ஏறை
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் ஒன்று ஆனைமலை. ஆனைமலையைச் சங்கப் பாடல் அறுகோட்டியானை என்று குறிப்பிடுகிறது[1]. இக்காலத்தில் பழனி என்றும், திருமுருகாற்றுப்படையில் ஆவினன்குடி என்றும் கூறப்படும் ஊர் சங்ககாலத்தில் பொதினி என்னும் பெயரைப் பெற்றிருந்தது.
ஆனை விலங்குகள் மிகுதியாக இருந்த மலை ஆனைமலை. காளையை ஏறு என்கிறோம். ஏறுகள் மிகுதியாக இருந்த மலை ஏறை.
ஏறைக்கோன் ஏறைமலை அரசன் ஏறைக்கோன். இவன் அரசனுக்காகத் தூதுசெல்லும் வழக்கமுடையவன் எனத் தெரிகிறது. இவன் நாட்டில் வாழ்ந்த பெண்-புலவர் குறமகள் இளவெயினி.
இந்தப் புலவர் பிறநாட்டு மன்னர்கள் முன்னிலையில் தன் நாட்டு அரசன் ஏறைக்கோனின் பெருமையைப் பாடுகிறார்.
தம்மவர் தனக்குத் தீங்கு செய்தால் அதனைத் தாங்கிக்கொள்வானாம். பிறருக்கு இழப்பு நேர்ந்தால் இவன் நாணுவானாம். படைவீரர் பழிக்காவண்ணம் போரிடுவானாம். வேந்தர் அவையில் பெருமிதத்தோடு நடப்பானாம்[2].