எஸ். ஆர். பார்த்திபன்

எஸ். ஆர். பார்த்திபன் (S. R. Parthiban) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் வழக்கறிஞரும் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், மேட்டூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

எஸ். ஆர். பார்த்திபன்
தொகுதி சேலம்
தனிநபர் தகவல்
பிறப்பு சேலம் மாவட்டம்
தேசியம் இந்தியர்
இருப்பிடம் சேலம்
சமயம் இந்து

இவர் தேமுதிகவில் இணைவதற்கு முன்பு ஜெகத்ரட்சகன் தொடங்கிய வீர வன்னியர் பேரவையில் இருந்தார். பின்னர் தேமுதிகவில் இருந்து வெளியே வந்த இவர் மக்கள் தேமுதிக என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கினார். பின்னர் அக்கட்சியைக் கலைத்து விட்டு, திமுக தலைவரான கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், சேலம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஆர்._பார்த்திபன்&oldid=3546278" இருந்து மீள்விக்கப்பட்டது