ஏட்டா மாவட்டம்
ஏட்டா மாவட்டம் (உருது: ایٹا ضلع, இந்தி: एटा ज़िला) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மாவட்டங்களுள் ஒன்று. ஏட்டா நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இந்த மாவட்டம் அலிகார் கோட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு யாதவ மற்றும் ராஜபுத்திர மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.
ஏட்டா மாவட்டம் மாவட்டம் एटा ज़िला | |
---|---|
ஏட்டா மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம் | |
மாநிலம் | உத்தரப் பிரதேசம், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | அலிகார் |
தலைமையகம் | ஏட்டா |
பரப்பு | 4,446 km2 (1,717 sq mi) |
மக்கட்தொகை | 1,761,152, (2011) |
படிப்பறிவு | 73.27%[1] |
மக்களவைத்தொகுதிகள் | எடாஹ் |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
பொருளாதாரம்
தொகு2006ல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் இந்தியாவின் மிகவும் பின்தங்கியுள்ள 250 மாவட்டங்களில் ஒன்றாக ஏட்டா மாவட்டத்தை அறிவித்தது.[2] இது உத்தரப்பிரதேசத்தில் பின்தங்கியுள்ள பகுதிகளுக்கு நிதி வழங்குதல் நிகழ்ச்சி (BRGF) மூலம் பணம் பெறும் 34 மாவட்டங்களில் ஒன்றாகும்.[2]
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி ஏட்டா மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 1,761,152.[1] இது தோராயமாக காம்பியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 272வது இடத்தில் உள்ளது.[1] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 717 inhabitants per square kilometre (1,860/sq mi).[1] மேலும் ஏட்டா மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 12.77%.[1] ஏட்டா மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 863 பெண்கள் உள்ளனர்.[1] மேலும் ஏட்டா மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 73.27%.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
- ↑ 2.0 2.1 Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. Archived from the original (PDF) on ஏப்ரல் 5, 2012. பார்க்கப்பட்ட நாள் September 27, 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ US Directorate of Intelligence. "Country Comparison:Population". Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-10-01.