எஸ். பி. முத்துக்குமரன்
எஸ். பி. முத்துக்குமரன் (சூன் 16, 1968 - ஏப்ரல் 1, 2012) ஒரு தமிழக அரசியல்வாதி. இவர் 2011ல் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய பொதுவுடமைக் கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வாழ்க்கைக் குறிப்பு
தொகுமுத்துக்குமரன் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள நெடுவாசல் கிராமத்தில் வேளாண்மைக் குடும்பத்தில் சி. பழனிவேல் - முல்லையம்மாள் தம்பதிக்கு ஒரே மகனாக பிறந்தார். பள்ளிப் படிப்பை சொந்த ஊரிலும், கல்லூரிப் படிப்பை புதுகை மாமன்னர் கல்லூரியிலும் முடித்தார்.
அரசியலில்
தொகுகல்லூரிப் பருவத்தில் மாணவர் பேரவைத் தேர்தலில் வென்று, தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இடதுசாரி இயக்கக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து கொண்டார். கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய அவர், 2009-ம் ஆண்டு கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலராகப் பொறுப்பேற்றார். 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு, திமுக வேட்பாளரைவிட, சுமார் 2 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
மறைவு
தொகுமுத்துக்குமரன் தனது 44வது அகவையில் 01.04.2012 அன்று சொக்கநாதபட்டியில் இடம்பெற்ற சாலை விபத்தில் காலமானார்.[1][2] இவருக்கு மனைவி, ஒரு மகன், மற்றும் ஒரு மகள் உள்ளனர்.