எஸ். பி. பிள்ளை
எஸ். பி. பிள்ளை (28 நவம்பர் 1913 - 12 ஜூன் 1985) என்பவர் இந்தியத் திரைப்படம் மற்றும் நாடக நடிகர் ஆவார். இவர் மலையாளத் திரைப்படங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்ததற்கு மிகவும் பிரபலமானவர்.
எஸ். பி. பிள்ளை | |
---|---|
பிறப்பு | எஸ். பங்கஜாக்சன் பிள்ளை 28 நவம்பர் 1913 ஏற்றுமானூர், திருவிதாங்கூர், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 12 சூன் 1985 ஏற்றுமானூர், கோட்டயம் மாவட்டம், இந்தியா | (அகவை 71)
செயற்பாட்டுக் காலம் | 1940–1973 |
வாழ்கை
தொகுஎஸ். பி. பிள்ளை என்கிற எஸ். பங்கஜாக்சன் பிள்ளை 1913 ஆம் ஆண்டு கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கோயில் நகரமான ஏற்றுமானூரில் பிறந்தார். இவரது தந்தை சங்கரப்பிள்ளை, ஒரு காவலர் ஆவார். இவர் இளம் வயதிலேயே பெற்றோரை இழந்தார். அடிப்படைக் கல்வி கற்க முடியாமல் கலமண்டலத்தில் சில ஆண்டுகள் ஒட்டன் துள்ளல் பயிற்சி பெற்றார். நாடகங்களில் துணை நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது முதல் படமான அப்பன் தம்புரானின் பூதராயர் வெளியாகவில்லை. முதலில் வெளியான இவரது படம் ஞானாம்பிகா (1940). நல்ல தங்க (1951) என்ற வெற்றிப் படத்திற்குப் பிறகு நகைச்சுவை நடிகராகப் புகழ் பெற்றார். சினேகசீமா, நாயாறு பிடிச்சப்புலிவாலு, செம்மன், பார்யா, விடருண்ணா மோட்டுகள் உட்பட 300க்கும் மேற்பட்ட படங்களில் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்தார். உதயாவின் கிட்டத்தட்ட அனைத்து வடக்கன் பாட்டு படங்களிலும் பாணனார் வேடத்தில் நடித்தார். [1] 1957 ஆம் ஆண்டு தஸ்கரவீரன் திரைப்படத்திற்காக வாயாரனு நமக்கு தெய்வம் என்ற பாடலைப் பாடியுள்ளார். சஞ்சாரி (1981) இவரது கடைசி படம். டாக்ஸி டிரைவர் படத்தில் நடித்ததற்காக இவர் இரண்டாவது சிறந்த நடிகருக்கான கேரள அரசு திரைப்பட விருதை பெற்றார். [2] இவர் 1985 சூன் 12 அன்று இறந்தார். நடிகை மஞ்சு பிள்ளை இவரது பேத்தி.
விருதுகள்
தொகுகேரள அரசு திரைப்பட விருதுகள் :
- இரண்டாவது சிறந்த நடிகர் – 1977 – டாக்சி டிரைவர்
- திருவிதாங்கூர் தேவசம் போர்டு இவருக்கு கலாரத்தினம் விருது வழங்கி கவுரவித்தது
- மயூரா விருது