ஏரியல் மெரெடித்
ஏரியல் மெரெடித் (Ariel Meredith) (சூலை 11, 1986)[2] அமெரிக்க தோற்றவியலார் (model) ஆவார். ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேடட் என்னும் விளையாட்டு இதழ் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடும் நீச்சலாடை சிறப்பிதழ்களில் 2009, 2012, 2013, 2014, 2015 ஆண்டுகளில் இவர் காட்சிப்படுத்தப்பட்டார். லூசியானாவின் சிரேவேபோர்ட் என்னும் ஊரில் பிறந்தவர்.[2] பள்ளிப்பருவத்திலேயே 1998இல் பகுதிநேரத்தில் தோற்றவியலாராக பணியாற்றத் தொடங்கினார்.[2][3][4][5]
ஏரியல் மெரெடித் | |
---|---|
2009இல் மெரெடித் | |
பிறப்பு | சூலை 11, 1986 ச்ரேவேபோர்ட், லூசியானா, ஐ.அ. |
வடிவழகுவியல் தகவல் | |
உயரம் | 5 அடி 10.5 அங் (1.79 m) |
முடியின் நிறம் | இயல்பாக கருமை |
கண் நிறம் | பழுப்பு |
முகமை |
|
பின்னணி
தொகுலூசியானா மாநிலத்தின் சிரவேபோர்ட்டைச் சேர்ந்த மெரெடித்[6] மர்ஜோரி, டேவிட் இணையருக்குப் பிறந்தார்.[3] உயர்நிலைப் பள்ளியில் மாணவர் பேரவை உறுப்பினராக விளங்கினார். அவர் படித்த யுன்டிங்டன் உயர்நிலைப் பள்ளியில் மாணவர் பேரவையின் செனட்டராக 2001 - 2002 வகுப்பில் இருந்தார்.[7] உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தபிறகு நியூயார்க் நகரத்திற்கு குடிபெயர்ந்தார்.[8]
பணிவாழ்வு
தொகுமெரெடித்தின் 14ஆவது வயதிலேயே அடையாளம் காணப்பட்டாலும் 2008இல் தமது கல்வியை முடிக்கும் வரை முழுநேர தோற்றவியலாராக பணி புரியத் துவங்கவில்லை.[2][6] 1998இல், டாலசில் 500-போட்டியாளர்கள் கலந்துகொண்ட தோற்றவியல் போட்டியில் வெற்றி பெற்று நியூயார்க் நகர போர்டு மாடல்சு நிறுவனத்துடனும் கேம்பெல் வடிவழகு ஏசென்சியுடனும் உடன்பாடு கைச்சாத்திட்டார்.[3][4] இந்தப் போட்டிக்குப் பிறகு 32 அழைப்புகளைப் பெற்றார்.[8] பதின்ம வயதினராகவே அமெரிக்காவின் செவன்ட்டீன், டீன் காசுமோபோலிட்டன், காசுமோபோலிட்டன் போன்ற இதழ்களில் தோன்றினார்.[3] பள்ளிப்படிப்பின் போதே உள்நாட்டுப் பயணங்களை மேற்கொண்டார்.[4] 2002ஆம் ஆண்டில் எம் டிவியின் பேசனப்லி லவுட் நிகழ்ச்சியில் தோன்றினார்.[4] 2005ஆம் ஆண்டு முதல் அடிக்கடி தோற்றவியல் பணிகளில் பங்கேற்றார்.[9] துவக்கத்தில் அவரைத் தொடர்பு கொண்ட தோற்றவியல் முகமைகளில் ஒன்று அவரது மார்பக அளவைக் குறைக்கும் அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ள வலியுறுத்தியது; மெரெடித் உடன்படாது பணிவாய்ப்பை இழந்தார்.[8]
மெரெடித் உதடுகளில் உதட்டுச்சாயம் பூசும் முன்னர் பற்தூரிகை கொண்டு உதட்டுத்தோலில் உள்ள இறந்த தோல்செதில்களை நீக்குவதை அழகுக் குறிப்பாக யூடியூப்பில் பதிவிட்டுள்ளார்; இதனை த நியூயார்க் டைம்ஸ் 2007இல் குறிப்பிட்டுள்ளது.[10] நியூயார்க்கின் புகழ்பெற்ற வேரா வாங் நடத்தும் இளவேனில் நிகழ்ச்சியில் செப்டம்பர் 2008இல் முன்முதலாகத் தோன்றினார்.[11] 2008 செப்டம்பரில் நடந்த ரன்வே என்ற நியூயார்க் நகர புதுப்பாங்கு வாரத்தில் நிகோல் மில்லருக்காக[12] தோற்றமளித்த மெரெடித்தின் அரங்கேற்றத்தை யூஎஸ்ஏ டுடே பதிப்பித்துள்ளது.[9]
மெரெடித் மொத்தமாக பதினோரு ஆடைவடிவியலாளர்களுக்காக தோன்றியுள்ளார்; இதில் யூன்யா வதனபே என்ற சப்பானிய வடிவியலாளருக்கு முதற்காட்சியாளராகத் தோன்றியதும் அடங்கும்.[8] நியூயார்க் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து மிலன் நகரில் எட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.[12] பேபி பட், பிரியோனி, கிளிப்சு,டீசல், டி&ஜி, எலி சாப், யூன்யா வதனபா, லா பெர்லா,மில்லி, வேரா வாங் போன்ற ஆடை வனப்பியலார்களுக்காக பங்கேற்றுள்ளார்.[11] அவரது செப்டம்பர் 2008, நியூயார்க், மிலன் நிகழ்ச்சிகளுக்குப் பிறகு வளரும் புதுவரவாக அடையாளப்படுத்தப்பட்டார்.[8]
