ஏகானைட்டு

பைலோசிலிக்கேட்டு கனிமம்

ஏகானைட்டு (Ekanite) என்பது Ca2ThSi8O20 அல்லது (Ca,Fe,Pb)2(Th,U)Si8O20 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் அசாதாரணமான ஒரு கனிமச் சேர்மமாகும். அணைவு சிலிக்கேட்டு வகையான சிடீயசைட்டு வகை கனிமத்தில் ஓர் உறுப்பினராக ஏகானைட்டு உள்ளது. இயற்கையாகவே கதிரியக்கத் தன்மையுடன் இருக்கும் மணிக்கற்கள் சிலவற்றில் இதுவும் ஒன்றாகும். உருசியா மற்றும் வட அமெரிக்காவில் ஏகானைட்டு படிவுகள் காணப்படுகின்றன என்றாலும், பெரும்பாலான ஏகானைட்டு இலங்கையில் வெட்டியெடுக்கப்படுகிறது. கதிரியக்கத்தன்மை காலப்போக்கில் கட்டமைப்புச் சிதைவு எனப்படும் செயல்முறையில் படிக கட்டமைப்பைச் சிதைப்பதால் தெளிவான மற்றும் வண்ணமயமான மணிக்கற்கள் அரிதானவையாகின்றன.

ஏகானைட்டு
Ekanite
ஏகானைட்டு படிகத் துண்டு
பொதுவானாவை
வகைசிலிக்கேட்டு கனிமம்
வேதி வாய்பாடுCa2ThSi8O20 or (Ca,Fe,Pb)2(Th,U)Si8O20
இனங்காணல்
நிறம்பச்சை, மஞ்சள், அடர் சிவப்பு
படிக இயல்புகூர்நுனிக்கோபுர படிகங்கள், மணிகள் முதல் பொதி வரை
படிக அமைப்புநாற்கோணம்
பிளப்புதனித்தன்மை {101} இல்
முறிவுஒழுங்கற்று நொறுங்கும்,
மோவின் அளவுகோல் வலிமை4.5
மிளிர்வுகண்ணாடி பளபளப்பு
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளி கசியும் மற்றும் ஒளி புகும்
ஒப்படர்த்தி2.95 - 3.28
ஒளியியல் பண்புகள்ஒற்றையச்சு (-)
ஒளிவிலகல் எண்nω = 1.580 nε = 1.568
இரட்டை ஒளிவிலகல்δ = 0.012
2V கோணம்10 - 15°
பிற சிறப்பியல்புகள்கதிரியக்கம், கட்டமைப்புச் சிதைவு
மேற்கோள்கள்[1][2][3]

இலங்கையின் சபரகமுவா மாகாணத்தின் இரண்டு மாவட்டங்களில் ஒன்றான இரத்தினபுரி மாவட்டத்தின் ஏகிலியகோடா நகரத்தில் ஏகானைட்டு படிவுகள் காணப்படுகின்றன. 1955 ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த அறிவியலாளர் எப்.எல்.டி. ஏகாநாயகே முதன்முதலில் இதைக் கண்டுபிடித்தார்[4][5]. இவர் நினைவாகவே கனிமத்திற்கு ஏகானைட்டு எனப் பெயரிடப்பட்டது.

இலங்கையில் கனிம மாதிரிகள் தீங்கு விளைவிக்கும் கூழாங்கற்களாகத் தோன்றுகின்றன. கனடாவின் யூக்கானிலுள்ள கல்லறை கல் மலையில் இத்தாது ஓர் ஊடுறுவிய பனிப்பாறையாக ஒழுங்கற்ற கற்பாறையில் காணப்படுகிறது. இத்தாலியின் அல்பன் மலையில் இது எரிமலை வெளியேற்ற உமிழ்வில் காணப்படுகிறது.

இலங்கையின் மொனராகலை மாவட்டத்தில் உள்ள ஒக்கம்பிடியவில் உள்ள ஏகானைட்டு கனிமம் சுமார் 560 மில்லியன் வருடங்கள் பழமையானது என யுரேனியம்-ஈயம் காலமதிப்பீடு தெரிவிக்கிறது.[6]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் ஏகானைட்டு கனிமத்தை Ek[7]என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Mindat
  2. Handbook of Mineralogy
  3. Ekanite Mineral Data at Webmineral
  4. New Minerals, American Mineralogist
  5. B. W. Andeson; G. F. Claringbull; R. J. Davis; D. K. Hill (1961). "Ekanite, a new metamict mineral from Ceylon". Nature 190 (4780): 997. doi:10.1038/190997a0. Bibcode: 1961Natur.190..997A. 
  6. Wade, Andrew D.; Beckett, Ronald G.; Conlogue, Gerald J.; Gonzalez, Ramon; Wade, Ronn; Brier, Bob (2015). "MUMAB : A Conversation With the Past". The Anatomical Record 298 (6): 954–973. doi:10.1002/ar.23152. பன்னாட்டுத் தர தொடர் எண்:1932-8486. 
  7. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏகானைட்டு&oldid=3937678" இலிருந்து மீள்விக்கப்பட்டது