நெய்யூர்
நெய்யூர் (Neyoor) என்பது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் உள்ள ஓர் பேரூராட்சி ஆகும். இதன் அருகில் இரணியல் தொடருந்து நிலையம் உள்ளது.
இங்கு பிரபலமான நெய்யர் தேவாலயம் உள்ளது. இந்தியாவில் முதன்முதலில் புற்றுநோய்க்கான ஆராய்ச்சி மையம் உள்ளது.
அமைவிடம்
தொகுநெய்யூர், நாகா்கோவிலிருந்து 18 கி.மீ. தொலைவிலும்; கன்னியாகுமரியிலிருந்து 17 கி.மீ. தொலைவிலும் உள்ளது. நெய்யூர் பேரூராட்சியின் கிழக்கே திங்கள்நகர் 1 கி.மீ. தொலைவிலும் மேற்கே கருங்கல் 6 கி.மீ. தொலைவிலும் வடக்கில் அழகியமண்டபம் 6 கி.மீ. தொலைவிலும் தெற்கில் குளச்சல் 10 கி.மீ. தொலைவிலும் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
தொகுஇந்தப் பேரூராட்சியானது 5.23 சதுர கிலோ மீட்டர் பரப்பில், 15 வார்டுகளும், 46 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சி குளச்சல் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி, 3430 வீடுகளும், 12917 மக்கள்தொகையும் கொண்டது. [3][4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Neyoor Girl's Boarding School". Chronicles of the London Missionary Society. 1890. https://ia801406.us.archive.org/11/items/chroniclelondon00unkngoog/chroniclelondon00unkngoog.pdf. பார்த்த நாள்: 2 November 2015.
- ↑ நெய்யூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ நெய்யூர் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Neyyoor Population Census 2011
- ↑ Neyyoor Town Panchayat