ஏசியான் கால்பந்துக் கூட்டமைப்பு

ஏசியான் கால்பந்துக் கூட்டமைப்பு (ASEAN Football Federation (AFF)) என்பது ஆசிய கால்பந்துக் கூட்டமைப்புக்குள் இருக்கும் சிறு கூட்டமைப்பாகும். இது தென்கிழக்கு ஆசியாவை மையமாகக் கொண்டது. ஏசியான் என்பது தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு ஆகும்.

ஏசியான் கால்பந்துக் கூட்டமைப்பு
உருவாக்கம்31 January 1984 [1]
வகைSports organization
தலைமையகம்Petaling Jaya, Selangor, மலேசியா
உறுப்பினர்கள்
12 உறுப்பு சங்கங்கள்
President
மலேசியா HE Sultan Ahmad Shah
வலைத்தளம்www.aseanfootball.org

வரலாறு தொகு

புரூணை, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்சு, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகியவை இணைந்து 1984-ஆம் ஆண்டில் ஏசியான் கால்பந்துக் கூட்டமைப்பை தோற்றுவித்தன. கம்போடியா, லாவோஸ், மியான்மர், வியட்நாம் ஆகிய கால்பந்துக் கூட்டமைப்புகள் 1996-ஆம் ஆண்டில் இணைந்தன.

1996-ஆம் ஆண்டில், முதல் ஏசியான் கால்பந்துப் போட்டியை நடத்தியது. இதன்பின்னர், பல்வேறு வகையான போட்டிகளை வெவ்வேறு நிலை கால்பந்து அணிகளுக்கு நடத்தியுள்ளது.

2004-ஆம் ஆண்டில் கிழக்குத் திமோர் உறுப்பினராக இணைந்து. சனவரி 1, 2006, அன்று ஆசிய கால்பந்துக் கூட்டமைபில் ஆத்திரேலியக் கால்பந்துக் கூட்டமைப்பு இணைந்தது. ஏசியான் கால்பந்துக் கூட்டமைப்பில் அழைப்பு-இணைவு உறுப்பினராக ஆத்திரேலியா இணைந்த பின்னர், ஏசியான் இளையோர் கால்பந்துப் போட்டித்தொடர்களுக்கு தனது இளையோர் அணிகளை ஆத்திரேலியா அனுப்பியது. ஆகத்து 27, 2013, அன்று முழு உறுப்பினராக ஆத்திரேலியா இணைந்தது.

தலைவர்கள் தொகு

ஆண்டுகள் பெயர்
1984 – 1994   ஹாஜி கர்டோனோ
1994 – 1996   விஜித் கெட்கேவ்
1996 – 1998   தெங்கு தான் ஸ்ரீ டத்தோஸ்ரீ அகமத் ரிதாவுதீன்
2007 – 2019   சுல்தான் ஹாஜி அகமது ஷா
2019 – தற்போதுவரை   கீவ் சமேத்

உறுப்பு நாடுகள் தொகு

இதில் 12 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.[2] (*) நிறுவன உறுப்பினர்கள்.

Code Association Joined in National team National league
AUS   ஆஸ்திரேலியா 2013 (ஆண், பெண்) (ஆண், பெண்)
BRU   புருணை* 1984 (ஆண்) (ஆண்)
CAM   கம்போடி 1996 (ஆண், பெண்) (ஆண், பெண்)
IDN   இந்தோனேசியா* 1984 (ஆண், பெண்) (ஆண், பெண்)
LAO   லாவோஸ் 1996 (ஆண், பெண்) (ஆண், பெண்)
MAS   மலேசியா* 1984 (ஆண், பெண்) (ஆண், பெண்)
MYA   மியான்மர் 1996 (ஆண், பெண்) (ஆண், பெண்)
PHI   பிலிப்பைன்சு* 1984 (ஆண், பெண்) (ஆண், பெண்)
SIN   சிங்கப்பூர்* 1984 (ஆண், பெண்) (ஆண், பெண்)
THA   தாய்லாந்து* 1984 (ஆண், பெண்) (ஆண், பெண்)
TLS   கிழக்கு திமோர் 2004 (ஆண், பெண்) (ஆண், பெண்)
VIE   வியட்நாம் 1996 (ஆண், பெண்) (ஆண், பெண்)

மேலும் பார்க்க தொகு

குறிப்புதவிகள் தொகு

  1. AFF - The Official Website Of The ASEAN Football Federation
  2. "AFF - Southeast Asian Football Federation Official Website - 12 Football Associations". Archived from the original on 4 April 2016. பார்க்கப்பட்ட நாள் 30 April 2016.

வெளியிணைப்புகள் தொகு