ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி

ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி அல்லது அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி (ஆங்கில மொழி: Ekalavya Model Residential School, EMRS) என்பது இந்தியாவிலுள்ள பழங்குடியின மாணவ, மாணவியர்களுக்கான உண்டு உறைவிடப் பள்ளித் திட்டம் ஆகும். நகரங்களைவிட்டு தொலைவில் வசிக்கும் ஆதிவாசி பழங்குடியின மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்க இந்தியாவின் பழங்குடியினர் அமைச்சகத்தால் இத்திட்டம் 1997-98ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டது.[1] இப்பள்ளிகள் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 275(1) இன் கீழ் மானியங்களுடன் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் தொடங்கப்படுகின்றன. 2018 -19 ஆண்டு நிதிநிலை அறிக்கையின்படி ஒரு வட்டத்தில் 50% மேல் பழங்குடினர் இருந்தாலோ குறைந்தது 20,000 பழங்குடியினர் இருந்தாலோ, அங்கெல்லாம் 2022 ஆம் ஆண்டிற்குள் ஏகலைவா மாதிரிப் பள்ளியைத் தொடங்க வேண்டும் என இலக்கு வைக்கப்பட்டுள்ளது.[2]

ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி
அமைவிடம்
இந்தியா முழுவதும்
இந்தியா
தகவல்
வகைபொதுத் துறை
தொடக்கம்1998
தரங்கள்6 முதல் 12-ஆம் வகுப்பு வரை
இணைப்புசிபிஎஸ்இ/மாநிலப் பாடத்திட்டம்
இணையம்

இங்கே மாணவர்கள் கட்டாயம் தங்கிப் படிக்கவேண்டும். இப்பள்ளி ஜவஹர் நவோதயா வித்தியாலயம் போல மாணவர்களுக்கு உணவுடன் தங்குமிடமும் கட்டணமின்றி வழங்கப்படுகிறது. ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான கல்வி அந்தந்த மாநில அரசின் விருப்பப்படி சிபிஎஸ்இ அல்லது மாநிலப் பாடத்திட்டத்தில் கல்வி கற்பிக்கப்படுகிறது.

இந்தியாவில் 690 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளை அமைக்க இந்திய அரசின் பழங்குடியினர் நல அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. தற்போது 401 பள்ளிகள் செயல்பாட்டில் உள்ளது. 401 பள்ளிகள் 1,13,275 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அதில் ஆண் மாணவர் எண்ணிக்கை 56,107 மற்றும் பெண் மாணவியர் எண்ணிக்கை 57,168 ஆகும்.[3]

தமிழகத்தில் தொகு

தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமலை, சேலம் பெத்தநாயக்கன்பாளையம், நீலகிரி, திருவண்ணாமலை கலசபாக்கம், வேலூர் ஆதனவூர், நாமக்கல் கொல்லிமலை என ஆறு பள்ளிகள் செயல்படுகின்றன. [4][5] நீலகிரி மாவட்டம், குஞ்சப்பனையில் உள்ள மாதிரிப் பள்ளியில் 2019 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்வில் 100% தேர்ச்சிபெற்றனர்.[6]இருளர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பயனடைவதற்காக, 17 கோடி ரூபாயில், மத்திய அரசின் 'ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளி', வண்டலுார் அருகே கட்டப்பட்டு உள்ளது. அனைத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள இப்பள்ளியில் இருளர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தங்கி சேர்ந்து படித்து, பயனடைய அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் பழங்குடிஇனத்தைச் சேர்ந்த குழந்தைகள், தமிழகத்தில், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், திருப்பத்துார், ஊட்டி ஆகிய மாவட்டங்களில், அரசு 'ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளிகள்' நிறுவப்பட்டு, ஆங்கில வழியில் பாடம் பயிற்றுவிக்கப் படுகிறது.சேலம் மாவட்டத்தில் மட்டும், இரண்டு பள்ளிகள் உள்ளன. பழங்குடியின மாணவர்கள் அங்கு, ஆர்வமாக படித்து வருகின்றனர்.[7]

இவற்றையும் பார்க்க தொகு

அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகள்

மேற்கோள்கள் தொகு

  1. "1st National EMRS National Sports Meet, 2019 Began at Hyderabad". 15 January 2019.
  2. "Eklavya Model Residential Schools : PIB". 17 December 2018.
  3. Eklavya Model Residential Schools (EMRS)
  4. "பள்ளிப் பட்டியல்". பழங்குடி அமைச்சகம். https://tribal.nic.in/DivisionsFiles/sg/ListEMRS060418.pdf. பார்த்த நாள்: 25 September 2019. 
  5. "Eklavya model school to help ST students in every block". நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ். http://www.newindianexpress.com/states/tamil-nadu/2018/feb/02/eklavya-model-school-to-help-st-students-in-every-block-1767068.html. பார்த்த நாள்: 25 September 2019. 
  6. "10-ம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி! - அசத்திய அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி". விகடன். https://www.vikatan.com/news/education/156266-ooty-government-school-achieves-100-percent-result-in-sslc. பார்த்த நாள்: 25 September 2019. 
  7. 'ஏகலைவா பள்ளி' ரூ.17 கோடியில் தயார்: பழங்குடி மாணவர்களுக்கு அழைப்பு