எ.கோ. அரிகுமார்
எ.கோ. அரிகுமார் (E.Harikumar) இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மலையாள மொழி புதின ஆசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் 1943ஆம் ஆன்டு சூலை மாதம் 13ஆம் நாளன்று கோழிக்கோடு மற்றும் கொச்சிக்கு இடையில் அமைந்துள்ள கடலோர நகரமான பொன்னானியில் பிறந்தார். அரிகுமாரின் பெற்றோர் பிரபல கவிஞரும் நாடக ஆசிரியருமான எடசேரி கோவிந்தன் நாயர் மற்றும் ஈ. சானகி அம்மா ஆகியோராவர். இவரது தாயாரும் ஆரம்ப காலங்களில் கவிதைகள் மற்றும் கதைகளை எழுதியவராவார்.
எ.கோ. அரிகுமார் | |
---|---|
பிறப்பு | பொன்னானி, கேரளம், இந்தியா | 13 சூலை 1943
இறப்பு | 24 மார்ச்சு 2020 | (அகவை 76)
பணி | புதின ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர் |
வலைத்தளம் | |
e-harikumar |
அரிகுமார் கேரள அரசாங்கத்தின் கலாச்சாரத் துறையின் கீழ் இயங்கிவரும் முன்னணி இலக்கிய நிறுவனமான கேரள சாகித்ய அகாதமியின் உறுப்பினராக 1998 முதல் 2006 வரை இரண்டு முறை இருந்தார்.
விருதுகள்
தொகு- 1998 இல் "சுக்ஷிச்சு வச்சா மயில்பீலி" புத்தகத்திற்கான நாலப்பதன் விருது
- 2012 ஆம் ஆண்டில் "ஶ்ரீபார்வதியு பாடம்" என்ற திரைப்படத்திற்கான சிறந்த கதைக்கான கேரள மாநில சாலச்சித்ரா அகாதமி விருது
படைப்புகளின் பட்டியல்
தொகுபுதினங்கள்
தொகு- உறங்குன்ன சர்ப்பங்கள்
- ஆசக்டியுடே அக்னிநாளங்கள்
- ஒரு குடும்ப புராணம்
- என்ஜின் டிரைவரை சிநேகிச்ச பெண்குட்டி
- அயனங்கள்
- தடாகதீரத்து
- பிரனாயதின்னோரு சாப்ட்வேர்
நினைவுக் குறிப்பு
தொகு- நீ எவிடனென்கிலும்
- நீ ஓரமாக்கல் மரிக்கதிரிக்கட்டே
கதைகள்
தொகு- கூராகல்
- டைனோசரின்டே குட்டி
- கனடாயில் நின்னொரு ராஜகுமாரி
- ஶ்ரீ பார்வதியுடே பாதம்
- பசப்பயினே பிடிக்கன்
- தூரே ஒரு நகரத்தில்
- கருத்த தம்புராட்டி
- அனிதாயுடே வீடு
- இளவெயிலின்டே சாந்த்வானம்
- வெள்ளித்திரையிலேன்னபோல
- என்டே ஸ்த்ரிகள்
எ. கோ. அரிகுமார் 1962 முதல் 2013 வரை உள்ள தனது முழுமையான படைப்புகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.[1] இவர் தனது படைப்புகள் முழுமையும் குறுவட்டு வடிவில் வெளியிட்டுள்ளார். இந்த குறுவட்டு ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் நூலகங்களுக்கானது.
இறப்பு
தொகுஇவர் மார்ச் 24, 2020 அன்று இறந்தார்.