ஏமனின் முற்றுகை
ஏமனின் முற்றுகை (ஆங்கிலம்: Blockade of Yemen) என்பது ஏமனின் கடல், நிலம் மற்றும் வான் முற்றுகையை குறிக்கிறது. இது 2015 ல் ஏமன் கடலில் சவூதி அரேபிய போர்க்கப்பல்களை நிலைநிறுத்துவதன் மூலம் தொடங்கியது. அக்டோபர் 2016 இல் அமெரிக்கா முற்றுகையுடன் இணைந்தது. [1] நவம்பர் 2017 ஏமனில் உள்ள குதிஸிலிருந்து ரியாத்தை நோக்கி ஏவுகணையை ஏவியதைத் தொடர்ந்து முற்றுகை மேலும் கட்டுப்படுத்தப்பட்டது. யேமனின் முற்றுகை பரவலான பட்டினியால் விளைந்துள்ளது, ஐக்கிய நாடுகள் சபை பல தசாப்தங்களாக மிகக் கொடிய பஞ்சமாக மாறும் சாத்தியம் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது. [2] [3] ஏமனில் காலரா நோயால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை சுமார் 500,000 மக்களை எட்டியதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. [4] [5]
பின்னணி
தொகுஅதிபர் அப்த்ரபு மன்சூர் காதியின் அரசாங்கத்திற்கு ஆதரவாக ஏமன் உள்நாட்டுப் போரின் விளைவுகளை பாதிக்கும் பொருட்டு, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவிலிருந்து ஒன்பது நாடுகளின் கூட்டணியை வழிநடத்தும் சவுதி அரேபியாவால் 2015 மார்ச் மாதம் ஒரு இராணுவத் தலையீடு தொடங்கப்பட்டது. [6]
சவுதி அரேபியா "ஆபரேஷன் தீர்க்கமான புயல்" என்ற பெயரில் ஒரு குண்டுவீச்சை தொடங்கியது. பின்னர் கடற்படையால் முற்றுகையிடப்பட்டது, அதேபோல் ஏமனில் தரைப்படைகளையும் நிறுத்தியது. [7] இதன் விளைவாக, பல அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டனர், அதே போல் கௌதி போராளிகளும் கொல்லப்பட்டுள்ளனர். [8] [9]
5 நவம்பர் 2017 க்குப் பிறகு, ஏமனில் பஞ்சம் தீவிரமைடைந்தது, ஏனெனில் சவுதிகள், அமெரிக்காவின் உதவியுடன், [1] தங்கள் கடல், காற்று மற்றும் நில முற்றுகையை இறுக்கினர். [10] [11] [12] [13] [14] கௌவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அல் குதாய்தா துறைமுகத்தின் கட்டுப்பாட்டு அலுவலரின் கூற்றுப்படி, ஆகஸ்ட் 2015 இல் சவுதி தலைமையிலான வான்வழித் தாக்குதல் துறைமுகத்தின் தொழில்துறை மாரம் தூக்கிகளைகளை நாசப்படுத்தியதால் மருந்து மற்றும் உணவு அல்-குதாதாய்தாவுக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. [15]
விநியோக பற்றாக்குறை
தொகுமுற்றுகையின் விளைவாக, உணவு, நீர் மற்றும் மருத்துவ பொருட்கள் போன்ற தேவையான பொருட்களின் பற்றாக்குறை ஏற்பட்டது, குடிநீர் இல்லாததால் குழந்தைகளுக்கு நோய் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டது. [16]
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உதவி கப்பல்கள் இறக்கப்பட்டது, மேலும் சார்ந்திருக்கும் வணிகக் கப்பல்கள் பெரும்பகுதி தடுக்கப்பட்டு, ஏமன் மக்களுக்கு அவசரகால நிலையை உருவாக்கியது. [17] வேண்டுகோள்களுக்கு மத்தியிலும், சவூதி அரேபியா மனிதாபிமான நிவாரணத்தில் முதலீடு செய்வதாக உறுதியளித்த 274 மில்லியன் டாலர்களில் எதையும் செலுத்த தவறிவிட்டது. [18] [19]
அமெரிக்காவின் பங்கு
