ஏ. பி. ராமன் (பிறப்பு: அக்டோபர் 5, 1932) தமிழ்நாட்டில் பிறந்த இவர் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்து அங்கேயே வசித்து வருகின்றார்.

பதவிகள்

தொகு

இவர் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினராவார்.

இலக்கியப் பணி

தொகு

ஏபிஆர், கமலா ராமன், பட்டு, ராம்ஜி ஆகிய புனைப்பெயர்களில் எழுதிவரும் இவரின் முதல் ஆக்கம் 1952ல் பிரசுரமானது. இதனையடுத்து கோலாலம்பூரில் பி.பி. நாராயணனைத் தலைவராகக் கொண்ட தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் ‘சங்கமணி' வார இதழில் கதை, கட்டுரைகளை இவர் அதிகமாக எழுதினார்.

மலாயா நண்பன் பத்திரிகையிலும், சிங்கப்பூர் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவிலும் பணியாற்றிய இவர் கலைமலர் மாத இதழின் ஆசிரியராகவும், புதுயுகம் வார இதழின் துணையாசிரியராகவும் கடமை புரிந்தார். சிங்கை, மலேசிய வானொலிகளில் பல தொடர் நாடகங்களை எழுதியுள்ளார். இவரின் 50க்கும் மேற்பட்ட சிறுகதைகள் 'முல்லைச்சரம்' இதழில் பிரசுரமாகியுள்ளன. 'இம்மாத இந்தியா' எனும் தலைப்பில் அரசியல் கட்டுரைகளைத் தொடர்ச்சியாக எழுதி வந்த இவர் சாவி வார இதழுக்காக சிங்கப்பூர்ச் சிறப்பிதழைத் தயாரித்து வழங்கினார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மாமி சின்ன மாமி’ எனும் 13 வார நகைச்சுவைத் தொடரை எழுதிய இவர் சூப்பர் சினிமா 200 எனும் 52 வாரத் தொரை ராஜ் தொலைக்காட்சிக்காக தயாரித்தவருமாவார்.

எழுதியுள்ள நூல்கள்

தொகு
  • சிங்கப்பூர் கையேடு
  • தமிழ் சினிமா 2000

உசாத்துணை

தொகு
  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._பி._ராமன்&oldid=4163754" இலிருந்து மீள்விக்கப்பட்டது