டோல்சு & கபானாவின் 2009ஆம் ஆண்டு இளவேனில்/வேனில் விளம்பரப் பரப்புரையில் பங்காற்றினார்.[2][13] மேலும் ஜே.குரூ, அன் டைய்லர் லாஃப்ட், எச் &எம், டேவிட்டின் மணமகள் தொகுப்பு, கவர்கேர்ல் கண்ணனிகள், தொல்லுயிர் எச்சம், டார்கெட் நிறுவனம், கார்னியே பிரக்டசு, நைன் வெஸ்ட், ரோக்கா வேர், விக்டோரியாசு சீக்ரெட், தி லிமிட்டட், செபோரா, லீவைசு, காப் போன்ற முன்னணி புதுப்பாவனை நிறுவனங்களின் விளம்பரங்களில் தோன்றியுள்ளார்.[4][6][8][12] 2009ஆம் ஆண்டுக்கான நீச்சலாடை சிறப்பிதழிற்காக பல்வேறு கடற்கரைகள், கடற்காயல்கள், மதுவகங்கள் போன்ற இடங்களில் படம் பிடிக்கப்பட்டுள்ளார்; மெக்சிக்கோவின் மாயன் நாகரிகப் படுகையில் உள்ள துலூம் இயற்கை காப்பகம் இவற்றில் குறிப்பிடத்தக்கதாகும்.[12] 2014ஆம் ஆண்டு நிலவரப்படி இவரது கணக்கை நியூயார்க் நகரிலுள்ள சுப்ரீம் மேனேஜ்மென்ட் கவனித்துக் கொள்கிறது.[14]
உசாத்துணைகள்
தொகு- ↑ https://models.com/models/ariel-meredith
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "Ariel Meredith". New York. Archived from the original on February 9, 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-03-03.
- ↑ 3.0 3.1 3.2 3.3 Shephard, Sherry P. (2009-02-10). "Model's dream to be in Sports Illustrated comes true". The Times இம் மூலத்தில் இருந்து March 16, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090316002742/http://shreveporttimes.com/article/20090210/LIVING08/902100307. பார்த்த நாள்: 2009-03-29.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 Netherton, Stephanie (2007-05-31). "Shreveport model featured in national campaigns". The Times. பார்க்கப்பட்ட நாள் 2009-03-03.
- ↑ "Meet the New Girl: Ariel Meredith". New York. New York Media LLC. 2009-01-06. Archived from the original on February 12, 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-02-05.
- ↑ 6.0 6.1 6.2 "Ariel Meredith". Sports Illustrated. Time Inc. 2009-02-10. Archived from the original on February 28, 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-03-03.
- ↑ "School Notes". The Times. 2001-09-26. பார்க்கப்பட்ட நாள் 2009-03-03.
- ↑ 8.0 8.1 8.2 8.3 8.4 8.5 Langenhennig, Susan (2008-10-07). "Model of success - From New York runways to Paris catwalks, a 21-year-old from Louisiana is making strides in the fashion world". The Times-Picayune. பார்க்கப்பட்ட நாள் 2009-03-03.
- ↑ 9.0 9.1 Barker, Olivia; Rebecca Heslin; Andrea Mandell; Alison Maxwell; Arienne Thompson (2008-09-11). "A Day in the Life with Ford Models: Ariel Meredith". USA Today. Archived from the original on February 9, 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-03-03.
{{cite web}}
: Unknown parameter|last-author-amp=
ignored (help) - ↑ Fischler, Marcelle S. (2007-06-21). "Putting on Lip Gloss, and a Show, for YouTube Viewers". த நியூயார்க் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 2009-03-03.
- ↑ 11.0 11.1 "Ariel Meredith". Fashion Model Directory. Archived from the original on February 15, 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-03-03.
- ↑ 12.0 12.1 12.2 12.3 Langenhennig, Susan (2009-02-10). "Louisianian Illustrated - Shreveport model among only 19 chosen for Sports Illustrated swimsuit issue". The Times-Picayune. பார்க்கப்பட்ட நாள் 2009-03-03.
- ↑ "D&G S/S 09". Models.com. Archived from the original on March 8, 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-03-03.
- ↑ "Ariel Meredith". suprememanagement.com. Supreme Management. Archived from the original on February 1, 2014. பார்க்கப்பட்ட நாள் January 22, 2014.
வெளியிணைப்புகள்
தொகு- ஏரியல் மெரெடித் ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டடில்