எஸ். செம்மலை

எஸ். செம்மலை என்பவர் ஓர் தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் அமைச்சராவார். இவர் சேலம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் மீது "கொலை செய்ய முயற்சி" (ஐபிசி பிரிவு -307) மற்றும் " ஒரு பெண் தனது கணவன் அல்லது கணவனது  உறவினரால் கொடூரமாகக் கொடுமைப்படுத்துதல்" (ஐபிசி பிரிவு -498 ஏ) தொடர்பான ஒரு குற்றச்சாட்டு உள்ளது.[1]

எஸ். செம்மலை
பிறப்புசூன் 9, 1945 (1945-06-09) (அகவை 75)
மொலைப்பட்டி, சேவம், தமிழ்நாடு
அரசியல் கட்சிஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கைத்
துணை
திருமதி. புஷ்பா
பிள்ளைகள்2 (மகன்கள்), 2 (மகள்கள்)

இவர் முன்னர், தாரமங்கலம் தொகுதியில் 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகவும், 1984 தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராகவும் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இவர் ஓமலூர் தொகுதியில் இருந்து 2001 தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, [2] 2001 தமிழக அமைச்சரவையில் நல்வாழ்வுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._செம்மலை&oldid=2568677" இருந்து மீள்விக்கப்பட்டது