எஸ். வி. எஸ் கல்வி நிறுவனம்
எசு. வி. எசு. கல்வி நிறுவனம் என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கோயம்புத்தூர் அரசம்பாளையத்தில் அமைந்துள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். [1] இந்த கல்லூரிக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு ஒப்புதல் அளித்துள்ளது, மேலும் இது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வளாகமானது டி.யு.வி ரைன்லேண்டிடன் ஐஎஸ்ஓ சான்றிதழ் பெறப்படுடுள்ளது. மேலும் இக்கல்லூரியானது தேசிய வர்க்க ஆய்வகம் மற்றும் வகுப்பறை வசதிகளை கொண்டுள்ளது.
எசு.வி.எசு கல்வி நிறுவனம் | |
குறிக்கோளுரை | Educate, Innovate |
---|---|
வகை | தனியார் |
உருவாக்கம் | 2009 |
தலைவர் | எசு. சந்திரசேகரன் |
முதல்வர் | டி. கண்ணன் |
கல்வி பணியாளர் | 203 |
நிருவாகப் பணியாளர் | 100 |
மாணவர்கள் | >10,000 |
அமைவிடம் | கோயம்புத்தூர் அரசம்பாளையம் , , இந்தியா 10°51′11″N 77°2′6″E / 10.85306°N 77.03500°E |
சேர்ப்பு | அண்ணா பல்கலைக்கழகம் |
இணையதளம் | svscolleges |
நிகழ்வுகள்
தொகுஇக்கல்லூரியானது ஆண்டுதோறும் பல்வேறு நிகழ்வுகளை நடத்துகிறது. இவற்றில் முதன்மையாக கல்லூரி மாணவர்களே கலந்து கொள்கின்றனர். இந்த நிறுவனத்தில் பயிலும் மாணவர்களில் முதன்மையானவர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளம் ஆகியவற்றின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் . இக்கல்லூரியியல் ஆண்டுதோறும் இன்னோவர் என்ற பெயரில் நடத்தப்படும் தொழில்நுட்ப கருத்தரங்கு என்பது நிறுவனத்தின் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த கருத்தரங்கில் அருகிலுள்ள கல்லூரி மாணவர்கள் தங்கள் திட்டங்களை முன்வைக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் மாணவர்களின் புதிய யோசனைகளை காட்டும் விதத்தில் அறிவியல் கண்காட்சியும் நடத்தப்படுகிறது. கட்டிடக்கலை மாநாடுகளானது இவ்வளாகத்தைச் சேர்ந்த கட்டிடக்கலை மாணவர் மற்றும் ஊழியர்களால் நடத்தப்படுகின்றன. "ஆண்டு விழாவானது" ஒவ்வொரு ஆண்டும் இறுதி ஆண்டு மாணவர்களை வழியனுப்பும் நிகழ்வாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டவிழாவில் பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர்.
குறிப்புகள்
தொகு- ↑ "S.V.S. College of Engineering, Coimbatore". Collegesintamilnadu.com. பார்க்கப்பட்ட நாள் 2012-09-03.