ஏ. ஆர். செல்லையா


அனந்த ராஜ் ராயப்பன் செல்லையா ஒரு இந்திய கிறித்தவத் மதத் தலைவர்:[தெளிவுபடுத்துக] [1] 2019 முதல் அவர் கன்னியாகுமரி மறைமாவட்டத்தின் தலைமை ஆயராக உள்ளார். [2]

அருட். திரு. முனைவர் அனந்த ராஜ் ராயப்பன் செல்லையா
தலைமை ஆயர் கன்னியாகுமரி மறைமாவட்டம்
சபைகிறிஸ்தவம்
ஆட்சி பீடம்தென்னிந்திய திருச்சபை (CSI)
ஆட்சி துவக்கம்2019–தற்போது
முன்னிருந்தவர்அருட். திரு. முனைவர்ː வடபள்ளி பிரசாத ராவ்
பின்வந்தவர்அருட். திரு. தாமஸ் கே ஓமன்
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடு1994
ஆயர்நிலை திருப்பொழிவு7 ஜூலை 2019
பிற தகவல்கள்
பிறப்புஜூலை 7, 1958
புல்லுவிளை, கன்னியாகுமரி மாவட்டம்
வகித்த பதவிகள்சேகர ஆயர்

ஏ. ஆர். செல்லையா 1958-ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி கோட்டார் அடுத்த புல்லுவிளை ஊரில் (கன்னியாகுமரி மாவட்டம்) பிறந்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் படித்தவர். செல்லையா 1994 ஆம் ஆண்டு திருநிலைப்படுத்தப்பட்டார். நெய்யூர், நாகர்கோவிலில் போன்ற பல ஊர்களில் உள்ள தேவாலயங்களில் பணியாற்றினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி மறைமாவட்டத்தின் தலைமை தேவாலயமான மைலாடி சி.எஸ்.ஐ தேவாலயத்தில் வைத்து கன்னியாகுமரி மறைமாவட்டத்தின் 6-வது தலைமை ஆயராக தனது 61-வது பிறந்தநாளில் (7 ஜூலை 2019) பதவியேற்றார்.[3] [4]

வெளி இணைப்புகள்

தொகு
  • வாழ்க்கை வரலாறு [1]
  • சி.எஸ்.ஐ சினாட்[2]

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._ஆர்._செல்லையா&oldid=3903169" இலிருந்து மீள்விக்கப்பட்டது