ஏ. கே. சுப்பையா

இந்திய அரசியல்வாதி

ஏ. கே. சுப்பையா (A. K. Subbiah) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 1962 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் திருத்துறைப்பூண்டி தொகுதியிலிருந்தும், 1967 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் கோட்டூர் தொகுதியிலிருந்தும் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

ஏ.கே. சுப்பையா
A. K. Subbiah
திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில்
1967–1977
முன்னையவர்புதிய தொகுதி
பின்னவர்புதிய தொகுதி
தொகுதிகோட்டூர் சட்டமன்றத் தொகுதி
பதவியில்
1962–1967
முன்னையவர்ஏ.வேதரத்தினம் மற்றும் வி.வேதய்யன்
பின்னவர்என். தர்மலிங்கம்
தொகுதிதிருத்துறைப்பூண்டி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதிருவாரூர், தமிழ்நாடு
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடைமைக் கட்சி
துணைவர்எசு. சுப்பம்மாள்[1]
பிள்ளைகள்ஏ. கே. எசு. விச்சயன்
வாழிடம்திருவாரூர்

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் நிலப்பிரபுக்களிடம் பண்ணையாள்களாக வீடற்ற நிலையில் இருந்து வந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு வீட்டுமனை பட்டா பெற்றுத் தருவதற்கு ஏ. கே. சுப்பையா முயற்சிகள் மேற்கொண்டார்.[3]

ஏ.கே. சுப்பையாவின் மகன் ஏ. கே. எசு. விச்சயன், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதியாகப் பணியாற்றுகிறார். மேலும் ஏ. கே. எசு. விச்சயன் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் தொகுதியில் இருந்து மூன்று முறை இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

1962 தேர்தல் தொகு

1962 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஏ.கே. சுப்பையா இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் வேட்பாளராக திருத்துறைப்பூண்டி தொகுதியில் போட்டியிட்டு இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளரான வி. வேதையன் என்பவரை தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]

1967 தேர்தல் தொகு

1967 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஏ.கே. சுப்பையா இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் வேட்பாளராக கோட்டூர் தொகுதியில் போட்டியிட்டு இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளரான சி. எம். அம்பிகாபதி என்பவரை தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]

1971 தேர்தல் தொகு

1967 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஏ.கே. சுப்பையா இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் வேட்பாளராக கோட்டூர் தொகுதியில் போட்டியிட்டு இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளரான டி. இராசமாணிக்கம் என்பவரை தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6]

மேற்கோள்கள் தொகு

  1. "Shri A.K.S. Vijayan Member of Parliament (MP) from Nagapattinam (Tamil Nadu) Biodata". 28 December 2018.
  2. "TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY". Tamil Nadu Legislative Assembly. https://citeseerx.ist.psu.edu/document?repid=rep1&type=pdf&doi=5dd9ee01c89bbcc9818a8897a0a134beec921a69. 
  3. "ஏ. கே. சுப்பையா நினைவு தினம் அனுசரிப்பு". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/may/14/%E0%AE%8F%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3151352.html. பார்த்த நாள்: 26 November 2023. 
  4. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
  5. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
  6. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._கே._சுப்பையா&oldid=3847793" இலிருந்து மீள்விக்கப்பட்டது