எ. தி. குண்டேவியா
எசதேசார்ட் தின்சா குண்டேவியா (Yezdezard Dinshaw Gundevia) ஜவகர்லால் நேரு மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் கீழ் பணியாற்றிய இந்தியக் குடிமைப் பணி அதிகாரியும், இராஜதந்திரியும் மற்றும் வெளியுறவுச் செயலாளரும் ஆவார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில்
தொகுகுன்டேவியா சரதுச பார்சி சமூகத்தைச் சேர்ந்தவர்.[1] இவர் 1929 இல் பம்பாய் வில்சன் கல்லூரியில் பட்டம் பெற்றார். 1930 இல் இந்தியக் குடிமைப் பணியில் சேர்ந்தார். பின்னர் ஐக்கிய மாகாணங்களுக்கு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அங்கு இவர் 1945 வரை பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றினார்.[2]
இராஜதந்திர வாழ்க்கை
தொகுயங்கோன் பயணத்தைத் தொடர்ந்து, குன்டேவியா 1948 முதல் 1950 வரை வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் மாஸ்கோவிலுள்ள இந்தியத் தூதரகத்தில் ஆலோசகராக பணியாற்றினார். 1953 - 1954 இல், இவர் ஆஸ்திரியா மற்றும் வாடிகனுக்கான ஒரே நேரத்தில் அங்கீகாரத்துடன் சுவிட்சர்லாந்திற்கான இந்திய தூதராக பணியாற்றினார். இதைத் தொடர்ந்து இலண்டனில் துணை உயர் ஆணையராகவும் (1954-56) இலங்கையில் உயர் ஆணையராகவும் (1957-60) பணியாற்றினார்.[2] 1961 முதல் 1964 வரை, வெளிவிவகார அமைச்சில் பொதுநலவாயச் செயலாளராக இருந்த கென்டேவியா 1964 இல் வெளியுறவு செயலாளராக ஆனார். நேருவின் கடைசி வெளியுறவுச் செயலாளராக இருந்த இவர், லால் பகதூர் சாஸ்திரியின் இரண்டு ஆண்டு பதவிக்காலத்தில் அவர் தலைமையில் பணியாற்றினார்.[3] பின்னர் இவர் இந்தியக் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் செயலாளராக பணியாற்றினார்.[4] குன்டேவியா, காஷ்மீர் தொடர்பான கொள்கை வகுப்பதில் நெருக்கமாக ஈடுபட்டு, ஐக்கிய நாடுகள் சபையில் காஷ்மீர் விவகாரங்களைக் கையாளும் சிறப்புச் செயலாளராகவும், வெளியுறவுச் செயலாளராகவும் பணியாற்றினார். 1962-63 காலகட்டத்தில் காஷ்மீர் பற்றி சுவரண் சிங் - சுல்பிக்கார் அலி பூட்டோ ஆகியோருக்கிடையேயான பேச்சுக்களின் போது இந்தியக் குழுவின் ஒரு பகுதியாகவும் இருந்தார்.[5] 1965 இல் நாகாலாந்து கிளர்ச்சியாளர்களுடனான அமைதிப் பேச்சுவார்த்தையின் முதல் கட்டத்தின் போது இந்தியக் குழுவிற்கு வெளியுறவுச் செயலாளராக குன்டேவியா தலைமை தாங்கினார்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Convince the Opposition". http://www.sunday-guardian.com/analysis/convince-the-opposition.
- ↑ 2.0 2.1 "Outside the Archives - Y D Gundevia". பார்க்கப்பட்ட நாள் 2 December 2012.
- ↑ Lavakare, Arvind. "Another summit, another surrender?". பார்க்கப்பட்ட நாள் 2 December 2012.
- ↑ "Outside the Archives". பார்க்கப்பட்ட நாள் 2 December 2012.
- ↑ Khan, Nyla Ali. "Tribute to Begum Akbar Jehan Abdullah". பார்க்கப்பட்ட நாள் 2 December 2012.
- ↑ Means, Gordon P. (October 1971). "Ceasefire Politics in Nagaland". Asian Survey 11 (10): 1005–1028. doi:10.2307/2642757. https://archive.org/details/sim_asian-survey_1971-10_11_10/page/1005.