ஏ. எஸ். நீல் என்றறியப்படும் அலெக்சாந்தர் சதர்லண்ட் நீல் (Alexander Sutherland Neill, 17 அக்டோபர் 1883 – 23 செப்டம்பர் 1973) ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கல்வியலாளர், எழுத்தாளர். குழந்தைகளின் மனதிற்கு ஏற்ற வகையில் இதமான சூழலில் அறிவாற்றல் வளர 1921-ம் ஆண்டு சம்மர்ஹில் என்ற இடத்தில் முற்போக்குப் பள்ளியை நிறுவினார். சுமார் 30 ஆண்டுகள் தலைமையாசிரியராகவும் பணியாற்றினார். அவர் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை முடித்தார். நீல் எழுதிய "சம்மர்ஹில்" (குழந்தை வளர்ப்பில் ஒரு தீவிர அணுகுமுறை) என்ற நூலின் தாக்கத்தால் அமெரிக்கா போன்ற பல நாடுகளில் "சம்மர் ஹில்" முயற்சி பெரும் கவனத்தை ஈர்த்தது.

ஏ. எஸ். நீல்
பிறப்புஅலெக்சாந்தர் சதர்லண்ட் நீல்
17 அக்டோபர் 1883
போர்பார், ஸ்காட்லாந்து
இறப்பு23 செப்டம்பர் 1973(1973-09-23) (அகவை 89)
ஆல்டபர்க், சப்போல்க்,இங்கிலாந்து
பணிஆசிரியர், எழுத்தாளர்
அறியப்படுவதுசம்மர்ஹில் பள்ளியை நிறுவியவர், குழந்தைகளுக்கு தனிப்பட்ட விடுதலையை வழங்கவேண்டும் என்றவர், முற்போக்குக் கல்விமுறை

முற்போக்கு பள்ளி தொகு

சம்மர்ஹில் பள்ளி என்றழைக்கப்படும் இப்பள்ளி இங்கிலாந்தில் லைஸ்டன் என்ற இடத்தில் உள்ளது. இப்பள்ளி தன்னாட்சி கொண்ட மக்களாட்சியைப் போல் உள்ளது. ஏனெனில் பள்ளி முதல்வரும் ஆசிரியர்களும் அந்த மக்களாட்சியின் மூத்த குடிமக்கள், மாணாக்கர்கள் உண்மையான குடிமக்கள் என்று பள்ளி முழுக்க மக்களாட்சியாகவே நடத்தப்பட்டது. நிர்வாகக் குழுவும், நிதித்துறையும் உடையதாக ஒரு தலைமை அமைச்சரும், தனித்தனிப் பொறுப்புகள் கொண்ட பிற அமைச்சர்களும், மாணவர்கட்குள்ளேயே, மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பள்ளியின் அன்றாட வேலைகளை அமைச்சரவையே நிர்வகிக்கிறது. ஒரு மாணவர் தவறு செய்தால், சனிக்கிழமைதோறும் இரவு கூடும் நாடாளுமன்ற கூட்டத்தில் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்படும். இப்பள்ளியின் தலைமையாசிரியருக்கு இருக்கும் வாக்குரிமை அப்பள்ளியில் பயிலும் ஐந்து வயது குழந்தைக்கும் இருந்தது.

  • குழந்தைகளின் அறிவை சோதிக்க தேர்வு அவசியம் இல்லை, துணிவு தான் முக்கியம்.
  • அச்சம் வெறுப்பை உண்டாக்கும், அறிவை வளர்ப்பதற்கு மட்டும் கல்வி போதாது, அவை உணர்வு மேம்பாட்டிற்கும் அவசியம் என்றார்.
  • ஆண்-பெண் இருபாலரும் கலந்துள்ள சூழ்நிலைகளிலேயே குழந்தைகள் வளர வேண்டும்.
  • வழக்கமாகக் கடைப்பிடிக்கப்படும் பாட போதனைகள் கைவிடப்பட்டு விளையாட்டு முறைகளில் சம்மர்ஹில் அமைப்பில் கையாளப்பட்டன.
  • தொழில் சார்ந்த வகையில் பாடத்திட்டம் அமைக்கப்பட்டிருந்தது.
  • "ஏதோவொரு பாடத்தில் பட்டங்கள் பெறுவதைக் காட்டிலும் தொலைக்காட்சி பழுது பார்க்கும் வினைஞராக ஆவது எவ்வளவோ மேல்" என்று கூறினார்.
  • கருவிகளை இயக்குதல், புத்தகங்களைப் படித்தல், இசை, ஓவியம், நாட்டியம், கைத்தொழில்கள் ஆகியவற்றிற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._எஸ்._நீல்&oldid=3858687" இலிருந்து மீள்விக்கப்பட்டது