எ. சி. சிம்காத்ரி
எட்லா சி. சிம்கத்ரி (Yedla C. Simhadri) (1941-22 மே 2021) என்பவர் ஓர் இந்தியக் கல்வியாளரும் நிர்வாகியும் ஆவார். பனாரசு இந்து பல்கலைக்கழகம், பட்னா பல்கலைக்கழகம், ஆந்திரா பல்கலைக்கழகம் மற்றும் ஆச்சார்யா நாகார்ஜுனா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல இந்தியப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராக இருந்துள்ளார்.[1]
எட்லா சி. சிம்கத்ரி | |
---|---|
2017-ல் எ. சி. சிம்கத்ரி | |
21வது துணைவேந்தர், பனாரசு இந்து பல்கலைக்கழகம்]] | |
பதவியில் 31 ஆகத்து 1998 – 20 பிப்ரவரி 2002 | |
நியமிப்பு | கே. ஆர். நாராயணன் |
முன்னையவர் | அரி கௌதம் |
பின்னவர் | பா. இரா. ராவ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1941 |
இறப்பு | 22 மே 2021 (வயது 79-80) |
கல்வி
தொகுசிம்காத்ரி ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் சமூகப் பணி முதுகலைப் பட்டமும், இளங்கலைச் சட்டப் பட்டமும் பெற்றார். பின்னர் அமெரிக்காவில் உள்ள இந்தியானா மாநில பல்கலைக்கழகத்தில் குற்றவியல் மற்றும் சமூகவியலில் முதுகலைப் பட்டத்தினைக் கல்வி உதவித்தொகையுடன் முடித்தார்.[2] கேசு வெசுடர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.[3] இலண்டனில் உள்ள பொதுநலவாய நிறுவனத்தில் முனைவர் பட்டத்திற்குப் பிந்தைய ஆராய்ச்சி பட்டம் பெற்றார். மேற்கு செருமனி இளைஞர் பணி பட்டமும் பெற்றார்.[2]
கல்வி வாழ்க்கை
தொகு1980களில் சிம்கத்ரி ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பேராசிரியராகப் பணியாற்றினார். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள பல பல்கலைக்கழகங்களில் வருகைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ள சிம்கத்ரி பல புத்தகங்களையும் 50க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.[4] ஐக்கிய நாடுகள் அவை, யுனெஸ்கோ மற்றும் ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றினார்.[3]
1991ஆம் ஆண்டில் ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பதவியேற்று 1995 வரை பணியாற்றினார். 1997ஆம் ஆண்டில் பனாரசு இந்து பல்கலைக்கழக வளாகத்தில் வன்முறை ஏற்பட்டபோது இவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். 2002 வரை பனாரசு பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்த இவர், பல்கலைக்கழக வளாகத்தைப் பாதுகாப்பானதாகவும், கல்வி நடவடிக்கைகளுக்கு உகந்ததாகவும் மாற்றுவதில் பங்களித்தார்.[5][6]
இக்காலக்கட்டத்தில் பட்னா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இரண்டு முறை (2006 முதல் 2008 வரை; 2014 முதல் 2017 வரை) பணியாற்றினார்.[7][8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Banaras Hindu University, Varanasi". www.bhu.ac.in. Archived from the original on 3 August 2013.
- ↑ 2.0 2.1 Development Of Emerging World Youth (in ஆங்கிலம்). Mittal Publications. 1989. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7099-131-1.
- ↑ 3.0 3.1 Simhadri, Y. C. (1989). Youth in the Contemporary World (in ஆங்கிலம்). Mittal Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7099-117-5.
- ↑ Simhadri, Y. C. (1991). Global Youth, Peace, and Development: The Role of Science and Technology in Contemporary Society (in ஆங்கிலம்). Ajanta Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-202-0290-0.
- ↑ "Banaras Hindu University, Varanasi". www.bhu.ac.in. Archived from the original on 3 August 2013. பார்க்கப்பட்ட நாள் 2022-01-13.
- ↑ "बीएचयू के पूर्व कुलपति प्रो.वाईसी सिम्हाद्री का निधन, कड़े प्रशासक के रूप में किए जाएंगे याद". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-01-13.
- ↑ Secretariat, President's (26 February 2020). "Prof. Y.C. Simhadri, former Vice-Chancellor of Patna University..."
- ↑ "::: Welcome To Patna U N I V E R S I T Y :::". www.patnauniversity.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2022-01-13.