அ. சபாபதி

இலங்கை தமிழ் அரசியல்வாதி
(ஏ. சபாபதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அருணாசலம் சபாபதி (Arunachalam Sabapathy, 1853 – மே 5, 1924) இலங்கைத் தமிழ் பத்திரிகை ஆசிரியரும், அரசியல்வாதியும், இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினரும் ஆவார்.

அருணாசலம் சபாபதி
இலங்கை சட்டவாக்கப் பேரவையின் அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்
பதவியில்
1917–1921
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1853
தலையாழி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், இலங்கை
இறப்புமே 5, 1924 (அகவை 70–71)
குடியுரிமைஇலங்கைத் தமிழர்
முன்னாள் கல்லூரியாழ்ப்பாணம் மத்திய கல்லூரி
தொழில்ஊடகவியலாளர், பத்திரிகை ஆசிரியர்

வாழ்க்கைக் குறிப்பு தொகு

சபாபதி 1853 இல் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணைக்கு அருகே தலையாழி என்ற ஊரில்[1][2] முருகன் செட்டியார் என அழைக்கப்பட்ட முருகன் அருணாசலம், எஸ். அன்னபிள்ளை ஆகியோருக்குப் பிறந்தார்.[1] தந்தை முருகன் 18ம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ்நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்தில் குடியேறிய வீரப்பன் செட்டியாரின் வழித்தோன்றல் ஆவார். முருகன் செட்டியார் யாழ்ப்பாண மாவட்டத்தில் அராலியில் இருந்து வண்ணார்பண்ணைக்குக் குடிபுகுந்தார்.[1] சபாபதி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வி கற்றார்.[3]

சபாபதி, சரவணமுத்து உடையார் என்பவரின் மகள் சின்னம்மா என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள்.[1][4]

பணி தொகு

சபாபதி இலங்கை சட்டவாக்கப் பேரவைக்கு இலங்கைத் தமிழரின் இரண்டாவது பிரதிநிதியாக 1917 சனவரி 9 இல் நியமிக்கப்பட்டார்.[5][6][7] இவர் யாழ்ப்பாண சபை என அழைக்கப்பட்ட அரசியல் அமைப்பின் நிறுவன செயலரும், அதன் தலைவருமாக இருந்து செயல்பட்டார்.[2][3][6] தமிழர்களுக்கு கூடிய பிரதிநித்துவம் வழங்க சிங்களத் தலைவர்கள் இணக்கம் தெரிவித்தனர் என பொன்னம்பலம் அருணாசலம் உறுதிமொழி வழங்கியதை அடுத்து சபாபதி அவரது இயக்கத்தினருடன் இலங்கை தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.[8] எனினும், முதலாவது மென்னிங் சீர்திருத்தங்கள் தமிழருக்கு எதிர்பார்த்த பிரதிநித்துவத்தை வழங்கவில்லை. இதனால், சபாபதி 1921 இல் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மகாசன சபையில் சேர்ந்து, அதன் துணைத் தலைவராகப் பணியாற்றினார்.[3]

சமூகப் பணிகள் தொகு

சபாபதி சைவ பரிபாலன சபையின் நிறுவன உறுப்பினர் ஆவார். அத்துடன் யாழ்ப்பாணம் உள்ளூராட்சி சபையின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[2] இவர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த இந்து சாதனம் பத்திரிகையின் ஆசிரியராக 1891 முதல் 1924 வரை 33 ஆண்டுகள் பணியாற்றியிருந்தார்.[4] இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நிறுவனர்களில் ஒருவரும் ஆவார். இக்கல்லூரியின் முகாமையாளராக 1913 முதல் 1924 வரை பணியாற்றினார்.[2][3][6]

மறைவு தொகு

சபாபதி 1924 மே 5 இல் தலையாழியில் உள்ள தனது வீட்டில் காலமானார்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "Hon. Mr. A. Sabapathy". Hon. Mr. A. Sabapathy, The Tamil Hero.
  2. 2.0 2.1 2.2 2.3 Sabaratnam, T. "Chapter 17: The Arunachalam Factor". Sri Lankan Tamil Struggle.
  3. 3.0 3.1 3.2 3.3 "Honourable A. Sabapathy's Achievements". Hon. Mr. A. Sabapathy, The Tamil Hero.
  4. 4.0 4.1 4.2 "The Late Mr A. Sabapathy". The Straits Times: p. 11. 16 May 1924. http://newspapers.nl.sg/Digitised/Page/straitstimes19240516-1.1.11.aspx. 
  5. John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 108
  6. 6.0 6.1 6.2 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. pp. 168–169.
  7. "The London Gazette". The London Gazette. 6 March 1917. http://www.london-gazette.co.uk/issues/29972/pages/2252/page.pdf. 
  8. Wilson, A. Jeyaratnam (2000). Sri Lankan Tamil Nationalism. Penguin Books. p. 59.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._சபாபதி&oldid=3083019" இலிருந்து மீள்விக்கப்பட்டது