ஏறுகோள் (ஆயர் விளையாட்டு)

ஏறுகோள் முல்லை நிலத்து மக்களாகிய ஆயர் விளையாட்டு.

ஏறுகோள்

ஏறுகோள் விளையாட்டு பற்றிக் கலித்தொகை நூலின் முல்லைக்கலியில் முதல் 6 பாடல்கள் விரிவான செய்திகளைத் தருகின்றன. கலித்தொகைப் பாடல்கள் தொன்றிய காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.

மல்லல் மன்றத்து முரண்தலையில் காளைகளைத் தூண்டிவிட்டு தண்ணுமை முழக்கத்துடன் இது நடைபெற்றதைப் பெரும்பாணாற்றுப்படை குறிப்பிடுகிறது. [1]

அக்காலத்து மக்கள் இந்த விளையாட்டு விழாவை ஏறுகோள் பாணி ஏறுகோள் சாறு என்றல்லாம் வழங்கினர். ஏறு தழுவும் ஆயர்குல வீரனைப் பொதுவன்என்பர் [2]
நல்லினத்து ஆயர் பாண்டியன் மரபினர் [3]

கோட்பாடு

தொகு
  • காளைக்கொம்புக்கு அஞ்சுபவனை ஆயர்குலப் பெண் தழுவமாட்டாள். [4]
  • ஆயர் மணப்பெண்ணுக்கு விலை வேண்டார் [5]
  • காளையை அடக்கிய ஆயருக்கு பெண்ணைக் கொடுப்பர் [6]
  • நல்லினத்து ஆயர் பாண்டியன் மரபினர் [7] கோட்டினத்து ஆயர் [8] கோவினத்து ஆயர் [9] புல்லினத்து ஆயர் [10] முதலானோர் ஏறுகோள் விளையாட்டில் ஈடுபட்டனர்.[11]

செய்திகள்

தொகு
  • ஏறு கொள்ளும் விழா நடைபெறும் இடத்தின் பெயர் தொழூஉ (தொழுவம்).
  • இந்தப் பாணிவிழா நடக்கப்போவதை முதல்நாளே பறை அறைந்து அறிவிப்பர். [12]
  • ஏறு தழுவப்போகும் ஏந்தல் தன் சுற்றத்தாருக்குச் சொல்லி அனுப்புவான் [13]
  • ஏறு தழுவுவதற்கு முதல்நாள் இரவு மகளிரும் மைந்தரும் சேர்ந்து குரவை ஆடுவர் [14]
  • கோளாளர் என் ஒப்பார் இல் – எனப் பொதுவன் வஞ்சினம் கூறுதல் உண்டு. [15]
  • புண்பட்ட அனைவரையும் புணர்குறி செய்து அழைத்துக்கொண்டு பொதுமகளிர் பொழிலுக்குச் செல்வர். [16]
  • புண்பட்டவனை எல்லாரும் போற்றிப் பாடுவர் [17]

பழக்கம்

தொகு
  • பிடவம், கோடல், காயா, வெட்சி, தளவம், குல்லை, குருந்து, முதலான மலர்க்கண்ணி சூடிக்கொண்டு ஏறுகோள் முரண்தலையில் ஈடுபடுவர். [18]
  • காளைகளுக்கு உரிய மகளிர் காளைகளோடு அணிவகுத்து நிற்பர் [19]
  • இந்தக் காளையை அடக்குபவனுக்கு இவள் உரியள் என்பர் [20]
  • துறை (இந்திரன்), ஆலம் (சிவன்). மராஅம் (முருகன்) ஆகியவற்றைத் தொழுதபின் தொழுவுக்குச் செல்வர் [21]

காளைகள்

தொகு
  • சிவன் கணிச்சி போல் காளைகளின் கொம்பு சீவி விடப்படும் [22]
  • வெண்கால்-காரி, புள்ளி-வெள்ளை, சேய் (செவலைக்காளை), குரால் (செம்புள்ளிக்காளை) முதலான காளைகள் பாடலில் குறிப்பிடப்படுகின்றன.