தொகு2017 ல் ஏமனுக்குள் மனிதாபிமான உதவிகளை அனுமதிக்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் சவுதி அரேபியாவிடம் கேட்டாலும், [20] [21] யுத்தத்தில் அரபு கூட்டணியின் தலையீட்டையும், மார்ச் 2015 முதல் ஏமன் மீதான முற்றுகையையும் அமெரிக்கா ஆதரித்துள்ளது. 2015 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், வாஷிங்டன் சவூதி அரேபியாவிற்கு அதன் தளவாட மற்றும் உளவுத்துறை ஆதரவை அளித்தது, சவூதி இராணுவத்துடன் கூட்டு ஒருங்கிணைப்பு திட்டமிடல் கலத்தை உருவாக்கி, போரை நிர்வகிக்க உதவுகியது. [22] [23] [24] ஈரானிய வட்டாரங்களின்படி, அமெரிக்கா சவுதி விமானங்களில் எரிபொருள் நிரப்பியது, உளவுத்துறையை குறிவைத்து சவுதி இராணுவத்தை அனுப்பியது மற்றும் பல்லாயிரக்கணக்கான டாலர் மதிப்புள்ள குண்டுகளை மீண்டும் வழங்கியது. [17] சவூதி அரேபியாவிற்கும் சவுதி தலைமையிலான கூட்டணிக்கும் ஆயுதங்களை வழங்குவதை நிறுத்துமாறு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு அம்னஸ்டி இன்டர்நேஷனல் வலியுறுத்தியது. [25] [26] ஏமன் மீதான போரிலும் முற்றுகையிலும் சவூதி அரேபியாவின் மறைமுக பங்காளியாக அமெரிக்கா இருந்த்தாக கருதப்படுகிறது. [27]
ஐக்கிய இராச்சியத்தின் பங்கு
தொகுஏமன் முற்றுகையை எளிதாக்க பிரிட்டன் சவுதி அரேபியாவிற்கு அழைப்பு விடுத்திருந்தாலும், அவசர தேவைகளை பூர்த்தி செய்ய இங்கிலாந்து அரசாங்கம் 4 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கியது, [28] [29] மோதலின் தொடக்கத்திலிருந்து சவுதி தலைமையிலான கூட்டணிக்கு இங்கிலாந்து அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக ஆதரவளித்துள்ளது. [30]
ஐக்கிய நாடுகளின் எதிர்வினை
தொகுஏஜென்ஸ் பிரான்ஸ்-பிரஸ்ஸின் கூற்றுப்படி, ஏமன் மீதான முற்றுகையை உடனடியாக / முற்றிலுமாக நீக்க ஐக்கிய நாடுகள் சபை சவுதி தலைமையிலான கூட்டணியை அழைத்தது. ஏமனின் 13 மாகாணங்களில் விரைவாக தொண்டை அழற்சி நோய் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இந்த அமைப்பு மேலும் கூறியது, ஏமனில் தொண்டை அழற்சி பாதிப்பு ஒரு கவலைக்குரிய பிரச்சினையாக கருதப்படுகிறது. [31] 2017 நவம்பர் 6அன்று ரியாத் மீது அன்சார் அல்லாக் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பின்னர் சவூதி அரேபிய தலைமையிலான கூட்டணி ஏமனின் அனைத்து கடல், நிலம் மற்றும் விமான எல்லைகளையும் தடுத்தது, மேலும் ஏமன் மக்களுக்கு சர்வதேச உதவிகளை வழங்க அனுமதிக்கவில்லை. [32]
சட்ட பின்னணி
தொகுகடற்படை முற்றுகையின் சர்வதேச சட்டத்தின்படி, சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி நடத்திய கடற்படை நடவடிக்கைகள் சட்டபூர்வமான வகையில் கடற்படை முற்றுகைக்கு உட்பட்டவை அல்ல. [33] 14 ஏப்ரல் 2015 இன் சர்வதேச சட்ட விதி அல்லது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2216 ஆகியவை விரிவான அமலாக்க நடவடிக்கைகளை உள்ளடக்குவதில்லை என்று கூறப்படுகிறது. [34] ஏமனில் பேரழிவு தரும் பஞ்சம் மற்றும் அமலாக்க நடவடிக்கைகளால் ஏற்படும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை காரணமாக, ஏமன் கடற்கரையில் கடற்படை நடவடிக்கைகள் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறுவதாக விமர்சிக்கப்படுகின்றன. [35]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 "US involvement in the Yemen war just got deeper" (in en-US). Public Radio International. https://www.pri.org/stories/2016-10-14/us-involvement-yemen-war-just-got-deeper.
- ↑ Yemen conflict: UN official warns of world's biggest famine BBC News. Retrieved 13 December 2017.
- ↑ Employee of the Month: Mohamed bin Salman sites.tufts.edu Retrieved 24 December 2017.
- ↑ Saudi Arabia’s new blockade is starving Yemen vox.com. Retrieved 11 December 2017.
