ஏ. செல்லக்குமார்

இந்திய அரசியல்வாதி
(ஏ. செல்லகுமார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

டாக்டர் ஏ. செல்லகுமார் (Dr. A. Chellakumar) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டு சட்டமன்ற அண்ணாநகர், தியாகராய நகர் ஆகிய தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவராவார்.

தொழில்

தொகு

செல்லகுமார் சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவராவார். மருத்துவம் படித்த இவர் மருத்துவராகவும் தனியார் நிறுவனங்களில் முகவராகவும் தொழில் செய்துவருகிறார்.

அரசியில் வரலாறு

தொகு

ஏ. செல்லகுமார் காங்கிரசு கட்சியில் மாநில காங்கிரசு தலைவர், மாநில இளைஞர் காங்கிரசு தலைவர், கோவா மாநில காங்கிரசு பொறுப்பாளரார் போன்ற பதவிகளை வகித்துள்ளார். தற்போது அகில இந்திய காங்கிரசு கமிட்டி பொதுச் செயலாளராக உள்ளார். முதன்முதலில் இவர் 1991 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாக அண்ணாநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1]

1996இல் இந்திய தேசிய காங்கிரசு கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக)  கட்சியுடன் கூட்டணி சேர்ந்தபோது தமிழ்நாட்டில் காங்கிரசு கட்சி பிளவுற்றது. அதிருப்தியாளர்கள் ஜி. கே. மூப்பனாரின் தலைமையில் கட்சியை விட்டு விலகி தமிழ் மாநில காங்கிரசு கட்சியை உருவாக்கினர். அப்போது காங்கிரசில் இருந்து வெளியேறிய செல்லகுமார் 1996 தேர்தலில் தமிழ் மாநில காங்கிரசு கட்சி சார்பாக தியாகராய நகர் தொகுதியில்,  போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[2] பிறகு 2001 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு இரண்டாமிடம் பெற்று தோல்வியடைந்தார். மீண்டும் 2011 தேர்தலில் தியாகராய நகர் தொகுதியில், இந்திய தேசிய காங்கிரசு சார்பாக, போட்டியிட்டு இரண்டாமிடம் பெற்று தோல்வியடைந்தார்.[3].[4][5]

2013 ஆம் ஆண்டு இரண்டு கட்சிகளும் இணைந்த பின்னர், தமிழ்நாடு அகில இந்திய காங்கிரசு கமிட்டியின் மூன்று செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.[6] 2014 பொதுத் தேர்தலில், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு, நான்காமிடம் பெற்று தோல்வியடைந்தார்.

பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், மீண்டும் கிருஷ்ணகிரி தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-17.
  2. "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
  3. "Ready to vote? Meet The Players". The Times of India. 11 April 2011 இம் மூலத்தில் இருந்து 2019-03-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190328143955/http://epaper.timesofindia.com/Repository/getFiles.asp?Style=OliveXLib%3ALowLevelEntityToPrint_TOINEW&Type=text%2Fhtml&Locale=english-skin-custom&Path=TOICH%2F2011%2F04%2F11&ID=Ar00401. பார்த்த நாள்: 2017-05-10. 
  4. "Statistical Report on General Election 2001 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-05-10.
  5. "Statistical Report on General Election 2011 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2017-05-10.
  6. "Congress rewards leaders who belong to no faction". The Hindu. 18 June 2013. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/congress-rewards-leaders-who-belong-to-no-faction/article4825241.ece. பார்த்த நாள்: 2017-05-10. 
  7. "நாடாளுமன்ற தேர்தல் முடிவு- கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி". Archived from the original on 2019-05-27. பார்க்கப்பட்ட நாள் 2019-05-27.மாலைமலர் (மே 24, 2019)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._செல்லக்குமார்&oldid=3996841" இலிருந்து மீள்விக்கப்பட்டது