ஏமனில் நீர் வழங்கல் மற்றும் சுகாதாரம்

ஏமனில் நீர் வழங்கல் மற்றும் சுகாதாரம் (ஆங்கிலம்:Water supply and sanitation in Yemen ) பல சவால்களாலும் சில சாதனைகளாலும் வகைப்படுத்தப்படுகிறது. சமவெளிகளில் கடுமையான நீர் பற்றாக்குறை என்பது ஒரு முக்கிய சவாலாகும். இதனால் டைம்ஸ் ஆஃப் லண்டன் "ஏமன் தண்ணீர் இல்லாத முதல் தேசமாக மாறக்கூடும்" என்று எழுதத் தூண்டியது.[1] இரண்டாவது முக்கிய சவால் ஒருஅதிகபட்ச வறுமையாகும். இதனால் சேவை வழங்கல் செலவுகளை மீட்டெடுப்பது கடினமாக உள்ளது. ஏமனில் சுகாதாரமான நீர் வழங்குவது என்பது பல துணை-சகாரா ஆப்பிரிக்க நாடுகளை விட குறைவாகவே உள்ளது. ஏமன் ஒரு ஏழ்மையான நாடு மற்றும் அரபு உலகில் மிகவும் நீர் பற்றாக்குறை கொண்ட நாடு ஆகும். மூன்றாவதாக, உள்கட்டமைப்பைத் திட்டமிடுவதற்கும், அதனைக் கட்டமைப்பதற்கும், செயல்படுவதற்கும் மற்றும் அதனைப் பராமரிப்பதற்கும் உள்ள நிறுவனங்களின் திறன் மிகக்குறைவாகவே உள்ளது. கடைசியாக ஆனால் குறைந்த பாதுகாப்பு நிலைமை, தற்போதுள்ள சேவையை மேம்படுத்துவது அல்லது பராமரிப்பது என்பது இன்னும் கடினமாக்குகிறது.

அனைத்து பயன்பாடுகளுக்கும் சேர்த்து சராசரி ஏமன் மக்களுக்கு ஆண்டுக்கு 140 கன மீட்டர் நீர் (ஒரு நாளைக்கு 101 கேலன்) மட்டுமே வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் மத்திய கிழக்கில் வழங்கப்படும் நீரின் அளவு சராசரியாக வருடத்திற்கு 1000 கன மீட்டர் என்பதாகும். மேலும் நீர் பற்றாக்குறைக்கான சர்வதேச அளவில் வரையறுக்கப்பட்ட ஆரம்பநிலை ஆண்டுக்கு 1700 கன மீட்டர் ஆகும்.[2] ஏமனின் நிலத்தடி நீர் நாட்டின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது, ஆனால் நிலத்தடி நீர் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன. எடுத்துக்காட்டாக, சனாவில், நிலத்தடி நீர் 1970 களில் மேற்பரப்பிலிருந்து 30 மீட்டர் கீழே இருந்தது, ஆனால் 2012 க்குள் மேற்பரப்பில் இருந்து 1200 மீட்டர் வரை கீழே சென்றுள்ளது. நிலத்தடி நீரை எடுப்பதை ஏமன் அரசாங்கங்கள் கட்டுப்படுத்தவில்லை. புரட்சிக்கு முன்பே, ஏமனின் நீர் நிலைமை பெருமளவில் மோசமானதாக விவரிக்கப்பட்டது. ஏமன் "தண்ணீர் இல்லாத முதல் நாடு" என மாறும் என்று வல்லுநர்கள் கவலைப்படுகின்றனர்.

போதைப் பயிர்

தொகு

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் மட்டுமே விவசாய உற்பத்தி செய்யப்பட்டாலும் ஏமனில் விவசாயம் 90 சதவீத தண்ணீரை எடுத்துக்கொள்கிறது. இருப்பினும் ஏமனின் பெரும்பகுதி சிறிய அளவிலான வாழ்வாதார விவசாயத்தை சார்ந்துள்ளது. ஏமனில் உள்ள பாதி நீர் "காட்" எனப்படும் பயிர் வளரப் பயன்படுகிறது. இது பெரும்பாலான ஏமன் மக்கள் உபயோகிக்கும் ஒரு போதைப் பொருளாகும். இதன் பொருள் என்னவென்றால், ஏமன் போன்ற நீர் பற்றாக்குறை உள்ள நாட்டில், மக்கள் தொகையில் பாதி பேர் உணவு பாதுகாப்பற்ற நிலையில் இருந்தாலும், எப்போதும் குறைந்தே வரும் 45 சதவீத நீர் ஏமன் மக்களுக்கு உணவாகாத ஒரு போதைப்பொருளை வளர்க்கப் பயன்படுகிறது

சேவை தரம்

தொகு

பொதுவாக நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்திற்கான சேவை தரம் பல பரிமாணங்களைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, நீர்வழங்கலுக்கான சேவை தரத்தை தொடர்ந்து வழங்குவதன் மூலம் அளவிட முடியும். இது பொதுவாக ஏமனில் குறைவாக உள்ளது. குறிப்பாக வாடிக்கையாளர் திருப்தி என்பது வியக்கத்தக்க வகையில் அதிகமாக உள்ளது. சுகாதாரத்தின் சேவை தரத்திற்கான ஒரு குறிகாட்டியாக மாசுபடுத்திகளை அகற்றுவதில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்திறன் உள்ளது, இது பெரும்பாலும் ஏமனில் குறைவாக உள்ளது.

பெரும்பாலான யேமன் நகரங்களில் நீர் விநியோகத்தின் தொடர்ச்சி மோசமாக உள்ளது. எடுத்துக்காட்டாக, 'தைசில்' பகுதியில் பொது குழாய் நீர் விநியோகம் 40 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் அதிகமான மக்கள் அதிக விலை கொண்ட தண்ணீரை நம்ப வேண்டியிருக்கிறது. மேலும், தனியார் கிணறுகளிலிருந்து வழங்கப்படும் நீரின் தரம் கேள்விக்குரியது. ஏனெனில் தண்னீர் வழங்கும் இந்த வண்டிகள் பெரும்பாலும் சுத்தம் இல்லாமலும் பிற நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.[3]

குறிப்புகள்

தொகு
  1. Asthana, Anushka (October 2009). The Times (London). http://www.timesonline.co.uk/tol/news/environment/article6883051. 
  2. "Climate Change 2001: Impacts, Adaptation and Vulnerability". Archived from the original on 26 ஜூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 25 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Yemen Observer:Supply of urban water and sanitation to be decentralized பரணிடப்பட்டது 2013-02-10 at Archive.today, 4 December 2007