (1885-1908)தொகு

பவுண்ட், இடாஹோ மாநிலத்தில் சிறிய, இரண்டே அறைகளுள்ள வீட்டில் ஹேடர் லூமீஸ் பவுண்ட் (1858 – 1942) மமற்றும் இசபெல் வெஸ்டன் (1860 – 1948) ஆகியோருக்குப் பிறந்தார். பெற்றோரின் முன்னோர்கள் இருவரும் 17ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்திலிருந்து குடியேறினர்.

அவரது தந்தையின் பக்கத்தில், குடியேறிய மூதாதையராக இருந்த ஜான் பவுண்ட், குவாக்கர் என்பவர் 1650ஆம் ஆண்டில் இங்கிலாந்திலிருந்து வந்தார். எஸ்ராவின் தாத்தா தட்டெஸ் கோல்மேன் பவுண்ட் (1832-1914), வடமேற்கு விஸ்கான்ஸ்சிலிருந்து குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். ஹோமர் மற்றும் இசபெல் அடுத்த ஆண்டில் திருமணம் செய்துகொண்டார் மற்றும் ஹோமர் ஹேலியில் ஒரு வீட்டைக் கட்டினார். இசபெல் ஹேலியில் மகிழ்ச்சியற்றவராக இருந்தார். எனவே 1887ஆம் ஆண்டில் அவர் 18 மாதக் குழந்தையான எஸ்ராவை அழைத்துக்கொண்டு நியூயார்க் சென்றார். 1889ஆம் ஆண்டில் பிலடெல்பியாவில் வேலை கிடைத்தவுடன் அவர்களைப் பின்தொடர்ந்தார் ஹோமர். பிறகு அவர்கள் பென்சில்வேனியாவிலுள்ள ஜென்கிண்டவுனுக்கு மாறினர். பிறகு, 1893ஆம் ஆண்டில் வின்கோட் நகரில் ஒரு ஆறு படுக்கையறை வீடு வாங்கிக் குடிமாறினர்.

கல்விதொகு

1892ஆம் ஆண்டில் ஜென்கிண்டவுனில் உள்ள மிஸ் எலியட் பள்ளி, 1893ஆம் ஆண்டில் வின்கோட்டில் உள்ள ஹெய்ட்காக் குடும்பத்தின் செல்டன் ஹில்ஸ் பள்ளி, 1894ஆம் ஆண்டு முதல் வின்கோட்டில் உள்ள புளோரன்ஸ் ரிட்பாத் பள்ளி ஆகியவற்றில் எஸ்ரா தன் கல்வியைத் தொடர்ந்தார். அவருடைய முதல் வெளியீடு 1896ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் தேதி ஜெண்கிண்டன் டைம்ஸ் க்ரோனிகளில் வெளிவந்தது. (ஈ.எல். பவுண்ட், வின்கோட், 11 வயது) என்று அவரைப்பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. 1896இல் நடந்த பிரதமர் தேர்தலில் தோற்றுப்போன வில்லியம் ஜென்னிங்க்ஸ் பிரையன் என்பவரைப் பற்றிய லிமரைக்கூ அது.

அவர் 13 வயதாக இருந்தபோது அவரது தாயார் மற்றும் ஃபிரான்சஸ் வெஸ்டன் (அத்தை ஃபிராங்க்) ஆகியோருடன் ஐரோப்பாவில் மூன்று மாதகாலச் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி ஆகிய இடங்களுக்கு முதல்முறையாகச் சென்றார். பிறகு அவர் தன்னுடைய 15 ஆவது வயதில் பென்சில்வேனியாவிலுள்ள லிபரல் ஆர்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்ரா_பவுண்ட்&oldid=2693513" இருந்து மீள்விக்கப்பட்டது