உவமைகள்

தொகு
  • போரில் காயம் பட்டு வீழ்ந்தவனைப் போரிடுவதற்கு ‘ஒவ்வான்’ என விட்டுச் செல்லும் மறவன் போல
  • ஒரு காளை கீழே விழுந்தவனை விட்டுச் சென்றது. [23]
  • ஒரு காளை பொதுவனைக் கொம்பால் குத்தி உழலைமரம் போலச் சுழற்றியது [24]
  • பாஞ்சாலியின் கூந்தலைப் பற்றியவன் நெஞ்சைப் பிளப்பதுபோல் ஒரு காளை நெஞ்சில் குத்தித் தூக்கியது [25]
  • ஏறுகோள் காட்சி ஒன்று நூற்றுவரை அடக்கிய களம் போல இருந்தது [26]
  • புலியும் களிறும் போரிடுவது போல் பொதுவர் காளையைத் தழுவினர் [27]
  • அந்திக் கடவுள் எருமையை இடந்து கூளிப் பசியைத் தீர்ப்பவன் போல ஒரு காளை குத்தியது. [28]
  • இருளில் வந்து தந்தையைக் கொன்றவனைப் போல ஒரு காளை குத்தியது. [29]
  • சிவன் கணிச்சியில் தொங்கும் மாலை போல ஒரு காளை ஒருவன் குடலை மாட்டித் தூக்கியது. [30]
  • பட்டம் விடுபவன் நூலைச் சுற்றுவது போலக் குடல் சரிந்தவன் தன் குடலை வயிற்றுக்குள் சுருட்டிக்கொண்டான். [31]
  • கூந்தல்-குதிரையை அடக்கியவன் போல ஒருவன் காளையை அடக்கினான். [32]
  • வெள்ளைக்காளையை அடக்குபவன் பாம்பு கௌவிய நிலாவை விடுவிக்கும் சிவன் போல் காணப்பட்டான் [33]

காளை நிறத்துக்கு உவமைகள்

தொகு
கரிநெற்றிக் காரி – திருமால் வாயில் சங்கு போன்ற நிறம் [34]
செம்மறி வெள்ளை – வெண்ணிறப் பலராமன் மார்பில் ஆரம் போன்ற நிறம் [35]
குரால் – கணிச்சியோன் மணிமிடறு போன்ற நிறம் [36]
புகர் – இந்திரன் கண்கள் போல் புள்ளிகள் [37]
சேய் – சேயோன் போன்ற நிறம் [38]

அடக்கிய முறை

தொகு

கொம்பைப் பிடித்து அழுத்தல், கழுத்தைப் பிடித்துக்கொண்டு காளையில் மார்பில் தொங்கல், கழுத்தைத் திருகல், இமிழ் என்னும் கொட்டேறியைத் தழுவல், தோளில் ஏறல், நெருக்கிப் பிடித்தல் முதலானவை காளையை அடக்கப் பொதுவர் கையாண்ட உத்திகள். [39]

இவற்றையும் பார்க்க

தொகு

அடிக்குறிப்பு

தொகு
  1.  
    மல்லல் மன்றத்து மதவிடை கெண்டி
    மடிவாய்த் தண்ணுமை நடுவண் சிலைப்பச்
    சிலைநவில் எறுழ்தோள் வீசி வலன்வளையூஉப்
    பகல்மகிழ் தூங்கும் தூங்கா இருக்கை
    முரண்தலை – பெரும்பாணாற்றுப்படை அடி 143 முதல்

  2. கலித்தொகை 101-16
  3. கலித்தொகை 104-4
  4. கொல்லேற்றுக் கோடு அஞ்சிவானை மறுமையும் புல்லாளே ஆய மகள் - கலித்தொகை 103-63
  5. கலித்தொகை 103-71
  6. கலித்தொகை 104-75
  7. கலித்தொகை 104-4
  8. கலித்தொகை 103-33
  9. கலித்தொகை 103-37
  10. கலித்தொகை 103-48
  11. கலித்தொகை 105-53மு65
  12. கலித்தொகை 102-18
  13. கலித்தொகை 102-13
  14. கலித்தொகை 102-35
  15. கலித்தொகை 101-43
  16. கலித்தொகை 101-7
  17. கலித்தொகை 104-63
  18. கலித்தொகை 101-1மு, 102-1மு, 103-1மு.
  19. கலித்தொகை 101-12, 104-26, 105-26
  20. கலித்தொகை 104-17மு
  21. கலித்தொகை 101-13, 14
  22. கலித்தொகை 101-8
  23. கலித்தொகை 104-49
  24. கலித்தொகை 106-21
  25. கலித்தொகை 101-18
  26. கலித்தொகை 104-57
  27. கலித்தொகை 103-56
  28. கலித்தொகை 101-25, 103-43
  29. கலித்தொகை 101-30
  30. கலித்தொகை 103-25
  31. கலித்தொகை 103-30
  32. கலித்தொகை 103-53
  33. கலித்தொகை 104-37
  34. கலித்தொகை 105-10
  35. கலித்தொகை 105-12
  36. கலித்தொகை 105-15
  37. கலித்தொகை 105-17
  38. கலித்தொகை 105-19
  39. கலித்தொகை 105-30மு