- ↑ A half million people in Yemen have been affected by Cholera BBC News. 12 December 2017
- ↑ Gulf Coalition Operations in Yemen (Part 1): The Ground War washingtoninstitute.org Retrieved 13 December 2017.
- ↑ Mohammed bin Salman's ill-advised ventures have weakened Saudi Arabia’s position in the world alalam.ir Retrieved 23 December 2017.
- ↑ Continuation of Saudi Arabia in Yemen www.irna.ir Retrieved 23 December 2017.
- ↑ Saudi blockade starves Yemen of vital supplies, as bombing raids continue independent.co.uk Retrieved 13 December 2017.
- ↑ "'Catastrophic' Saudi Blockade on Yemen Could Starve Millions". Time. பார்க்கப்பட்ட நாள் 21 November 2017.
- ↑ CNN, Angela Dewan. "Saudi blockade pushing Yemen to 'worst famine in decades'". பார்க்கப்பட்ட நாள் 21 November 2017.
{{cite web}}
:|last=
has generic name (help) - ↑ "'Catastrophic' Yemen crisis grows as blockade cuts Red Cross and UN aid". 8 November 2017. பார்க்கப்பட்ட நாள் 21 November 2017.
- ↑ "Famine survey warns of thousands dying daily in Yemen if ports stay closed". 21 November 2017. பார்க்கப்பட்ட நாள் 22 November 2017 – via Reuters.
- ↑ "Saudi Arabia is using famine as a weapon of war - Opinion". 28 November 2017.
- ↑ Yemen Is Still Being Starved to Death theamericanconservative.com Retrieved 13 December 2017.
- ↑ Yemen conflict: human rights groups urge inquiry into Saudi coalition abuses theguardian.com Retrieved 7 January 2018
- ↑ 17.0 17.1 "Saudi-led naval blockade leaves 20m Yemenis facing humanitarian disaster". www.theguardian.com. 23 Dec 2017.
- ↑ Saudi blockade leaves 20mn Yemeni in crisis worldbulletin.net Retrieved 7 January 2018
- ↑ Saudi Arabia fatally bombs ANOTHER Yemeni hospital + 18 Billion in US weapons + Bowie democraticunderground.org Retrieved 7 January 2018
- ↑ Trump asks Saudi Arabia to allow immediate aid to Yemen reuters.com Retrieved 25 December 2017.
- ↑ "درخواست ترامپ از عربستان سعودی درباره یمن - اخبار تسنیم | The request of Trump from KSA about Yemen". Tasnim. பார்க்கப்பட்ட நாள் 31 December 2017.
- ↑ Exclusive: U.S. expands intelligence sharing with Saudis in Yemen operation reuters.com Retrieved 7 January 2018
- ↑ "Saudi Arabia launches airstrikes in Yemen". edition.cnn.com. 13 January 2018.
- ↑ In Yemen's "60 minutes" moment, no mention that the U.S. is fueling the conflict theintercept.com Retrieved 23 December 2017.
- ↑ Inside Yemen's forgotten war bbc.com Retrieved 25 December 2017.
- ↑ Amnesty International urges Britain to stop supplying arms to Saudi Arabia independent.co.uk Retrieved 25 December 2017.
- ↑ Saudi Arabia launches airstrikes in Yemen edition.cnn.com Retrieved 23 December 2017.
- ↑ Britain 'fuelling war in Yemen' through arms sales, says charity telegraph.co.uk Retrieved 23 December 2017.
- ↑ Theresa May: Saudi blockade on Yemen must be eased aljazeera.com Retrieved 23 December 2017.
- ↑ Foster, Peter (2015-03-27). "UK 'will support Saudi-led assault on Yemeni rebels - but not engaging in combat'". https://www.telegraph.co.uk/news/worldnews/middleeast/yemen/11500518/UK-will-support-Saudi-led-assault-on-Yemeni-rebels-but-not-engaging-in-combat.html.
- ↑ "United Nations calls for complete lifting of Saudi blockade". tasnimnews.com. 11 January 2018.
- ↑ "United Nations calls for complete lifting of Saudi blockade". reuters.com. 31 December 2017.
- ↑ Fink, Martin D. (2017-07-01). Naval Blockade and the Humanitarian Crisis in Yemen.
- ↑ Daum, Oliver. "War in Yemen (1): Why the Saudi-led coalition's blockade is not a naval blockade". www.juwiss.de. பார்க்கப்பட்ட நாள் 2018-05-28.
- ↑ Daum, Oliver. "War in Yemen (2): Why the Saudi-led coalition has not obeyed the law of naval blockade and violates IHL". www.juwiss.de. பார்க்கப்பட்ட நாள் 2018-05-28.