ஏ. ஆர். ராவ் ( A. R. Rao ) (23 செப்டம்பர் 1908 - 4 ஏப்ரல் 2011) ஓர் இந்திய கணிதவியலாளர் ஆவார்.[1] குசராத்தில் பல்வேறு கல்லூரிகளில் கணிதப் பேராசிரியராகப் பணிபுரிந்த பிறகு, அகமதாபாத்தில் உள்ள சமூக அறிவியல் மையத்தில் சேர்ந்தார். அங்கு இவர் கணிதத்தை மக்களிடையே பிரபலப்படுத்த மாதிரிகள் மற்றும் முறைகளை உருவாக்கினார்.

ஏ. ஆர். ராவ்
பிறப்பு(1908-09-23)23 செப்டம்பர் 1908
சேலம்,
மதராசு தலைமாகாணம், பிரித்தானிய இந்தியா
(தற்போது தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு4 ஏப்ரல் 2011(2011-04-04) (அகவை 102)
அகமதாபாத், குசராத்து, இந்தியா
குடியுரிமைஇந்தியர்
பணிபேராசிரியர், கணிதவியலாளர்

சுயசரிதை

தொகு

ராவ் 23 செப்டம்பர் 1908 இல் சென்னை மாகாணத்திலிருந்த சேலத்தில் ( தற்போது தமிழ்நாடு) பிறந்தார். சென்னை, மாநிலக் கல்லூரியிலிருந்து இளம் அறிவியல் பட்டமும் பம்பாய் வில்சன் கல்லூரியில் முதுஅறிவியல் பட்டமும் பெற்றவர். ஜூனாகத் பகாவுதீன் கல்லூரியில் பேராசிரியராகச் சேர்ந்து குசராத்தைத் தன் வசிப்பிடமாக மாற்றினார். ஜுனாகத்தில் 27 ஆண்டுகள் கற்பித்த பிறகு, அகமதாபாதின் குசராத் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். 1964 இல், பவநகர், சர் பி.பி. அறிவியல் தொழில் நுட்ப நிறுவனத்தின் முதல்வராக நியமிக்கப்பட்டார். 1976 வரை அங்கு பணியாற்ரிய பிறகு ஓய்வு பெற்றார்.[2]

கல்விப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, இவர் விக்ரம் ஏ. சாராபாய் சமூக அறிவியல் மையத்தில் சேர்ந்தார். இது 60 களில் விக்கிரம் சாராபாயால் நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் பல்டியில் உள்ள சன்ஸ்கார் கேந்திராவில் 1971 இல் அதன் தற்போதைய கட்டிடத்திற்கு மாறியது. அங்கு ராவ் அகமதாபாத்தில் கணிதத் துறையின் தலைவராக இருந்தார்.[2] இவர் கல்வி, ஆராய்ச்சி, பரிசோதனை, சிக்கல்களைத் தீர்ப்பது மற்றும் கணிதத்தை மக்களிடையே பிரபலப்படுத்துவதில் ஆர்வம் கொண்டிருந்தார். அகமதாபாத்தில் உள்ள விக்ரம் ஏ. சாராபாய் சமூக அறிவியல் மையத்தில் (மரணத்திற்குப் பின் அவரது நினைவாக மறுபெயரிடப்பட்டது) ஒரு கணித ஆய்வகத்திற்கு முன்னோடியாக இருந்தார். வேடிக்கையான பட்டறைகள் மற்றும் பொம்மைகள் மூலம் கணிதத்தை பிரபலப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்தார். கணிதம் கற்பிக்க மாதிரிகள் மற்றும் சோதனைகளை வடிவமைத்தார். மாநிலத்திலும் கல்வியிலும் கணிதத்தை பிரபலப்படுத்தினார். மேலும் சர்வதேச கணித ஒலிம்பியாட்டில் பங்கேற்க மாணவர்களை தயார்படுத்தினார்.[2] திட்ட வடிவியல், எண் கோட்பாடு மற்றும் சேர்வியல் ஆகியவை கணிதத்தில் இவருக்கு ஆர்வமுள்ள பாடங்களாக இருந்தன.[2]

இவர் பிரைன் ஷார்ப்னர்ஸ் என்ற கணித புதிர்கள் பற்றிய புத்தகம் உட்பட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.[3]

இறப்பு

தொகு

இவர் அக்டோபர் 22, 2011 அன்று தனது 103 வயதில் மாரடைப்பால் இறந்தார்.[4]

இவர் தனது குடும்பத்துடன் அகமதாபாத்தில் வசித்து வந்தார். அவர்களில் பெரும்பாலோர் அகமதாபாத் மற்றும் தானேயில் தொடர்ந்து வாழ்கின்றனர்.

அங்கீகாரம்

தொகு

ராவ் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தேசிய விருதைப் பெற்றவர். உயர் கணிதத்திற்கான தேசிய வாரியம், இந்திய கணித சங்கம் மற்றும் குசராத் கனிட் மண்டல் ஆகியவற்றால் பாராட்டப்பட்டார் .இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் குசராத்தில் அப்போதைய முதல்வராக இருந்த நரேந்திர மோடியின் அங்கீகாரப் பரிசைப் பெற்றார். குஜராத் கனிட் மண்டல் இவரைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்துள்ளது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Glorious innings of Prof. A.R.Rao (PDF). Ahmedabad: Vikram Sarabhai Community Science Centre. 23 September 2008. Archived from the original (PDF) on 7 ஆகஸ்ட் 2015. பார்க்கப்பட்ட நாள் 21 March 2018. {{cite book}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Vasavada, Mahavir (January 2004). Dhirubhai Thaker (ed.). ગુજરાતી વિશ્વકોશ(Gujarati Encyclopedia) (in குஜராத்தி). Vol. 18. Ahmedabad: Gujarat Vishwakosh Trust. p. 847. இணையக் கணினி நூலக மைய எண் 552367195.
  3. Hattangadi, A.A. (6 October 2016). Explorations in Mathematics. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788173713873. பார்க்கப்பட்ட நாள் 16 October 2016.
  4. admin (22 October 2011). "Eminent mathematician Prof Rao dies at 103". Gujarat Global. Archived from the original on 18 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 16 October 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._ஆர்._ராவ்&oldid=4108283" இலிருந்து மீள்விக்கப்பட்டது