இலங்கை சட்டவாக்கப் பேரவைத் தேர்தல், 1917

இலங்கை சட்டவாக்கப் பேரவைக்கான இரண்டாவது தேர்தல் (1917 Ceylonese Legislative Council election) 2017 சவனரி 20 இல் நடைபெற்றது.[1][2]

2-வது இலங்கை சட்டவாக்கப் பேரவைத் தேர்தல்

← 1911 9–20 சனவரி 1917 1921 →

பின்னணி தொகு

இலங்கையின் சட்டவாக்கப் பேரவை 1833 ஆம் ஆண்டில் கோல்புறூக்-கேமரன் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கேற்ப அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் பிரித்தானிய ஆளுநர் உட்பட 16 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இலங்கை நிறைவேற்றுப் பேரவையின் 5 உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகள் 4 பேர், மேலும் அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்கள் மூன்று ஐரோப்பியர், ஒரு சிங்களவர், ஒரு தமிழர், ஒரு பரங்கியர் என 6 பேர் நியமிக்கப்பட்டனர். 1889 இல் அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை எட்டாக அதிகரிக்கப்பட்டது (மூன்று ஐரோப்பியர், ஒரு கீழைத்தேய சிங்களவர், ஒரு கண்டியச் சிங்களவர், ஒரு தமிழர், ஒரு சோனகர், ஒரு பரங்கியர்).[3]

1910 இல் மெக்கலம் சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 18 இலிருந்து 21 ஆக அதிகரிக்கப்பட்டது. இவர்களில் 11 பேர் அதிகாரபூர்வ உறுப்பினர்களும் 10 அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்களும் (இரண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஐரோப்பியர், ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பரங்கியர், ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கைக் கல்விமான், இரண்டு நியமனம் பெற்ற கீழைத்தேய சிங்களவர், இரண்டு நியமனம் பெற்ற தமிழர், ஒரு நியமனம் பெற்ற கண்டிச் சிங்களவர், ஒரு நியமனம் பெற்ற சோனகர்) ஆவர்.[4] மூவாயிரத்துக்கும் குறைவான இலங்கையர்கள் நான்கு அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்களுக்காக வாக்களிக்கத் தகுதி பெற்றனர்.[4]

அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்கள் தொகு

பின்வருவோர் அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:

  • தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் - பொன்னம்பலம் இராமநாதன் (இவருக்கு 1704 வாக்குகள் கிடைத்தன, இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜே. எஸ். ஜெயவர்தனா 48 வாக்குகளை மட்டும் பெற்றார்)[2]
  • நியமனம் பெற்ற தமிழ் உறுப்பினர் - அருணாசலம் சபாபதி[1][5]
  • நியமனம் பெற்ற முசுலிம் உறுப்பினர் - நூர்தீன் ஹாஜியார் முகம்மது அப்துல் காதர்[6]
  • தேர்ந்தெடுக்கப்பட்ட ஐரோப்பிய உறுப்பினர் - மார்க்கசு பெர்னாண்டோ[6]
  • நியமனம் பெற்ற கன்டி சிங்கள உறுப்பினர் - மீதெனிய ராஜகருண சேனநாயக்கா[6]
  • நியமன உறுப்பினர் - விக்கெலிய ஒசுவால்டு கிறித்தோபர் திசாநாயக்கா[6]

இது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ முடியும்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2001-09-09. பார்க்கப்பட்ட நாள் 2019-10-07. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. 2.0 2.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-10-23. பார்க்கப்பட்ட நாள் 2019-10-07.
  3. Wijesinghe, Sam (25 டிசம்பர் 2005). "People and State Power". சண்டே ஒப்சேர்வர் இம் மூலத்தில் இருந்து 2011-06-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110605111144/http://www.sundayobserver.lk/2005/12/25/fea104.html. பார்த்த நாள்: 7 பெப்ரவரி 2010. 
  4. 4.0 4.1 கே. ரி. ராஜசிங்கம் (18 ஆகத்து 2001). "Chapter 2: Beginning of British Rule". SRI LANKA: THE UNTOLD STORY. ஏசியா டைம்ஸ். Archived from the original on 2009-02-17. பார்க்கப்பட்ட நாள் 7 பெப்ரவரி 2010. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |= ignored (help)
  5. John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 108
  6. 6.0 6.1 6.2 6.3 "No. 29972". இலண்டன் கசெட். 6 March 1917. p. 2252.