எஸ். என். எஸ். பொறியியல் கல்லூரி

கோயமுத்தூரிலுள்ள கல்லூரி

எஸ். என். எஸ். பொறியியல் கல்லூரி (தன்னாட்சி) ( SNS College of Engineering )

எஸ். என். எஸ். பொறியியல் கல்லூரி (தன்னாட்சி)
Other name
SNSCE
வகைதனியார்
உருவாக்கம்2007
முதல்வர்முனைவர் எஸ். சார்லஸ்
பணிப்பாளர்முனைவர் வி. பி. அருணாச்சலம்
நிருவாகப் பணியாளர்
224
மாணவர்கள்2162
அமைவிடம், ,
சுருக்கப் பெயர்SNSCE
இணையதளம்http://www.snsce.ac.in

கல்வி

தொகு

இக்கல்லூரி இளநிலைப் பொறியியல் (பி.இ.) படிப்பில் நான்கு படிப்புகளையும், தொழில்நுட்பப் படிப்பில் (பி.டெக்.) ஒரு படிப்பையும் வழங்குகிறது. முதுநிலைப் படிப்புகளில் முதுநிலைக் கணினி செயலிகள் (எம்.சி.ஏ.), முதுநிலை வணிக மேலாண்மை (எம்.பி.ஏ.) ஆகிய படிப்புகளை வழங்குகிறது.

இளநிலைப் படிப்புகள்

தொகு

பி.இ.

தொகு
  • மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல் (இ.சி.இ.)
  • கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (சி.எஸ்.இ.)
  • மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் (இ.இ.இ.)
  • இயந்திரப் பொறியியல்
  • குடிசார் பொறியியல்
  • ஆடை அலங்கார வடிவமைப்பு.

பி.டெக்.

தொகு
  • வேளாண் பொறியியல்
  • தகவல் தொழில்நுட்பம்.

முதுநிலைப் படிப்புகள்

தொகு
  • முதுநிலை வணிக மேலாண்மை (எம்.பி.ஏ.)
  • முதுநிலை கணினி பயன்பாடு (எம்.சி.ஏ.)
  • எம்.இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
  • எம்.இ. பதிகணினியியல் தொழில்நுட்பம்
  • எம்.இ. ஆற்றல் மின்னணு மற்றும் செலுத்துதல்
  • எம்.டெக். தகவல் தொழில்நுட்பம்
  • எம்.இ. உற்பத்திப் பொறியியல்.

சேர்க்கை நடைமுறை

தொகு

இளநிலை மாணவர்கள், அவர்களின் 12 ஆம் வகுப்பு (உயர்நிலைப் பள்ளி) மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கப்படுகின்றனர். சேர்க்கையானது, தமிழக அரசின் விதிமுறைகளின்படி, மாநில அரசு கலந்தாய்வு (டி.என்.இ.ஏ.) மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட நடைமுறைகள் மூலம் செய்யப்படுகிறது.

கணினி மற்றும் இணைய வசதிகள்

தொகு

இக்கல்லூரியில் 680 பென்டியம் டூயல் கோர் வசதியைக் கொண்ட கணினி மையம் உள்ளது. இந்த சேவையகத்தில் ஜியோன் டூயல் பென்டியம் டி செயலிகள், 2 ஜிபி ரேம் மற்றும் எஸ்சிஎஸ்ஐ ஹார்ட் டிஸ்க் செயலிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலே குறிப்பிடப்பட்ட உள்ளமைப்புகளுடன் 25 கணினிகளைக் கொண்டும், 24x7 இணைய இணைப்பும் உள்ளது. முழு வளாகத்திலும் இணைய வலைப்பின்னல் உள்ளது.

நூலகம்

தொகு

கல்லூரியில் 22,228 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் 121 பத்திரிகைகள் கொண்ட நூலகம் உள்ளது. பெரும்பாலான புத்தகங்கள் தொழில்நுட்பம் சார்ந்தவை என்றாலும், தன்முன்னேற்றம் குறித்த புத்தகங்களும் கிடைக்கின்றன. இந்த நூலகத்தில் 1,345 க்கும் மேற்பட்ட கல்வி சார்ந்த குறுந்தகடுகள் உள்ளன. நூலகத்தில் புத்தகத் தேடலை எளிதாக்க, நூல் தலைப்புகளின் பட்டியல் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. மேலும், எண்ணியல் நூலகமானது, 12 டெர்மினல்கள் மற்றும் அகண்ட அலைவரிசை இணைய இணைப்பு கொண்டுள்ளது.

விளையாட்டு

தொகு

இக்கல்லூரி வளாகத்தில் பல்நோக்கு மைதானம், உடற்பயிற்சி கூடம் போன்றவற்றைக் கொண்டுள்ளது. இங்கு பின்வரும் விளையாட்டு வசதிகள் உள்ளன:

வெளி இணைப்புகள்

தொகு